உள்ளடக்கத்திற்குச் செல்க
அக்டோபர் 2026
4 ஞாயிறு
842 பேர் இப்போது பார்க்கின்றனர்

காரைதீவு சமூகப் பராமரிப்பு நிலையம் திறந்து வைப்பு.!

இலங்கை செய்திகள் 3 நாட்கள் முன்
85 பார்வைகள்

காரைதீவு பிரதேச மக்களின் சமூகப் பராமரிப்புச் சேவைகளை மேலும் விரிவுபடுத்தி, சிறப்பாக முன்னெடுக்கும் உயரிய நோக்கில் அமைக்கப்பட்ட புதிய சமூகப் பராமரிப்பு நிலையம் (Social Care Centre) நேற்று புதன்கிழமை(30) திறந்து வைக்கப்பட்டது.

கிழக்கு மாகாண ஆளுநர் கலாநிதி ஜயந்த லால் ரத்னசேகர உட்பட அம்பாறை மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் எஸ். ஜெகராஜன் அதிதியாகக் கலந்துகொண்டு நிலையத்தினை உத்தியோகபூர்வமாகத் திறந்து வைத்தனர்.

கிழக்கு மாகாண சமூக சேவைகள் திணைக்களத்தின் ஏற்பாட்டில் நடைபெற்ற இச் சிறப்பு விழாவிற்கு, அத்திணைக்களத்தின் மாகாணப் பணிப்பாளர் ஜி. நவஜீவனா தலைமை தாங்கி நிகழ்வுகளை வழிநடத்தினார்.

காரைதீவு மற்றும் அதனைச் சுற்றியுள்ள கிராமங்களைச் சேர்ந்த முதியோர்கள், மாற்றுத்திறனாளிகள் மற்றும் விசேட தேவைகளைக் கொண்ட மக்களுக்குத் தேவையான சமூகப் பாதுகாப்பு மற்றும் பராமரிப்புச் சேவைகளை ஒரே கூரையின் கீழ் விரைவாக வழங்குவதற்கு இந்நிலையம் பெரும் உறுதுணையாக அமையும் எனக் கலந்துகொண்ட அதிகாரிகளால் சுட்டிக்காட்டப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

இவ் விழாவில் காரைதீவு உதவி பிரதேச செயலாளர் பி. பிரணவரூபன், காரைதீவு பிரதேச சபை தவிசாளர் எஸ். பாஸ்கரன், திணைக்கள அதிகாரிகள், பிரதேச செயலகப் பிரதிநிதிகள், சமூகப் பெரியார்கள் எனப் பல முக்கிய அதிதிகளும் கலந்துகொண்டு சிறப்பித்தனர்.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

2027 இல் கடும் மின் தட்டுப்பாடு! – பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு எச்சரிக்கை!!

2027 ஆம் ஆண்டின் முதல் காலாண்டில் நாட்டில் மின்சாரத்திற்கான தட்டுப்பாடு ஏற்படக்கூடும் என பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு எதிர்வுகூறியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பெஸ்ட் எனர்ஜி (First Energy) நிறுவனத்தின்…

82 0 0
இலங்கை செய்திகள்

225 லட்சம் மதிப்புள்ள ஐஸ் போ@தைப்பொருளுடன் இளைஞர் ஒருவர் கைது!

கிரிந்திவெல பகுதியில் கணேமுல்ல பொலிஸாரால் மேற்காள்ளப்பட்ட விசேட நடவடிக்கையின் போது, 225 லட்சம் ரூபா பெறுமதியான ‘ஐஸ்’ போதைப்பொருள் கைப்பற்றப்பட்டுள்ளது. கிடைத்த இரகசியத் தகவலின் அடிப்படையில் இந்த…

85 0 0
இலங்கை செய்திகள்

திருகோணமலை – ஹபரணை பிரதான வீதியில் விபத்து : ஒருவர் உயி@ரிழப்பு!

திருகோணமலை – ஹபரணை பிரதான வீதியின் இன்று (03) நண்பகல் இடம்பெற்ற விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார். சிற்றூந்து ஒன்றும் முச்சக்கரவண்டி ஒன்றும் நேருக்கு நேர் மோதியதில் இந்த…

76 0 0
இலங்கை செய்திகள்

ஹெரோயினுடன் 14 பேர் கைது!

ஹெரோயின் போதைப்பொருளுடன் 14 பேரை ஹிங்குரக்கொடை பொலிஸார் கைது செய்துள்ளனர். ஹிங்குரக்கொடை தலைமையக பொலிஸாரும் ஹிங்குரக்கொடை விமானப்படை அதிகாரிகளும் இணைந்து நேற்று (02) மேற்கொண்ட திடீர் சோதனை…

63 0 0