இலங்கை கிரிக்கெட் அணிக்கு பாகிஸ்தானில் உற்சாக வரவேற்பு
பாகிஸ்தானுக்கு எதிரான T20 தொடரில் பங்கேற்பதற்காக அந்தநாட்டை சென்றடைந்த இலங்கை T20 கிரிக்கெட் அணிக்கு இஸ்லாமாபாத்தில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டுள்ளது.
இலங்கை அணி இஸ்லாமாபாத் வானூர்தி நிலையத்தை சென்றடைந்தபோது, பாகிஸ்தான் கிரிக்கெட் சபையின் மூத்த அதிகாரிகள் அவர்களை வரவேற்றனர்.
அத்துடன், இலங்கை அணியின் பாதுகாப்பை உறுதி செய்ய வானூர்தி நிலையத்திலிருந்து விசேட பாதுகாப்பு ஏற்பாடுகளும் செய்யப்பட்டிருந்தன.
இரு அணிகளுக்கும் இடையிலான T20 தொடர் எதிர்வரும் நாட்களில் ஆரம்பிக்கவுள்ளது.