முத்தரப்பு ஒருநாள் கிரிக்கெட் தொடருக்கான இலங்கை அணி அறிவிப்பு!
பாகிஸ்தானில் நடைபெறவுள்ள, பாகிஸ்தான் மற்றும் இங்கிலாந்து அணிகள் பங்கேற்கும் முத்தரப்பு ஒருநாள் சர்வதேச (ODI) கிரிக்கெட் தொடருக்கான 16 பேர் கொண்ட இலங்கை அணியை இலங்கை கிரிக்கெட் சபை அறிவித்துள்ளது.
இந்த தொடரில் இலங்கை அணியின் தலைவராக குசல் மெண்டிஸ் நியமிக்கப்பட்டுள்ளார். அதேவேளை, ஆரம்பத் துடுப்பாட்ட வீரர் பெதும் நிஸ்ஸங்க மருத்துவப் பரிசோதனையின் ஒப்புதலுக்கு உட்பட்டே அணியில் சேர்க்கப்பட்டுள்ளார்.
அவர் முழுமையான உடற்தகுதியைப் பெற்றால் மட்டுமே அணியுடன் பயணிப்பார் என இலங்கை கிரிக்கெட் சபை தெரிவித்துள்ளது.
பாகிஸ்தானுக்கு எதிரான இருபதுக்கு 20 தொடர் நிறைவடைந்ததை தொடர்ந்து இந்த முத்தரப்பு ஒருநாள் தொடர் ஆரம்பமாகவுள்ளது.