உள்ளடக்கத்திற்குச் செல்க
அக்டோபர் 2026
8 வியாழன்
842 பேர் இப்போது பார்க்கின்றனர்

அரசின் புதுப்பிக்கத்தக்க வலுச்சக்தி அழிப்புக் கொள்கை குறித்து ஐ.எம்.எஃப் பிரதிநிதியிடம் சஜித் சுட்டிக்காட்டல்

இலங்கை செய்திகள் 4 நாட்கள் முன்
85 பார்வைகள்

தற்போதைய அரசு புதுப்பிக்கத்தக்க வலுச்சக்தியை இல்லாதொழிக்கும் வகையில் முன்னெடுத்து வரும் கொள்கைகள் குறித்து எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ, சர்வதேச நாணய நிதியத்தின் இலங்கைக்கான வதிவிடப் பிரதிநிதி டாக்டர் மார்த்தா டெஸ்பாயே வோல்டெமைக்கேலை நேற்று சந்தித்துத் தெளிவுபடுத்தினார்.

நிலைபேறான வலுச்சக்தி மற்றும் சூரிய சக்தியை அழித்தொழிக்கும் பல கொள்கைகளைத் தற்போதைய அரசு நடைமுறைப்படுத்தி வருகின்றது என்று எதிர்க்கட்சித் தலைவர் தெரிவித்தார். சூரிய சக்தியின் ஊடாக நுகர்வோருக்குக் குறைந்த விலையில் மின்சாரத்தைப் பெற்றுக் கொடுப்பதும், இளைஞர்களைத் தொழில்முனைவோராக உருவாக்குவதும் இதனால் பாதிக்கப்படுகின்றது என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.

கூரையின் மீதான சூரிய சக்தி அமைப்புகள் ஊடாக தேசிய மின் வலையமைப்புக்கு 2 ஆயிரத்து 500 மெகாவாட் இணைக்கப்படுவதன் மூலம் மாதமொன்றுக்கு 25 பில்லியன் ரூபா நாட்டுக்குச் சேமிக்கப்படுகின்றது. இவ்வாறான சாதகமான சூழல் காணப்பட்ட போதிலும், டீசல் மாபியா கும்பல் அதனைப் பிரபல்யப்படுத்தத் தீவிர முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றது என்றும் அவர் கூறினார்.

எல்.என்.ஜி. மற்றும் டீசல் கலப்புடன் மின்சாரத்தை உற்பத்தி செய்வதற்குப் பதிலாக, எரிபொருள் மற்றும் டீசல் மாபியாவின் நிகழ்ச்சி நிரலை நடைமுறைப்படுத்த முயற்சிகள் மேற்கொள்ளப்படுகின்றன என்றும் அவர் தெரிவித்தார்.

220 இலட்சம் மக்கள் சார்பாக இதற்கு இடமளிக்கப் போவதில்லை என்றும், 70 சதவீத புதுப்பிக்கத்தக்க வலுச்சக்தியுடன் மட்டுப்படுத்தாமல், 100 சதவீத புதுப்பிக்கத்தக்க வலுச்சக்தி இலக்கை நோக்கிச் செல்ல அரசுக்கு அழுத்தம் கொடுப்போம் என்றும் தெரிவித்த அவர், இதற்காக உச்சபட்ச ஜனநாயக ரீதியிலான போராட்டங்கள் முன்னெடுக்கப்படும் என்றும் எச்சரித்தார்.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

மன்னார் மாவட்ட விவசாய குழுக் கூட்டம்; பல தீர்மானங்கள் நிறைவேற்றம்.!

மன்னார் மாவட்ட விவசாய குழுக் கூட்டம் நேற்று புதன்கிழமை (7) மாலை மன்னார் மாவட்ட அரசாங்க அதிபர் க.கனகேஸ்வரன் தலைமையில் உயிலங்குளத்தில் இடம்பெற்றது. மன்னார் மாவட்டத்தின் முக்கிய…

44 0 0
இலங்கை செய்திகள்

தேசிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் கைது.!

தேசிய மக்கள் சக்தியின் கொழும்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சந்தன சூரியஆரச்சி அத்துருகிரிய பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார். பனாகொடை பகுதியில் நேற்று (07) இரவு இடம்பெற்ற விபத்து…

67 0 0
இலங்கை செய்திகள்

மக்களைத் துன்புறுத்த வெட்கம் இல்லையா?

கொழும்பு – செட்டியார் தெருவில் போராட்டம் நடத்தியவர்கள் மீதான பொலிஸாரின் தாக்குதல்களையும் கைது நடவடிக்கைகளையும் அரசு உடனடியாக நிறுத்த வேண்டும் என்று தமிழ் முற்போக்குக் கூட்டணியின் தலைவரும்…

75 0 0
இலங்கை செய்திகள்

யாழ். மாநகர சபையில் கடும் அமளி துமளி; திலீபன் சிலை அகற்றம் விவகாரத்தில் மோதிக்கொண்ட உறுப்பினர்கள்.!

தியாக தீபம் திலீபனின் பிரதான நினைவுத் தூபியில் வைக்கப்பட்டிருந்த திலீபனின் சிலை அகற்றப்பட்ட விவகாரம் தொடர்பாக நேற்று நடைபெற்ற யாழ்ப்பாணம் மாநகர சபை அமர்வில் கடும் அமளி…

33 0 0