உள்ளடக்கத்திற்குச் செல்க
அக்டோபர் 2026
4 ஞாயிறு
842 பேர் இப்போது பார்க்கின்றனர்

ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் சட்டத்தரணிகள் அமைப்பு உருவாக்கம்

இலங்கை செய்திகள் 9 மணி நேரம் முன்
81 பார்வைகள்

ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் விசேட பிரிவாகக் கட்சியின் சட்டத்தரணிகள் அமைப்பு மிகக் குறுகிய காலத்திற்குள் உத்தியோகபூர்வமாக உருவாக்கப்பட்டு, அதன் முதலாவது கட்டக் கலந்தரையாடலும் அறிமுக நிகழ்வும் கட்சியின் தலைவர், பாராளுமன்ற உறுப்பினர் ரவூப் ஹக்கீம் தலைமையில் மருதமுனை மூன் விலேச் ரெஸ்டுரெண்ட் மண்டபத்தில் இன்று(3) நடைபெற்றது.

குறுகிய கால அழைப்பினை ஏற்றுப் பெருமளவிலான சட்டத்தரணிகள், கட்சியின் உயர்மட்ட உறுப்பினர்கள் மற்றும் முக்கியஸ்தர்கள் இந்நிகழ்வில் கலந்துகொண்டனர்.

இந்நிகழ்வில் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் செயலாளர் நாயகம், ஜனாதிபதி சட்டத்தரணி நிஸாம் காரியப்பர், முஸ்லிம் காங்கிரஸின் சட்டத்தரணிகள் அமைப்பின் தலைவர் , முன்னாள் இராஜாங்க அமைச்சரும் பொத்துவில் பிரதேச சபை தவிசாளருமான சட்டத்தரணி எம்.எஸ்.எம். முஷாரஃப், சட்டத்தரணி ஷிபான் மஃரூப், முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர்களான மைஸர் காசிம், மற்றும் பிரதிச் செயலாளர் நாயகம் உள்ளிட்ட பல பிரமுகர்கள் கலந்துகொண்டனர்.

மேலும், சிரேஷ்ட சட்டத்தரணிகளான அன்சார் மௌலானா உட்படப் பல சட்டத்தரணிகள், பிரதேச சபைகளின் தவிசாளர்கள், உறுப்பினர்கள், அமைப்பாளர்கள் மற்றும் கட்சியின் முக்கியஸ்தர்களும் இந்நிகழ்வில் பங்கேற்றிருந்தனர்.

நிகழ்வின் நன்றியுரையைத் தொடர்ந்து, கட்சியின் தலைவர் ரவூப் ஹக்கீம் தலைமையில் சட்டத்தரணிகளுக்கான விசேட கலந்தரையாடலொன்றும் முன்னெடுக்கப்பட்டது. இதன்போது நாட்டின் தற்போதைய சட்ட மற்றும் சமூக-அரசியல் சூழ்நிலைகள் குறித்தும், கட்சியின் சட்ட ரீதியான அணுகுமுறைகள் மற்றும் எதிர்காலச் செயற்பாடுகள் குறித்தும் விரிவாக ஆராயப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

2027 இல் கடும் மின் தட்டுப்பாடு! – பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு எச்சரிக்கை!!

2027 ஆம் ஆண்டின் முதல் காலாண்டில் நாட்டில் மின்சாரத்திற்கான தட்டுப்பாடு ஏற்படக்கூடும் என பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு எதிர்வுகூறியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பெஸ்ட் எனர்ஜி (First Energy) நிறுவனத்தின்…

78 0 0
இலங்கை செய்திகள்

225 லட்சம் மதிப்புள்ள ஐஸ் போ@தைப்பொருளுடன் இளைஞர் ஒருவர் கைது!

கிரிந்திவெல பகுதியில் கணேமுல்ல பொலிஸாரால் மேற்காள்ளப்பட்ட விசேட நடவடிக்கையின் போது, 225 லட்சம் ரூபா பெறுமதியான ‘ஐஸ்’ போதைப்பொருள் கைப்பற்றப்பட்டுள்ளது. கிடைத்த இரகசியத் தகவலின் அடிப்படையில் இந்த…

83 0 0
இலங்கை செய்திகள்

திருகோணமலை – ஹபரணை பிரதான வீதியில் விபத்து : ஒருவர் உயி@ரிழப்பு!

திருகோணமலை – ஹபரணை பிரதான வீதியின் இன்று (03) நண்பகல் இடம்பெற்ற விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார். சிற்றூந்து ஒன்றும் முச்சக்கரவண்டி ஒன்றும் நேருக்கு நேர் மோதியதில் இந்த…

74 0 0
இலங்கை செய்திகள்

ஹெரோயினுடன் 14 பேர் கைது!

ஹெரோயின் போதைப்பொருளுடன் 14 பேரை ஹிங்குரக்கொடை பொலிஸார் கைது செய்துள்ளனர். ஹிங்குரக்கொடை தலைமையக பொலிஸாரும் ஹிங்குரக்கொடை விமானப்படை அதிகாரிகளும் இணைந்து நேற்று (02) மேற்கொண்ட திடீர் சோதனை…

62 0 0