உள்ளடக்கத்திற்குச் செல்க
அக்டோபர் 2026
4 ஞாயிறு
842 பேர் இப்போது பார்க்கின்றனர்

பொய் வழக்குகளைப் போட்டு போராட்டங்களை ஒடுக்கும் அரசின் கனவு ஒருபோதும் நனவாகாது.!

இலங்கை செய்திகள் 2 நாட்கள் முன்
60 பார்வைகள்

மக்களின் நியாயமான போராட்டங்களை ஒடுக்குவதற்காக பொலிஸாரும் அரசும் கூட்டுச்சேர்ந்து பொய் வழக்குகளைப் போட்டு நீதிமன்றங்களுக்குள் அலைக்கழிப்பதன் மூலம் அச்சத்தை ஏற்படுத்தி, போராட்டங்களிலிருந்து மக்களை ஒதுங்கச் செய்யலாம் என்ற அரசின் கனவு ஒருபோதும் நனவாகாது என்று தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் பொதுச்செயலாளரும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமான செல்வராசா கஜேந்திரன் தெரிவித்தார்.

மல்லாகம் நீதிவான் நீதிமன்றத்தில் தையிட்டி திஸ்ஸ விகாரைக்கு எதிரான போராட்டம் தொடர்பான வழக்கு விசாரணை நேற்று நடைபெற்ற பின்னர் ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவிக்கும்போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,
“யாழ்ப்பாணம், வலிகாமம் வடக்கு தையிட்டியிலே தமிழ் மக்களுக்குச் சொந்தமான காணிகளை ஸ்ரீலங்கா இராணுவத்தினர் சட்டவிரோதமாக ஆக்கிரமித்து, அங்கே ஒரு சட்டவிரோதமான விகாரையை அமைத்துள்ளனர். அந்தக் காணி உரிமையாளர்கள் தங்களின் காணிகள் தங்களிடம் ஒப்படைக்கப்பட வேண்டும் என வலியுறுத்தித் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்தப் போராட்டத்தையும் மற்றும் சிவில் அமைப்புகளின் ஆதரவையும் திசைதிருப்பவும், சட்டவிரோதக் கட்டுமானங்களைப் பாதுகாக்கவும் அரசும் பொலிஸாரும் இனவாத அடிப்படையில் போராட்டக்காரர்கள் மீது பொய்க் குற்றச்சாட்டுகளைச் சுமத்தி நீதிமன்றத்துக்கு அலைக்கழிக்கின்றனர்.

தையிட்டி போராட்டம் தொடர்பாகப் பொலிஸாரால் தாக்கல் செய்யப்பட்ட பல்வேறு வழக்குகளில், 5 வழக்குகள் மல்லாகம் நீதிவான் நீதிமன்றத்தில் விசாரணைக்காக அழைக்கப்பட்டிருந்தன.

தையிட்டியிலே நடைபெறுகின்ற போராட்டம் என்பது வெறுமனே அந்த நிலத்தின் காணி உரிமையாளர்களுக்கான போராட்டம் மட்டுமல்ல. அது வடக்கு, கிழக்கில் பூர்வீகமாக வாழும் தமிழ் மக்களின் இருப்பைப் பாதுகாப்பதற்கான உரிமைப் போராட்டமாகும்.

ஜனநாயக உரிமைகளை வென்றெடுப்பதற்காக நாங்கள் தொடர்ந்து போராடுவோம். ஒட்டுமொத்த மக்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்த இந்தப் போராட்டத்துடன் மக்கள் ஒன்றிணைந்து தொடர்ந்தும் ஒத்துழைப்பு வழங்க வேண்டும்.” – என்றார்.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

2027 இல் கடும் மின் தட்டுப்பாடு! – பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு எச்சரிக்கை!!

2027 ஆம் ஆண்டின் முதல் காலாண்டில் நாட்டில் மின்சாரத்திற்கான தட்டுப்பாடு ஏற்படக்கூடும் என பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு எதிர்வுகூறியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பெஸ்ட் எனர்ஜி (First Energy) நிறுவனத்தின்…

82 0 0
இலங்கை செய்திகள்

225 லட்சம் மதிப்புள்ள ஐஸ் போ@தைப்பொருளுடன் இளைஞர் ஒருவர் கைது!

கிரிந்திவெல பகுதியில் கணேமுல்ல பொலிஸாரால் மேற்காள்ளப்பட்ட விசேட நடவடிக்கையின் போது, 225 லட்சம் ரூபா பெறுமதியான ‘ஐஸ்’ போதைப்பொருள் கைப்பற்றப்பட்டுள்ளது. கிடைத்த இரகசியத் தகவலின் அடிப்படையில் இந்த…

85 0 0
இலங்கை செய்திகள்

திருகோணமலை – ஹபரணை பிரதான வீதியில் விபத்து : ஒருவர் உயி@ரிழப்பு!

திருகோணமலை – ஹபரணை பிரதான வீதியின் இன்று (03) நண்பகல் இடம்பெற்ற விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார். சிற்றூந்து ஒன்றும் முச்சக்கரவண்டி ஒன்றும் நேருக்கு நேர் மோதியதில் இந்த…

76 0 0
இலங்கை செய்திகள்

ஹெரோயினுடன் 14 பேர் கைது!

ஹெரோயின் போதைப்பொருளுடன் 14 பேரை ஹிங்குரக்கொடை பொலிஸார் கைது செய்துள்ளனர். ஹிங்குரக்கொடை தலைமையக பொலிஸாரும் ஹிங்குரக்கொடை விமானப்படை அதிகாரிகளும் இணைந்து நேற்று (02) மேற்கொண்ட திடீர் சோதனை…

63 0 0