உள்ளடக்கத்திற்குச் செல்க
அக்டோபர் 2026
4 ஞாயிறு
842 பேர் இப்போது பார்க்கின்றனர்

இன்றைய ராசி பலன்கள் – 01.10.2026

ராசி பலன்கள் 3 நாட்கள் முன்
81 பார்வைகள்

மேஷம்
மேஷ ராசிக்காரர்களுக்கு ஆதரவாக இன்று நிறைய நல்ல விஷயங்கள் நடக்கும். காரிய தடை விலகும். எப்போதுமே உங்களுக்கு எதிராக பேசிக் கொண்டிருந்த உயர் அதிகாரிகள், உங்களுக்கு ஆதரவு தெரிவிப்பார்கள். வியாபாரத்தில் புதிய ஒப்பந்தங்கள் கையெழுத்தாக காத்துக் கொண்டிருக்கும். இறைவனுக்கு நன்றி சொல்லுங்கள். புதிய முயற்சிகளை மேற்கொள்ளலாம் நல்லதே நடக்கும்.

ரிஷபம்
ரிஷப ராசிக்காரர்கள் இன்று உஷாராக இருக்க வேண்டும். யாரிடமாவது ஏமாறுவதற்கு வாய்ப்புகள் உள்ளது. பணம் சம்பந்தப்பட்ட விஷயத்தில் கூடுதல் கவனம் தேவை. புது முயற்சிகளை மேற்கொள்ள வேண்டாம். விலை உயர்ந்த பொருட்களை இன்று வாங்காமல் இருப்பது நல்லது. வேலையிலும் வியாபாரத்திலும் கூடுதல் கவனம் இருக்கட்டும்.

மிதுனம்
மிதுன ராசிக்காரர்கள் இன்று நிதானத்துடன் நடந்து கொள்ள வேண்டும். அவசரம் வேண்டாம். அனுபவசாலிகளின் பேச்சை கேட்டு நடப்பது நல்லது. முன்கோபம் கூடாது. உயர் அதிகாரிகளிடம் பேசும்போது கட்டாயம் பணிவு தேவை. கணவன் மனைவிக்குள் வாக்குவாதம் வேண்டாம். பிரச்சினைகள் வந்தால் ஒருவருக்கொருவர் விட்டுக் கொடுத்து நடக்கவும்.

கடகம்
கடக ராசிக்காரர்களுக்கு இன்று நிம்மதியான நாளாக இருக்கும். வேலைகள் எல்லாம் சரியான நேரத்தில் நடந்து முடியும். தேவையான அளவு ஓய்வு கிடைக்கும். ஆரோக்கியத்தில் இருந்து வந்த பிரச்சினைகள் நீங்கும். செலவுகள் குறையும். சேமிப்பு அதிகரிப்பதற்கு வாய்ப்புகள் உள்ளது. உயர் அதிகாரிகளின் ஆதரவை பெறுவீர்கள். வேலையில் பிரமோஷன் கிடைக்கும்.

சிம்மம்
சிம்ம ராசிக்காரர்கள் இன்று பணம் சம்பந்தப்பட்ட விஷயத்தில் கவனமாக இருக்க வேண்டும். செலவுகள் அதிகரிக்கும். மருத்துவ செலவுகளை கட்டுப்படுத்த முடியாத சூழ்நிலை கூட சில பேருக்கு வரலாம். ஆரோக்கியத்தில் கவனம் செலுத்துங்கள். உற்றார் உறவினர்களோடு சின்னச் சின்ன மன கசப்பு வருவதற்கு வாய்ப்பு உள்ளது. யாரிடமும் எந்த விஷயத்தையும் பெரிதாக எதிர்பார்க்காதீர்கள். எதிர்பார்ப்பு இன்று உங்களுக்கு பெரிய ஏமாற்றத்தை கொடுத்து விடும்.

கன்னி
கன்னி ராசிக்காரர்களுக்கு இன்று நிம்மதியான நாளாக இருக்கும். நல்ல சாப்பாடு, நல்ல தூக்கம் என்று இந்த நாள் இனிமையான நாளாக அமையும். மனதிற்கு பிடித்த உறவுகளோடு நீண்ட நேரம் பேசி நேரத்தை செலவு செய்வீர்கள். நிதிநிலைமை சீராகும். தேவைக்கு ஏற்ப பணம் கையில் இருக்கும். வியாபாரத்தை விரிவுபடுத்த முயற்சிகளை மேற்கொள்ளலாம். நல்லதே நடக்கும்.

துலாம்
துலாம் ராசிக்காரர்கள் வெற்றிவாகை சூடுவீர்கள். சுறுசுறுப்பாக செயல்படுவீர்கள். நீண்ட நாள் முயற்சிகள் வெற்றி அடையும். காரிய தடை விலகும். மாணவர்களுக்கு கல்வியில் நல்ல முன்னேற்றம் இருக்கும். வீட்டில் இருப்பவர்களுடைய ஆரோக்கியத்தில் கவனம் செலுத்துங்கள். ஆரோக்கியம் சம்பந்தப்பட்ட விஷயத்தில் அலட்சியம் வேண்டாம். உணவு பழக்கவழக்கத்தில் கட்டுப்பாடு தேவை.

விருச்சிகம்
விருச்சிக ராசிக்காரர்களுக்கு இன்று கொஞ்சம் சோகம், சோர்வு, கவலை இருக்கும். வேலையிலும் வியாபாரத்திலும் சுறுசுறுப்பு இருக்காது. கொஞ்ச நேரம் ஓய்வு எடுக்கலாம் என்று மனசு சொல்லும். ஆனால் தலைக்கு மேல் வேலை காத்துக் கொண்டிருக்கும். கவலை வேண்டாம். நேரத்தை வீணடிக்காமல் உங்களுடைய வேலையில் கவனத்தோடு செயல்பட்டால் நிச்சயம் நல்லது நடக்கும்.

தனுசு
தனுசு ராசிக்காரர்களுக்கு இன்று நன்மைகள் நடக்கும். வேலையிலும் வியாபாரத்திலும் முன்னேற்றம் இருக்கும். தேவையில்லாத எதிரி தொல்லையில் இருந்து விடுபடுவீர்கள். புதிய நண்பர்களின் அறிமுகம் கிடைக்கும். மனதிற்கு பிடித்த வாழ்க்கை துணை அமைவதற்கு வாய்ப்புகள் உள்ளது. காதல் கைகூடும். திருமணம் வரை செல்லும். சுப செலவுகள் ஏற்படும்.

மகரம்
மகர ராசிக்காரர்கள் இன்று சிந்தித்து நிதானத்தோடு செயல்பட வேண்டும். முக்கியமான வேலைகளை ஒரு பேப்பரில் எழுதி வைத்துக் கொள்வது நல்லது. மறதியால் பிரச்சினைகள் வரலாம். முக்கியமான வேலைகளுக்கு செல்லும் போது மனதை அங்கும் இங்கும் ஆக அலைபாய விடாதீர்கள். உணவு பழக்கவழக்கத்தில் கட்டுப்பாடு தேவை. ஆரோக்கியமான உணவை மட்டுமே சாப்பிடுவது நல்லது.

கும்பம்
கும்ப ராசிக்காரர்களுக்கு இன்று சின்னச் சின்ன சிக்கல்கள் ஏற்படலாம். தடைகள் தடங்கல்கள் வரலாம். எதிர்பார்த்த நல்ல விஷயங்கள் நடக்காமல் போகலாம். உங்களுக்கு ஆதரவு தெரிவிக்க நாலு பேர் வர மாட்டார்கள். இத்தனை பிரச்சினைகளையும் தாண்டி இன்று நீங்கள் ஜெயிக்க வேண்டும் என்றால் விடாமுயற்சி தேவை. நிச்சயம் உங்களுடைய நம்பிக்கை வீண் போகாது.

மீனம்
மீன ராசிக்காரர்களுக்கு இன்று தடைகள் தடங்கல்கள் வருவதற்கு வாய்ப்பு உள்ளது. உங்களுடைய வேலையிலும் வியாபாரத்திலும் சின்ன பின்னடைவு வரலாம் இருந்தாலும் கடமையிலிருந்து தவறாமல் நடந்து கொள்ள வேண்டும். நேர்வழியில் இருந்து மாறக்கூடாது. நீங்கள் உண்டு உங்கள் வேலை உண்டு என்று இருங்கள். அவசரமாக எந்த ஒரு முடிவையும் எடுக்காதீர்கள்.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

ராசி பலன்கள்

இன்றைய ராசி பலன்கள் – 03.10.2026

மேஷம்மேஷ ராசிக்காரர்களுக்கு இன்று கொஞ்சம் சோர்வான நாளாக தான் இருக்கும். மனம் கவலையாக இருக்கும். வேலையிலும் வியாபாரத்திலும் முழுசாக கவனம் செலுத்த முடியாத சூழ்நிலை இருக்கும். இதனால்…

73 0 0
ராசி பலன்கள்

இன்றைய ராசி பலன்கள் – 02.10.2026

மேஷம்மேஷ ராசிக்காரர்களுக்கு இன்று இலாபமான நாளாக இருக்கும். வியாபாரத்தில் புதிய முயற்சிகளை மேற்கொள்ளலாம். புதிய முதலீடுகளுக்கு முயற்சி செய்யலாம். வேலையில் எதிர்பார்த்ததை விட முன்னேற்றம் கொஞ்சம் குறைவாக…

84 0 0
ராசி பலன்கள்

இன்றைய ராசி பலன்கள் – 30.09.2026

மேஷம்மேஷ ராசிக்காரர்களுக்கு இன்று தைரியமான நாளாக இருக்கும். மனதில் பட்ட விஷயங்களை வெளிப்படையாக பேசுவீர்கள். துணிச்சலோடு நடந்து கொள்வீர்கள். பல நாள் தொல்லைகள் இன்றோடு முடியும். மனபாரம்…

115 0 0
ராசி பலன்கள்

இன்றைய ராசி பலன்கள் – 29.09.2026

மேஷம்மேஷ ராசிக்காரர்களுக்கு இன்று நன்மைகள் நடக்கும். நிதி நிலைமை சீராகும். கடன் சுமையிலிருந்து விடுபடுவீர்கள். நீண்ட நாள் பிரச்சினையாக இருந்து வந்த வேலை சம்பந்தப்பட்ட விஷயங்களுக்கு இன்று…

101 0 0