ஞானசார தேரர் மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் முன்னிலை.!
பொதுபல சேனா அமைப்பின் பொதுச் செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரர், மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்டுள்ளார்.
தேரருக்கு எதிராக நிலுவையில் இருந்த திறந்த பிடியாணையின் அடிப்படையில் அவர் கைது செய்யப்பட்டிருந்த நிலையில், இன்று மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்டுள்ளார்.