உள்ளடக்கத்திற்குச் செல்க
அக்டோபர் 2026
8 வியாழன்
842 பேர் இப்போது பார்க்கின்றனர்

இளம் யுவதிகளை வலுவூட்டும் கருத்தரங்கு அக்கரைப்பத்தனையில் நடைபெற்றது

இலங்கை செய்திகள் 4 நாட்கள் முன்
95 பார்வைகள்

அக்கரைப்பத்தனை, சமூக மேம்பாட்டு நிலையம் மற்றும் இளம் யுவதிகள் கிறிஸ்தவ மத்திய நிலையம் ஆகியவை இணைந்து, இளம் யுவதிகளை வலுவூட்டும் நோக்கில் பெண்களின் உரிமைகள், பாலின சமத்துவம் மற்றும் பாலியல் துன்புறுத்தல்களுக்கு எதிரான விழிப்புணர்வு கருத்தரங்கை ஏற்பாடு செய்திருந்தன.

இந்த கருத்தரங்கு இன்றைய தினம்.அக்ரபத்தனை மன்றாசியில் உள்ள நிசாந்தினி மண்டபத்தில் நடைபெற்றதுடன், இந் நிகழ்வின் அதிதிகளாக அக்கரப்பத்தனை பொலிஸ் நிலைய அதிகாரிகள் மற்றும் ஹோல்புறூக் பிரதேச கிராம அதிகாரி, சமூக மேம்பாட்டு நிலையத்தின் நிறைவேற்றுப் பனிப்பாளர், இளம் பெண்கள் கிறிஸ்தவ மத்திய நிலையத்தின் நிகழ்ச்சி இணைப்பாளர் மற்றும் அதிகாரிகள் கலந்துக் கொண்டனர்.

நிகழ்வில் டயகம மற்றும் அக்கரப்பத்தனை பிரதேசங்களைச் சேர்ந்த சுமார் 35 இளம் யுவதிகள் கலந்து கொண்டனர். மலையகத்தில் வாழும் இளம் யுவதிகள் எதிர்கொள்ளும் பல்வேறு சமூகப் பிரச்சினைகள், அவர்களின் உரிமைகள், பாலின சமத்துவம், பாலியல் துன்புறுத்தல்களில் இருந்து பாதுகாப்பு மற்றும் எதிர்காலத்தில் அவர்கள் எதிர்கொள்ள வேண்டிய சவால்கள் தொடர்பாக இந்நிகழ்வில் விரிவாகக் கலந்துரையாடப்பட்டது.

மேலும், மலையக இளம் பெண்களின் எதிர்காலத்தை மேம்படுத்துவதற்கான திட்டங்கள் மற்றும் செயற்பாடுகளை அடையாளம் கண்டு, அவற்றை அடிப்படையாகக் கொண்டு எதிர்காலத் திட்டமிடலை உருவாக்கும் நோக்கிலும் இந்தக் கருத்தரங்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

இளம் யுவதிகள் தங்களது உரிமைகள் மற்றும் எதிர்காலம் தொடர்பில் தெளிவான புரிதலைப் பெற்றுக்கொள்வதுடன், சமூகத்தில் அவர்களின் பங்களிப்பை மேலும் வலுப்படுத்துவதற்கான ஒரு முக்கிய தளமாகவும் இந்தநிகழ்வு அமைந்திருந்தது.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

மன்னார் மாவட்ட விவசாய குழுக் கூட்டம்; பல தீர்மானங்கள் நிறைவேற்றம்.!

மன்னார் மாவட்ட விவசாய குழுக் கூட்டம் நேற்று புதன்கிழமை (7) மாலை மன்னார் மாவட்ட அரசாங்க அதிபர் க.கனகேஸ்வரன் தலைமையில் உயிலங்குளத்தில் இடம்பெற்றது. மன்னார் மாவட்டத்தின் முக்கிய…

45 0 0
இலங்கை செய்திகள்

தேசிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் கைது.!

தேசிய மக்கள் சக்தியின் கொழும்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சந்தன சூரியஆரச்சி அத்துருகிரிய பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார். பனாகொடை பகுதியில் நேற்று (07) இரவு இடம்பெற்ற விபத்து…

69 0 0
இலங்கை செய்திகள்

மக்களைத் துன்புறுத்த வெட்கம் இல்லையா?

கொழும்பு – செட்டியார் தெருவில் போராட்டம் நடத்தியவர்கள் மீதான பொலிஸாரின் தாக்குதல்களையும் கைது நடவடிக்கைகளையும் அரசு உடனடியாக நிறுத்த வேண்டும் என்று தமிழ் முற்போக்குக் கூட்டணியின் தலைவரும்…

76 0 0
இலங்கை செய்திகள்

யாழ். மாநகர சபையில் கடும் அமளி துமளி; திலீபன் சிலை அகற்றம் விவகாரத்தில் மோதிக்கொண்ட உறுப்பினர்கள்.!

தியாக தீபம் திலீபனின் பிரதான நினைவுத் தூபியில் வைக்கப்பட்டிருந்த திலீபனின் சிலை அகற்றப்பட்ட விவகாரம் தொடர்பாக நேற்று நடைபெற்ற யாழ்ப்பாணம் மாநகர சபை அமர்வில் கடும் அமளி…

34 0 0