உள்ளடக்கத்திற்குச் செல்க
அக்டோபர் 2026
8 வியாழன்
842 பேர் இப்போது பார்க்கின்றனர்

மாகாணசபைத் தேர்தல் நடத்தப்பட்டால் 9 மாகாணங்களிலும் அரசு மண்ணைக் கவ்வும்!

இலங்கை செய்திகள் 4 நாட்கள் முன்
75 பார்வைகள்

மாகாணசபைத் தேர்தல் நடத்தப்பட்டால் நாட்டின் ஒன்பது மாகாணங்களிலும் தற்போதைய அரசு தோல்வியடைந்து மண்கவ்வுவது உறுதி என்று ஐக்கிய தேசியக் கட்சியின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரும் தொழிற்சங்கத் தலைவருமான சமன் ரத்னப்பிரிய தெரிவித்தார்.

இது தொடர்பில் ஊடகங்களிடம் அவர் மேலும் கூறுகையில்,

“அரசுக்கு ஈராண்டு, நாட்டுக்கு மாட்சி எனத் தேசிய மக்கள் சக்தியினர் பிரசாரம் முன்னெடுத்து வருகின்றனர். ஆனால், நாட்டுக்கு என்ன மாட்சி ஏற்பட்டுள்ளது என்பது தெரியவில்லை. தற்போது வாழ்க்கைச் சுமை அதிகரித்துள்ளதுடன், பொருள்களின் விலைகளும் விசேடமாக எகிறியுள்ளன.

ஆளுங்கட்சியினருக்கு வேண்டுமென்றால் இந்த ஆட்சி சிறப்பாக இருக்கலாம். ஆனால் மக்களுக்கு அது சிறப்புடையதாக இல்லை. அரசு நல்லவற்றைக் செய்திருந்தால், எதற்காக ‘அரசு நல்லதா?’ என நாடளாவிய ரீதியில் கூட்டங்களை நடத்தி மக்களிடம் கேட்க வேண்டும்?

எனவே, மாகாண சபைத் தேர்தல் நடத்தப்பட்டால் இந்த அரசு 9 மாகாணங்களிலும் தோல்வியடைவது நூற்றுக்கு நூறு சதவீதம் உறுதியாகும்.” – என்றார்.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

மக்களைத் துன்புறுத்த வெட்கம் இல்லையா?

கொழும்பு – செட்டியார் தெருவில் போராட்டம் நடத்தியவர்கள் மீதான பொலிஸாரின் தாக்குதல்களையும் கைது நடவடிக்கைகளையும் அரசு உடனடியாக நிறுத்த வேண்டும் என்று தமிழ் முற்போக்குக் கூட்டணியின் தலைவரும்…

73 0 0
இலங்கை செய்திகள்

யாழ். மாநகர சபையில் கடும் அமளி துமளி; திலீபன் சிலை அகற்றம் விவகாரத்தில் மோதிக்கொண்ட உறுப்பினர்கள்.!

தியாக தீபம் திலீபனின் பிரதான நினைவுத் தூபியில் வைக்கப்பட்டிருந்த திலீபனின் சிலை அகற்றப்பட்ட விவகாரம் தொடர்பாக நேற்று நடைபெற்ற யாழ்ப்பாணம் மாநகர சபை அமர்வில் கடும் அமளி…

31 0 0
இலங்கை செய்திகள்

துறவற ஆடையை அகற்ற முடியாது.!

மதத் தலைவர்களின் கௌரவத்துக்குப் பாதிப்பை ஏற்படுத்தும் செயற்பாடுகளைத் தவிர்க்குமாறு கோரியுள்ள எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச, தற்போதைய அரசு விவசாயிகளைப் பாதுகாக்கத் தவறிவிட்டு வெற்றுப் பொய் அரசியலில்…

44 0 0
இலங்கை செய்திகள்

அடையாளம் காண உதவுமாறு பொது மக்களிடம் வேண்டுகோள்

சட@லத்தை அடையாளம் காண உதவுமாறு நுவரெலியா மாவட்ட பொலிஸார் பொது மக்களிடம் வேண்டுகோள் விடுத்துள்ளனர் 2026 ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் 06 ஆம் திகதியன்று இனம்…

84 0 0