உள்ளடக்கத்திற்குச் செல்க
நவம்பர் 2026
23 திங்கள்
4210 பேர் இப்போது பார்க்கின்றனர்

நாமல் எம்.பிக்கு பிணை வழங்காது சிறையில் அடைத்து வைப்பது அநீதி.!

இலங்கை செய்திகள் 2 மாதங்கள் முன்
117 பார்வைகள்

நாமல் ராஜபக்ஷ கைது செய்யப்பட்டமை குறித்துப் பேசாமல் இந்த நாட்டின் சட்டம் மற்றும் நீதி குறித்துப் பேச முடியாது என்று ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் பொதுச் செயலாளர் சாகர காரியவசம் தெரிவித்தார்.

ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவிக்கும்போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,
“சுமார் 13 வருடங்களுக்கு முன்னர் இடம்பெற்ற சம்பவம் தொடர்பிலேயே நாமல் ராஜபக்ஷ கைது செய்யப்பட்டுள்ளார்.

ஆஸ்திரேலியாவில் இருந்த ஒருவரிடம் வாக்குமூலம் பெறப்பட்டு, அவரது கூற்றின் அடிப்படையில் இலஞ்ச, ஊழல் பற்றிய விசாரணை ஆணைக்குழுவின் பணிப்பாளர் நாயகம் நடவடிக்கை எடுத்துள்ளார்.

நாமல் ராஜபக்ஷவுக்கு பிணை வழங்க முடியாத வகையில் அவரைச் சிறையில் வைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

நாமல் ராஜபக்ஷ குற்றமற்றவர் என்று நான் கூறவில்லை. சட்டத்தை நடைமுறைப்படுத்துவதற்கு முறையான நடைமுறைகள் உள்ளன. விசாரணை நடத்தி, குற்றச்சாட்டை நிரூபித்துக் குற்றப்பத்திரிகை வழங்கிய பின்னரே நீதிமன்ற விசாரணைகள் மூலம் தண்டனை வழங்கப்பட வேண்டும். ஆனால், குற்றப்பத்திரிகையோ நீதிமன்ற விசாரணையோ இன்றி அவர் சிறையில் தடுத்து வைக்கப்பட்டுள்ளமை அநீதியானது.

இன்று நாமல் ராஜபக்ஷவுக்கு இழைக்கப்படும் இந்த அநீதி, நாளை பௌத்த பிக்குகளுக்கோ அல்லது சாதாரண பிரஜைகளின் இளம் பிள்ளைகளுக்கோ இழைக்கப்படாது என்பதற்கு என்ன உத்தரவாதம் உள்ளது?

நாட்டின் சட்டத்தையும் பிரஜைகளின் உரிமைகளையும் பாதுகாப்பதற்காக அனைத்துப் பிரஜைகளும் ஒன்றிணைந்து குரல் கொடுக்க வேண்டும்.” – என்றார்.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

விளம்பரம்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

கோப்பாய் மாவீரர் துயிலுமில்லம் முன்பாக மாவீரர் நினைவாலயம் திறந்து வைப்பு!

கோப்பாய் மாவீரர் துயிலுமில்லம் முன்பாக மாவீரர்களின் திருவுருவப் படங்கள் மற்றும் பெயர்கள் பொறிக்கப்பட்ட நினைவாலயம் இன்று திறந்து வைக்கப்பட்டுள்ளது. பொதுச்சுடர் ஏற்றப்பட்டு, மலர்வணக்கம் செலுத்தப்பட்டதைத் தொடர்ந்து மக்கள்…

159 0 0
இலங்கை செய்திகள்

யாழ்ப்பாணம் பண்ணைப் பகுதியில் விபத்து!

யாழ்ப்பாணம் பண்ணை சுற்றுவட்டப் பகுதியில் இன்று (22) இரவு 7 மணியளவில் கட்டுப்பாட்டை இழந்த சிறிய ரக மகிழுந்து ஒன்று, வீதியோரத்தில் நிறுத்தப்பட்டிருந்த 10 இற்கும் மேற்பட்ட…

147 0 0
இலங்கை செய்திகள்

கூகுள் வரைபடத்தை அடிப்படையாகக் கொண்டு அபகரிக்கப்பட்ட காணிகளை மக்களுக்கு மீள வழங்க வேண்டும்!

வடக்கு மாகாணத்தில் வனப் பாதுகாப்புத் திணைக்களம், வனஜீவராசிகள் திணைக்களம் மற்றும் தொல்பொருள் திணைக்களம் ஆகிய அரச நிறுவனங்களின் வசமுள்ள காணிகளை மக்களுக்கு விடுவிக்க நடவடிக்கை எடுக்குமாறு ஈ.பி.டி.பி.…

138 0 0
இலங்கை செய்திகள்

மழையை நம்பி மேற்கொள்ளப்பட்ட காலபோக நெற்ச்செய்கை மழையின்மையால் பாதிப்பு

கிளிநொச்சி மாவட்டத்தில் 2026 /.2027 ஆம் ஆண்டுக்கான பெரும் போகநெற்செய்கை கொள்ளப்பட்டுள்ள நிலையில் கிளிநொச்சி நெத்தலியாறு பகுதியில் மழையை நம்பி நெற்செய்கை மேற்கொண்ட விவசாயிகள் பாதிக்கப்பட்டுள்ளனர். விவசாய…

137 0 0