உள்ளடக்கத்திற்குச் செல்க
அக்டோபர் 2026
4 ஞாயிறு
842 பேர் இப்போது பார்க்கின்றனர்

திருகோணமலை – ஹபரணை பிரதான வீதியில் விபத்து : ஒருவர் உயி@ரிழப்பு!

இலங்கை செய்திகள் 7 மணி நேரம் முன்
75 பார்வைகள்

திருகோணமலை – ஹபரணை பிரதான வீதியின் இன்று (03) நண்பகல் இடம்பெற்ற விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

சிற்றூந்து ஒன்றும் முச்சக்கரவண்டி ஒன்றும் நேருக்கு நேர் மோதியதில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளதாக காவல்துறை தெரிவித்துள்ளது.

கந்தளாய் பகுதியில் இருந்து ஹபரணை நோக்கிப் பயணித்த முச்சக்கரவண்டி, கித்துல்உத்துவ பகுதியில் வீதியின் வலதுபுறத்தில் அமைந்துள்ள வர்த்தக நிலையம் ஒன்றுக்குள் செல்வதற்காக திடீரென திரும்பியுள்ளது.

இதன்போது, ஹபரணை பகுதியில் இருந்து வந்த சிற்றூந்து, முச்சக்கரவண்டியுடன் மோதியதில் விபத்து ஏற்பட்டுள்ளதாக காவல்துறை தெரிவித்துள்ளது.

குறித்த விபத்தில் முச்சக்கரவண்டியின் சாரதி உயிரிழந்துள்ளார், அதில் பயணித்த மற்றுமொருவர் காயமடைந்து கந்தளாய் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

உயிரிழந்தவர் கித்துல்உத்துவ பகுதியைச் சேர்ந்தவர் எனவும், சிற்றூந்தில் பயணித்தவர்கள் ஹபரணை பகுதியைச் சேர்ந்தவர்கள் எனவும் காவல்துறை தெரிவித்துள்ளது.

விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை அக்போபுர காவல்துறையின் போக்குவரத்துப் பிரிவு முன்னெடுத்து வருகிறது.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

2027 இல் கடும் மின் தட்டுப்பாடு! – பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு எச்சரிக்கை!!

2027 ஆம் ஆண்டின் முதல் காலாண்டில் நாட்டில் மின்சாரத்திற்கான தட்டுப்பாடு ஏற்படக்கூடும் என பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு எதிர்வுகூறியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பெஸ்ட் எனர்ஜி (First Energy) நிறுவனத்தின்…

79 0 0
இலங்கை செய்திகள்

225 லட்சம் மதிப்புள்ள ஐஸ் போ@தைப்பொருளுடன் இளைஞர் ஒருவர் கைது!

கிரிந்திவெல பகுதியில் கணேமுல்ல பொலிஸாரால் மேற்காள்ளப்பட்ட விசேட நடவடிக்கையின் போது, 225 லட்சம் ரூபா பெறுமதியான ‘ஐஸ்’ போதைப்பொருள் கைப்பற்றப்பட்டுள்ளது. கிடைத்த இரகசியத் தகவலின் அடிப்படையில் இந்த…

84 0 0
இலங்கை செய்திகள்

ஹெரோயினுடன் 14 பேர் கைது!

ஹெரோயின் போதைப்பொருளுடன் 14 பேரை ஹிங்குரக்கொடை பொலிஸார் கைது செய்துள்ளனர். ஹிங்குரக்கொடை தலைமையக பொலிஸாரும் ஹிங்குரக்கொடை விமானப்படை அதிகாரிகளும் இணைந்து நேற்று (02) மேற்கொண்ட திடீர் சோதனை…

63 0 0
இலங்கை செய்திகள்

கிழக்கு பல்கலைக்கழக பட்டமளிப்பு விழாவில் திருக்கோவில் கல்வி வலய ஆசிரியர்கள் மூவர் கல்வி முதுமாணி பட்டம் பெற்றனர்

இலங்கை கிழக்கு பல்கலைக்கழகத்தின் பட்டமளிப்பு விழா இன்று (03) நடைபெற்ற நிலையில், திருக்கோவில் கல்வி வலயத்தின் திருக்கோவில் கல்விக் கோட்டத்தில் கடமையாற்றும் ஆசிரியர்கள் மூவர் கல்வி முதுமாணி…

72 0 0