உள்ளடக்கத்திற்குச் செல்க
அக்டோபர் 2026
4 ஞாயிறு
842 பேர் இப்போது பார்க்கின்றனர்

சிறுவர் தினத்தை முன்னிட்டு ஊடக விழிப்புணர்வு நிகழ்வு.!

இலங்கை செய்திகள் 3 நாட்கள் முன்
82 பார்வைகள்

‘ஜொயின் அஸ் வேர்ல்ட் வைட்’ (Join Us Worldwide) அமைப்பின் ஏற்பாட்டில், உலக சிறுவர் தினத்தை முன்னிட்டு கொழும்பு வுல்பெண்டால் மகளிர் உயர் பாடசாலையில் (Wolfendhal Girls’ High School) சிறுவர் தினக் கொண்டாட்டமும் ஊடக விழிப்புணர்வு செயற்பாடும் சிறப்பாக நடைபெற்றது.

இந்நிகழ்வில் ‘ஸ்கை லங்கா’ ஊடக வலைமைப்பின் ஊடகவியலாளர் ஆஷிகா ஃபர்சான் சிறப்புப் பேச்சாளராகக் கலந்து கொண்டு, மாணவிகளுக்கு ஊடகவியல் மற்றும் அதன் முக்கியத்துவம் தொடர்பான சிறப்பு விழிப்புணர்வு உரையாற்றினார்.

எதிர்கால சந்ததியினர் தவறான வழிகளில் செல்வதைத் தடுத்து, ஊடகவியல் போன்ற பயனுள்ள கலைகளையும் பயிற்சிகளையும் கற்றுத் தேற வேண்டும் என்ற உயரிய நோக்கத்தின் அடிப்படையில், ‘ஜொயின் அஸ் வேர்ல்ட் வைட்’ அமைப்பின் பணிப்பாளர் அல்ஹாஜ் எம்.எம். ஷாஃபி அவர்களால் இத்திட்டம் முன்மொழியப்பட்டு நடைமுறைப்படுத்தப்பட்டு வருகிறது.

அத்துடன், கொழும்பு மாவட்டத்தில் க.பொ.த சாதாரண தரப் பரீட்சையில் சிறந்த பெறுபேறுகளைப் பெற்ற மாணவ, மாணவிகளைப் பாராட்டி, அவர்களுக்குப் பரிசில்களும் சான்றிதழ்களும் வழங்கி கௌரவிப்பதற்குத் திட்டமிடப்பட்டுள்ளதாகவும் நிகழ்வின் போது தெரிவிக்கப்பட்டது.

இந்நிகழ்வில் ‘ஜொயின் அஸ் வேர்ல்ட் வைட்’ அமைப்பின் பணிப்பாளர் எம். எம். ஷாஃபி, மேலாண்மைப் பணிப்பாளர் எம். எச். எம். ஃபர்ஹான், இளைஞர் விவகாரப் பொறுப்பாளர் எஃப். நிஸாயா, உறுப்பினர் எஃப். ஷியாமா, ‘கொழும்பு கிங்ஸ் யூத் கிளப்’ அமைப்பின் பொருளாளர் எஃப். ஜைனப், உறுப்பினர் எஃப். ஹக்கீமா ஆகியோருடன் பாடசாலையின் அதிபர் மற்றும் ஆசிரியர்களும் கலந்து சிறப்பித்தனர்.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

2027 இல் கடும் மின் தட்டுப்பாடு! – பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு எச்சரிக்கை!!

2027 ஆம் ஆண்டின் முதல் காலாண்டில் நாட்டில் மின்சாரத்திற்கான தட்டுப்பாடு ஏற்படக்கூடும் என பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு எதிர்வுகூறியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பெஸ்ட் எனர்ஜி (First Energy) நிறுவனத்தின்…

82 0 0
இலங்கை செய்திகள்

225 லட்சம் மதிப்புள்ள ஐஸ் போ@தைப்பொருளுடன் இளைஞர் ஒருவர் கைது!

கிரிந்திவெல பகுதியில் கணேமுல்ல பொலிஸாரால் மேற்காள்ளப்பட்ட விசேட நடவடிக்கையின் போது, 225 லட்சம் ரூபா பெறுமதியான ‘ஐஸ்’ போதைப்பொருள் கைப்பற்றப்பட்டுள்ளது. கிடைத்த இரகசியத் தகவலின் அடிப்படையில் இந்த…

85 0 0
இலங்கை செய்திகள்

திருகோணமலை – ஹபரணை பிரதான வீதியில் விபத்து : ஒருவர் உயி@ரிழப்பு!

திருகோணமலை – ஹபரணை பிரதான வீதியின் இன்று (03) நண்பகல் இடம்பெற்ற விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார். சிற்றூந்து ஒன்றும் முச்சக்கரவண்டி ஒன்றும் நேருக்கு நேர் மோதியதில் இந்த…

76 0 0
இலங்கை செய்திகள்

ஹெரோயினுடன் 14 பேர் கைது!

ஹெரோயின் போதைப்பொருளுடன் 14 பேரை ஹிங்குரக்கொடை பொலிஸார் கைது செய்துள்ளனர். ஹிங்குரக்கொடை தலைமையக பொலிஸாரும் ஹிங்குரக்கொடை விமானப்படை அதிகாரிகளும் இணைந்து நேற்று (02) மேற்கொண்ட திடீர் சோதனை…

63 0 0