உள்ளடக்கத்திற்குச் செல்க
நவம்பர் 2026
23 திங்கள்
4210 பேர் இப்போது பார்க்கின்றனர்

கொழும்பு காசல் வீதி மகளிர் மருத்துவமனையில் பிறந்த குழந்தைகளின் பெற்றோருக்கு இலவச ஆயுள் காப்பீடு.!

இலங்கை செய்திகள் 2 மாதங்கள் முன்
117 பார்வைகள்

உலக சிறுவர் தினத்தை முன்னிட்டு, கொழும்பு காசல் வீதி மகளிர் மருத்துவமனையில் இன்று (அக்டோபர் 01) பிறந்த குழந்தைகளின் பெற்றோருக்கு இலவச ஆயுள் காப்பீட்டுப் பத்திரங்களை வழங்கி வைக்கும் நிகழ்வு நடைபெற்றது.

கொழும்பு காசல் வீதி மகளிர் மருத்துவமனையின் பணிப்பாளர், இலங்கை காப்புறுதி கூட்டுத்தாபனத்தின் அதிகாரிகள் மற்றும் மருத்துவமனை ஊழியர்களின் பங்களிப்புடன் நடைபெற்ற இந்நிகழ்வில், இன்று பிறந்த குழந்தைகளின் பெற்றோருக்கு 1 மில்லியன் ரூபாய் பெறுமதியான இலவச ஆயுள் காப்பீட்டுப் பாதுகாப்பு அடையாள பூர்வமாக வழங்கி வைக்கப்பட்டது.

இலங்கை காப்புறுதி கூட்டுத்தாபனத்தினால் சமூகப் பொறுப்புணர்வுத் திட்டத்தின் கீழ் நாடு தழுவிய ரீதியில் முன்னெடுக்கப்படும் இந்நடவடிக்கையானது, இவ்வாண்டும் நாட்டின் அனைத்து முக்கிய மருத்துவமனைகளையும் உள்ளடக்கிய வகையில் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.

புதிதாகப் பிறக்கும் குழந்தைகளின் குடும்பங்களுக்கு ஆரம்பக் கட்டத்திலேயே நிதிப் பாதுகாப்பினை உறுதி செய்வதும், எதிர்கால திட்டமிடல் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்துவதுமே இத்திட்டத்தின் பிரதான நோக்கமாகும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

விளம்பரம்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

கோப்பாய் மாவீரர் துயிலுமில்லம் முன்பாக மாவீரர் நினைவாலயம் திறந்து வைப்பு!

கோப்பாய் மாவீரர் துயிலுமில்லம் முன்பாக மாவீரர்களின் திருவுருவப் படங்கள் மற்றும் பெயர்கள் பொறிக்கப்பட்ட நினைவாலயம் இன்று திறந்து வைக்கப்பட்டுள்ளது. பொதுச்சுடர் ஏற்றப்பட்டு, மலர்வணக்கம் செலுத்தப்பட்டதைத் தொடர்ந்து மக்கள்…

161 0 0
இலங்கை செய்திகள்

யாழ்ப்பாணம் பண்ணைப் பகுதியில் விபத்து!

யாழ்ப்பாணம் பண்ணை சுற்றுவட்டப் பகுதியில் இன்று (22) இரவு 7 மணியளவில் கட்டுப்பாட்டை இழந்த சிறிய ரக மகிழுந்து ஒன்று, வீதியோரத்தில் நிறுத்தப்பட்டிருந்த 10 இற்கும் மேற்பட்ட…

149 0 0
இலங்கை செய்திகள்

கூகுள் வரைபடத்தை அடிப்படையாகக் கொண்டு அபகரிக்கப்பட்ட காணிகளை மக்களுக்கு மீள வழங்க வேண்டும்!

வடக்கு மாகாணத்தில் வனப் பாதுகாப்புத் திணைக்களம், வனஜீவராசிகள் திணைக்களம் மற்றும் தொல்பொருள் திணைக்களம் ஆகிய அரச நிறுவனங்களின் வசமுள்ள காணிகளை மக்களுக்கு விடுவிக்க நடவடிக்கை எடுக்குமாறு ஈ.பி.டி.பி.…

139 0 0
இலங்கை செய்திகள்

மழையை நம்பி மேற்கொள்ளப்பட்ட காலபோக நெற்ச்செய்கை மழையின்மையால் பாதிப்பு

கிளிநொச்சி மாவட்டத்தில் 2026 /.2027 ஆம் ஆண்டுக்கான பெரும் போகநெற்செய்கை கொள்ளப்பட்டுள்ள நிலையில் கிளிநொச்சி நெத்தலியாறு பகுதியில் மழையை நம்பி நெற்செய்கை மேற்கொண்ட விவசாயிகள் பாதிக்கப்பட்டுள்ளனர். விவசாய…

138 0 0