உள்ளடக்கத்திற்குச் செல்க
அக்டோபர் 2026
4 ஞாயிறு
842 பேர் இப்போது பார்க்கின்றனர்

நினைவேந்தலைத் தடுப்பதும் குழப்புவதும் உயிரிகளின் மாண்புக்கு எதிரான செயல்களே.!

இலங்கை செய்திகள் 2 நாட்கள் முன்
78 பார்வைகள்

யாழ். நல்லூரில் உள்ள தியாக தீபத்தின் நினைவாலயத்திலிருந்து தியாகி திலீபனின் சிலை அகற்றப்பட்டமைக்கு யாழ். மாவட்ட சர்வமதப் பேரவை தனது வன்மையான கண்டனத்தை வெளியிட்டுள்ளது. அத்துடன் ஆன்மிக அடிப்படையில் நினைவேந்தலைத் தடுப்பதும் குழப்புவதும் உயிரிகளின் மாண்புக்கு எதிரானது என்றும் யாழ். மாவட்ட சர்வமதப் பேரவை சுட்டிக்காட்டியுள்ளது.

இது தொடர்பில் அந்த அமைப்பு வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,
“பேராசை, சர்வாதிகாரம், இனவாதம் மற்றும் மதவாதம் போன்றவை களையப்பட்டு, அஹிம்சை ரீதியான முன்னெடுப்புகள் யாழ்ப்பாணத்தில் நடைபெற வேண்டும் என்பதே எமது விருப்பமாகும்.

வன்முறையைக் கடந்து வாழ்வை உறுதி செய்வதற்காகத் தனது உயிரைக் காணிக்கையாக்கிய திலீபனை மதிக்கின்றோம். அஹிம்சைக்காக ஆகுதியான அவரை அவமதிப்புக்கு உள்ளாக்கும் அனைத்து சக்திகளையும் வன்மையாகக் கண்டிக்கின்றோம்.

சமய நோக்கைக் கடந்து நினைவேந்தல் என்பது ஓர் அடிப்படை மனித உரிமை ஆகும். கலாச்சார வாழ்வில் பங்கேற்பதற்கான உரிமையை அனைவருக்கும் உத்தரவாதம் அளிக்கும் ‘பொருளாதார, சமூக மற்றும் கலாச்சார உரிமைகளுக்கான சர்வதேச உடன்படிக்கையின் 15ஆவது பிரிவில்’ நினைவுகூரும் உரிமை வேரூன்றியுள்ளது.

வரையறைகளைப் புரிந்து, கட்டமைப்புகளை அறிந்து, பன்மைத்துவத்தை மதித்து, அனைவரும் தங்களது வரலாற்று அடையாளத்துடன் வாழ்வதைத் தடுப்பது மாண்பை நிராகரிப்பதாகும். அது ஆரோக்கியமானதல்ல.

மாண்பு, சமத்துவம் மற்றும் ஒற்றுமை போன்றவற்றை வலியுறுத்தும் மக்கள் அரசியலை இருட்டடிப்பு செய்யும் கட்சி அரசியல், தனது வரையறைக்குள் மாத்திரம் செயற்பட வேண்டும்.

ஆன்மிக அடிப்படையில் நினைவேந்தலைத் தடுப்பது, குழப்புவது மற்றும் எடுப்பார் கைப்பிள்ளையாக்க முனைவது உயிரிகளின் மாண்புக்கு எதிரானதாகும்.

எனவே, அகிம்சைவாதியான திலீபனுக்கு அவமானம் ஏற்படுத்தும் அனைத்து நடவடிக்கைகளையும் சம்பந்தப்பட்ட அனைத்துத் தரப்பினரும் கைவிட்டு, மக்கள் நினைவேந்தலை முன்னெடுக்க உரிய ஆரோக்கியமான ஒத்துழைப்பை வழங்குமாறு கேட்டுக்கொள்கின்றோம்.” – என்றுள்ளது.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

2027 இல் கடும் மின் தட்டுப்பாடு! – பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு எச்சரிக்கை!!

2027 ஆம் ஆண்டின் முதல் காலாண்டில் நாட்டில் மின்சாரத்திற்கான தட்டுப்பாடு ஏற்படக்கூடும் என பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு எதிர்வுகூறியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பெஸ்ட் எனர்ஜி (First Energy) நிறுவனத்தின்…

82 0 0
இலங்கை செய்திகள்

225 லட்சம் மதிப்புள்ள ஐஸ் போ@தைப்பொருளுடன் இளைஞர் ஒருவர் கைது!

கிரிந்திவெல பகுதியில் கணேமுல்ல பொலிஸாரால் மேற்காள்ளப்பட்ட விசேட நடவடிக்கையின் போது, 225 லட்சம் ரூபா பெறுமதியான ‘ஐஸ்’ போதைப்பொருள் கைப்பற்றப்பட்டுள்ளது. கிடைத்த இரகசியத் தகவலின் அடிப்படையில் இந்த…

85 0 0
இலங்கை செய்திகள்

திருகோணமலை – ஹபரணை பிரதான வீதியில் விபத்து : ஒருவர் உயி@ரிழப்பு!

திருகோணமலை – ஹபரணை பிரதான வீதியின் இன்று (03) நண்பகல் இடம்பெற்ற விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார். சிற்றூந்து ஒன்றும் முச்சக்கரவண்டி ஒன்றும் நேருக்கு நேர் மோதியதில் இந்த…

76 0 0
இலங்கை செய்திகள்

ஹெரோயினுடன் 14 பேர் கைது!

ஹெரோயின் போதைப்பொருளுடன் 14 பேரை ஹிங்குரக்கொடை பொலிஸார் கைது செய்துள்ளனர். ஹிங்குரக்கொடை தலைமையக பொலிஸாரும் ஹிங்குரக்கொடை விமானப்படை அதிகாரிகளும் இணைந்து நேற்று (02) மேற்கொண்ட திடீர் சோதனை…

63 0 0