உள்ளடக்கத்திற்குச் செல்க
அக்டோபர் 2026
8 வியாழன்
842 பேர் இப்போது பார்க்கின்றனர்

மாகாண சபைத் தேர்தலை காலம் தாழ்த்தும் செயற்குழு : சஜித் அணி ஆவேசம்!!

இலங்கை செய்திகள் 4 நாட்கள் முன்
81 பார்வைகள்

மாகாண சபைத் தேர்தலைத் தொடர்ச்சியாகப் பிற்போடும் செயற்பாடுகளையே நாடாளுமன்ற விசேட செயற்குழு முன்னெடுத்து வருகின்றது என்று ஐக்கிய மக்கள் சக்தியின் பொதுச்செயலாளர் ரஞ்சித் மத்தும பண்டார எம்.பி. தெரிவித்தார்.

மாகாண சபைத் தேர்தலை எந்தத் தேர்தல் முறைமையின் கீழ் நடத்தலாம் என்பது தொடர்பில் ஆராய்வதற்காக நியமிக்கப்பட்ட நாடாளுமன்ற விசேட செயற்குழு குறித்து ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவிக்கும்போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அவர் அங்கு மேலும் தெரிவிக்கையில்,

“மாகாண சபைத் தேர்தலை எந்தத் தேர்தல் முறைமையில் நடத்தலாம் என்ற சட்டச் சிக்கலுக்குத் தீர்வு காண்பதற்காகவே நாடாளுமன்றத்தில் விசேட செயற்குழு ஒன்று நியமிக்கப்பட்டது. ஆனால், இந்தக் குழுவின் செயற்பாடுகள் இதுவரை காலமும் முன்னேற்றகரமான எந்தத் தீர்மானத்தையும் எடுக்கவில்லை.

செயற்குழுவின் காலம் மாத்திரம் எதிர்வரும் டிசம்பர் மாதம் 17 ஆம் திகதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளதுடன், காலத்தை இழுத்தடிக்கும் செயற்பாடுகளே மாத்திரம் இடம்பெற்று வருகின்றன.

நாடாளுமன்ற உறுப்பினர் இரா. சாணக்கியன் முன்வைத்த பழைய தேர்தல் முறைமையின் கீழ் மாகாண சபைத் தேர்தலை நடத்தும் வகையிலான தனிநபர் பிரேரணை தொடர்பில் சட்டமா அதிபர் திணைக்களம் மற்றும் தேர்தல்கள் ஆணைக்குழு முன்வைத்த சாதகமான பரிந்துரைகளை அரசு கவனத்திற்கொள்ளவில்லை.

நடைமுறையில் காணப்படும் சட்டச் சிக்கல்களுக்குத் தீர்வு காண்பதை விடுத்து, செயற்குழுவில் அங்கம் வகிக்கும் ஆளுந்தரப்பினர் நெருக்கடிகளை மேலும் உருவாக்கும் வகையிலான யோசனைகளையே முன்வைத்துள்ளனர். இளைஞர் பிரதிநிதித்துவம், விசேட தேவையுடையவர்களுக்கான பிரதிநிதித்துவம் எனப் புதிதாக முரண்பாடுகள் தோற்றம் பெறும் வகையிலான யோசனைகளே அங்கு முன்வைக்கப்பட்டுள்ளன.

எனவே, மாகாண சபைத் தேர்தலைத் தொடர்ச்சியாகப் பிற்போடும் செயற்பாடுகளையே இந்த விசேட செயற்குழு முன்னெடுத்து வருகின்றது. பழைய தேர்தல் முறைமையில் மாகாண சபைத் தேர்தலை நடத்தும் யோசனையை அரசு நாடாளுமன்றத்துக்குக் கொண்டுவந்தால், அதற்கு எமது தரப்பிலிருந்து நிபந்தனையற்ற வகையில் முழுமையான ஒத்துழைப்பு வழங்கப்படும்.” – என்றார்.
…………………………….

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

மன்னார் மாவட்ட விவசாய குழுக் கூட்டம்; பல தீர்மானங்கள் நிறைவேற்றம்.!

மன்னார் மாவட்ட விவசாய குழுக் கூட்டம் நேற்று புதன்கிழமை (7) மாலை மன்னார் மாவட்ட அரசாங்க அதிபர் க.கனகேஸ்வரன் தலைமையில் உயிலங்குளத்தில் இடம்பெற்றது. மன்னார் மாவட்டத்தின் முக்கிய…

45 0 0
இலங்கை செய்திகள்

தேசிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் கைது.!

தேசிய மக்கள் சக்தியின் கொழும்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சந்தன சூரியஆரச்சி அத்துருகிரிய பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார். பனாகொடை பகுதியில் நேற்று (07) இரவு இடம்பெற்ற விபத்து…

69 0 0
இலங்கை செய்திகள்

மக்களைத் துன்புறுத்த வெட்கம் இல்லையா?

கொழும்பு – செட்டியார் தெருவில் போராட்டம் நடத்தியவர்கள் மீதான பொலிஸாரின் தாக்குதல்களையும் கைது நடவடிக்கைகளையும் அரசு உடனடியாக நிறுத்த வேண்டும் என்று தமிழ் முற்போக்குக் கூட்டணியின் தலைவரும்…

76 0 0
இலங்கை செய்திகள்

யாழ். மாநகர சபையில் கடும் அமளி துமளி; திலீபன் சிலை அகற்றம் விவகாரத்தில் மோதிக்கொண்ட உறுப்பினர்கள்.!

தியாக தீபம் திலீபனின் பிரதான நினைவுத் தூபியில் வைக்கப்பட்டிருந்த திலீபனின் சிலை அகற்றப்பட்ட விவகாரம் தொடர்பாக நேற்று நடைபெற்ற யாழ்ப்பாணம் மாநகர சபை அமர்வில் கடும் அமளி…

34 0 0