உள்ளடக்கத்திற்குச் செல்க
அக்டோபர் 2026
4 ஞாயிறு
842 பேர் இப்போது பார்க்கின்றனர்

225 லட்சம் மதிப்புள்ள ஐஸ் போ@தைப்பொருளுடன் இளைஞர் ஒருவர் கைது!

இலங்கை செய்திகள் 6 மணி நேரம் முன்
84 பார்வைகள்

கிரிந்திவெல பகுதியில் கணேமுல்ல பொலிஸாரால் மேற்காள்ளப்பட்ட விசேட நடவடிக்கையின் போது, 225 லட்சம் ரூபா பெறுமதியான ‘ஐஸ்’ போதைப்பொருள் கைப்பற்றப்பட்டுள்ளது.

கிடைத்த இரகசியத் தகவலின் அடிப்படையில் இந்த சோதனை நடத்தப்பட்டது.

இச்சம்பவத்துடன் தொடர்புடையதாக, வாடகை வீட்டில் வசித்து வந்த இளைஞர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதுடன், அவரிடமிருந்து இரண்டு மின்னணு தராசுகள் மற்றும் இரண்டு கைத்தொலைபேசிகளும் பொலிஸாரால் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.

சில நாட்களுக்கு முன்னர் கணேமுல்ல பகுதியில் கைது செய்யப்பட்ட நபரிடம் நடத்தப்பட்ட விசாரணையில் கிடைத்த தகவலின் பேரிலேயே இந்த வீடு சோதனையிடப்பட்டது.

மின்னுவாங்கொட பகுதியைச் சேர்ந்த சந்தேகநபர், கிரிந்திவெல பகுதியில் வீட்டை வாடகைக்கு எடுத்து இந்த போதைப்பொருள் கடத்தலை நடத்தி வந்துள்ளதாக ஆரம்பக்கட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

தற்போது டுபாயில் தலைமறைவாக இருக்கும் போதைப்பொருள் கடத்தல்காரர் ஒருவரால் இந்த போதைப்பொருள் தமக்கு அனுப்பி வைக்கப்பட்டதாக சந்தேகநபர் தெரிவித்துள்ளார்.

மேலதிக விசாரணைகளுக்காக சந்தேகநபரும் கைப்பற்றப்பட்ட போதைப்பொருட்களும் கிரிந்திவெல பொலிஸாரிடம் ஒப்படைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

2027 இல் கடும் மின் தட்டுப்பாடு! – பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு எச்சரிக்கை!!

2027 ஆம் ஆண்டின் முதல் காலாண்டில் நாட்டில் மின்சாரத்திற்கான தட்டுப்பாடு ஏற்படக்கூடும் என பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு எதிர்வுகூறியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பெஸ்ட் எனர்ஜி (First Energy) நிறுவனத்தின்…

78 0 0
இலங்கை செய்திகள்

திருகோணமலை – ஹபரணை பிரதான வீதியில் விபத்து : ஒருவர் உயி@ரிழப்பு!

திருகோணமலை – ஹபரணை பிரதான வீதியின் இன்று (03) நண்பகல் இடம்பெற்ற விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார். சிற்றூந்து ஒன்றும் முச்சக்கரவண்டி ஒன்றும் நேருக்கு நேர் மோதியதில் இந்த…

74 0 0
இலங்கை செய்திகள்

ஹெரோயினுடன் 14 பேர் கைது!

ஹெரோயின் போதைப்பொருளுடன் 14 பேரை ஹிங்குரக்கொடை பொலிஸார் கைது செய்துள்ளனர். ஹிங்குரக்கொடை தலைமையக பொலிஸாரும் ஹிங்குரக்கொடை விமானப்படை அதிகாரிகளும் இணைந்து நேற்று (02) மேற்கொண்ட திடீர் சோதனை…

62 0 0
இலங்கை செய்திகள்

கிழக்கு பல்கலைக்கழக பட்டமளிப்பு விழாவில் திருக்கோவில் கல்வி வலய ஆசிரியர்கள் மூவர் கல்வி முதுமாணி பட்டம் பெற்றனர்

இலங்கை கிழக்கு பல்கலைக்கழகத்தின் பட்டமளிப்பு விழா இன்று (03) நடைபெற்ற நிலையில், திருக்கோவில் கல்வி வலயத்தின் திருக்கோவில் கல்விக் கோட்டத்தில் கடமையாற்றும் ஆசிரியர்கள் மூவர் கல்வி முதுமாணி…

72 0 0