உள்ளடக்கத்திற்குச் செல்க
அக்டோபர் 2026
4 ஞாயிறு
842 பேர் இப்போது பார்க்கின்றனர்

ஹெரோயினுடன் 14 பேர் கைது!

இலங்கை செய்திகள் 7 மணி நேரம் முன்
63 பார்வைகள்

ஹெரோயின் போதைப்பொருளுடன் 14 பேரை ஹிங்குரக்கொடை பொலிஸார் கைது செய்துள்ளனர்.

ஹிங்குரக்கொடை தலைமையக பொலிஸாரும் ஹிங்குரக்கொடை விமானப்படை அதிகாரிகளும் இணைந்து நேற்று (02) மேற்கொண்ட திடீர் சோதனை நடவடிக்கையின் போதே இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கைது செய்யப்பட்ட சந்தேகநபர்களில் 09 பேர் மின்னேரியா பகுதியையும், மூவர் ஹிங்குரக்கொடை பகுதியையும், இருவர் மெதிரிகிரிய பகுதியையும் சேர்ந்தவர்கள் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இதன்போது அவர்களிடமிருந்து 10 கிராம் 600 மில்லிகிராம் ஹெரோயின் போதைப்பொருளை பொலிஸார் கைப்பற்றியுள்ளனர்.

கைது செய்யப்பட்டவர்களில் ஹெரோயின் போதைப்பொருளுக்கு அடிமையான 13 இளைஞர்கள் அடங்குவதாகவும் பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.

பிரதான சந்தேகநபர் ஹிங்குரக்கொடை, ஹய கணு வபகுதியைச் சேர்ந்தவர் என்பதோடு, அவர் வட்ஸ்அப் மூலமாக நபர்களை இனங்கண்டு ஹெரோயின் விற்பனை செய்து வந்த பாரியளவான கடத்தல்காரர் என பொலிஸாரின் விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

கைது செய்யப்பட்ட சந்தேகநபர்கள் இன்று (03) ஹிங்குரக்கொடை நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படவுள்ளனர்.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

2027 இல் கடும் மின் தட்டுப்பாடு! – பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு எச்சரிக்கை!!

2027 ஆம் ஆண்டின் முதல் காலாண்டில் நாட்டில் மின்சாரத்திற்கான தட்டுப்பாடு ஏற்படக்கூடும் என பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு எதிர்வுகூறியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பெஸ்ட் எனர்ஜி (First Energy) நிறுவனத்தின்…

79 0 0
இலங்கை செய்திகள்

225 லட்சம் மதிப்புள்ள ஐஸ் போ@தைப்பொருளுடன் இளைஞர் ஒருவர் கைது!

கிரிந்திவெல பகுதியில் கணேமுல்ல பொலிஸாரால் மேற்காள்ளப்பட்ட விசேட நடவடிக்கையின் போது, 225 லட்சம் ரூபா பெறுமதியான ‘ஐஸ்’ போதைப்பொருள் கைப்பற்றப்பட்டுள்ளது. கிடைத்த இரகசியத் தகவலின் அடிப்படையில் இந்த…

84 0 0
இலங்கை செய்திகள்

திருகோணமலை – ஹபரணை பிரதான வீதியில் விபத்து : ஒருவர் உயி@ரிழப்பு!

திருகோணமலை – ஹபரணை பிரதான வீதியின் இன்று (03) நண்பகல் இடம்பெற்ற விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார். சிற்றூந்து ஒன்றும் முச்சக்கரவண்டி ஒன்றும் நேருக்கு நேர் மோதியதில் இந்த…

74 0 0
இலங்கை செய்திகள்

கிழக்கு பல்கலைக்கழக பட்டமளிப்பு விழாவில் திருக்கோவில் கல்வி வலய ஆசிரியர்கள் மூவர் கல்வி முதுமாணி பட்டம் பெற்றனர்

இலங்கை கிழக்கு பல்கலைக்கழகத்தின் பட்டமளிப்பு விழா இன்று (03) நடைபெற்ற நிலையில், திருக்கோவில் கல்வி வலயத்தின் திருக்கோவில் கல்விக் கோட்டத்தில் கடமையாற்றும் ஆசிரியர்கள் மூவர் கல்வி முதுமாணி…

72 0 0