உள்ளடக்கத்திற்குச் செல்க
அக்டோபர் 2026
8 வியாழன்
842 பேர் இப்போது பார்க்கின்றனர்

யாழில் திலீபனின் திருவுருவச் சிலை அகற்றப்பட்டமையைக் கண்டித்து பிரித்தானியாவில் போராட்டம்!

இலங்கை செய்திகள் 4 நாட்கள் முன்
120 பார்வைகள்

தியாக தீபம் திலீபனின் திருவுருவச் சிலை அகற்றப்பட்டதைக் கண்டித்தும், அகற்றப்பட்ட சிலையை மீளவும் அதே இடத்தில் நிறுவக் கோரியும் மாபெரும் கண்டனப் போராட்டம் ஒன்று பிரித்தானியாவில் இடம்பெற்றது.

பிரித்தானிய பிரதமரின் காரியாலயத்திற்கு முன்பாக 3 மணிக்கு ஆரம்பமான குறித்த போராட்டம், வெளிவிவகார அமைச்சகம் வரை சென்று முடிவடைந்திருந்தது.

தியாக தீபம் திலீபனின் நினைவை அவமதிக்கும் வகையிலான நடவடிக்கைகளைக் கண்டித்தும், தமிழர்களின் அடிப்படை உரிமைகள் மற்றும் நீதிக்கான கோரிக்கைகளை உலகிற்கு எடுத்துரைக்கும் வகையிலும் இந்தப் போராட்டம் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

தமிழீழ சுயநிர்ணய அமைப்பின் ஏற்பாட்டில் இடம்பெற்ற இக்கண்டனப் போராட்டத்தில் தேசிய உணர்வாளர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டு தங்களது எதிர்ப்பை வெளிப்படுத்தியிருந்தனர்.

போராட்டத்தின் போது, திலீபனின் திருவுருவச் சிலையை மீளவும் நிறுவ வேண்டும் என்றும், தமிழர்களின் உரிமைகள் பாதுகாக்கப்பட வேண்டும் என்றும் வலியுறுத்தப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

மன்னார் மாவட்ட விவசாய குழுக் கூட்டம்; பல தீர்மானங்கள் நிறைவேற்றம்.!

மன்னார் மாவட்ட விவசாய குழுக் கூட்டம் நேற்று புதன்கிழமை (7) மாலை மன்னார் மாவட்ட அரசாங்க அதிபர் க.கனகேஸ்வரன் தலைமையில் உயிலங்குளத்தில் இடம்பெற்றது. மன்னார் மாவட்டத்தின் முக்கிய…

44 0 0
இலங்கை செய்திகள்

தேசிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் கைது.!

தேசிய மக்கள் சக்தியின் கொழும்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சந்தன சூரியஆரச்சி அத்துருகிரிய பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார். பனாகொடை பகுதியில் நேற்று (07) இரவு இடம்பெற்ற விபத்து…

67 0 0
இலங்கை செய்திகள்

மக்களைத் துன்புறுத்த வெட்கம் இல்லையா?

கொழும்பு – செட்டியார் தெருவில் போராட்டம் நடத்தியவர்கள் மீதான பொலிஸாரின் தாக்குதல்களையும் கைது நடவடிக்கைகளையும் அரசு உடனடியாக நிறுத்த வேண்டும் என்று தமிழ் முற்போக்குக் கூட்டணியின் தலைவரும்…

75 0 0
இலங்கை செய்திகள்

யாழ். மாநகர சபையில் கடும் அமளி துமளி; திலீபன் சிலை அகற்றம் விவகாரத்தில் மோதிக்கொண்ட உறுப்பினர்கள்.!

தியாக தீபம் திலீபனின் பிரதான நினைவுத் தூபியில் வைக்கப்பட்டிருந்த திலீபனின் சிலை அகற்றப்பட்ட விவகாரம் தொடர்பாக நேற்று நடைபெற்ற யாழ்ப்பாணம் மாநகர சபை அமர்வில் கடும் அமளி…

33 0 0