சர்வதேச கிரிக்கெட்டின் புதிய விதிமுறைகள் அமுல்!
சர்வதேச கிரிக்கெட் பேரவை ஒக்டோபர் 1ஆம் திகதி முதல் சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் சில முக்கிய விதிமுறைகளை அமுல்படுத்தியுள்ளது.துடுப்பாட்டவீரர்கள் ஆட்ட நேரத்தை தேவையின்றி வீணடித்தால் கடுமையான நடவடிக்கைகள் எடுக்கப்படும்.
இந்தத் தவறுகள் தொடரும் பட்சத்தில், எதிரணிக்கு மேலதிகமாக 5 ஓட்டங்கள் வழங்கப்படும்.
பகல் நேர டெஸ்ட் போட்டிகளிலும் சோதனை முறையில் ‘இளஞ்சிவப்பு பந்து’ (Pink Ball) பயன்படுத்தப்படவுள்ளது.
மகளிர் கிரிக்கெட் போட்டிகளில் பயன்படுத்தப்படும் பந்துகளின் அளவுகள் சர்வதேச அளவில் முறைப்படுத்தப்பட்டுள்ளன.
மட்டுப்படுத்தப்பட்ட ஓவர்கள் கொண்ட போட்டிகளின் போது வழங்கப்படும் பானங்கள் இடைவேளையில், அணிகளின் தலைமைப் பயிற்சியாளர்கள் மைதானத்திற்குள் சென்று வீரர்களுக்கு ஆலோசனைகளை வழங்குவதற்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.