உள்ளடக்கத்திற்குச் செல்க
அக்டோபர் 2026
4 ஞாயிறு
842 பேர் இப்போது பார்க்கின்றனர்

திலீபன் சிலை விவகாரத்தில் அரசின் நிலைப்பாடு தெளிவானது.!

இலங்கை செய்திகள் 4 நாட்கள் முன்
74 பார்வைகள்

திலீபனின் சிலை விவகாரம் தொடர்பில் அரசாங்கம் தனது நிலைப்பாட்டை தெளிவாக வெளிப்படுத்தியுள்ளதாக முன்னாள் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார்.

அந்த நிலைப்பாட்டின் அடிப்படையிலேயே அரசாங்கம் செயற்பட்டு வருவதாகவும், மறுபுறம் தமிழ் அரசியல் கட்சிகள் தமக்கிடையே குடுமிச் சண்டையில் ஈடுபட்டு வருவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

எனினும், இந்த விவகாரத்தை தான் தற்போது பெரிதாக அலட்டிக்கொள்ளவில்லை எனத் தெரிவித்த டக்ளஸ் தேவானந்தா, தனக்கான காலம் வரும்போது அதற்கான உரிய செயற்றிட்டத்தை முன்வைப்பேன் எனவும் கூறியுள்ளார்.

கடந்த காலங்களிலும் யாழ்ப்பாணம் மணிக்கூட்டு கோபுரப் பகுதியில் மும்மன்னர்களின் சிலை, உரும்பிராயில் பொன் சிவகுமாரனின் சிலை, முத்திரைச் சந்தியில் சங்கிலியனின் கம்பீரமான சிலை மற்றும் மடத்தடியில் தனிகாசலம் அடிகளாரின் சிலை உள்ளிட்டவற்றை நிறுவுவதில் தான் நடவடிக்கை எடுத்துள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

தமிழ் மக்களின் வரலாற்று அடையாளங்களைப் பாதுகாக்கும் விடயத்தில் கடந்த காலங்களில் தான் மேற்கொண்ட நடவடிக்கைகளையும் நினைவூட்டிய டக்ளஸ் தேவானந்தா, எதிர்காலத்திலும் உரிய நேரத்தில் அதற்கான நடவடிக்கைகளை முன்னெடுப்பேன் எனத் தெரிவித்துள்ளார்.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

2027 இல் கடும் மின் தட்டுப்பாடு! – பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு எச்சரிக்கை!!

2027 ஆம் ஆண்டின் முதல் காலாண்டில் நாட்டில் மின்சாரத்திற்கான தட்டுப்பாடு ஏற்படக்கூடும் என பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு எதிர்வுகூறியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பெஸ்ட் எனர்ஜி (First Energy) நிறுவனத்தின்…

82 0 0
இலங்கை செய்திகள்

225 லட்சம் மதிப்புள்ள ஐஸ் போ@தைப்பொருளுடன் இளைஞர் ஒருவர் கைது!

கிரிந்திவெல பகுதியில் கணேமுல்ல பொலிஸாரால் மேற்காள்ளப்பட்ட விசேட நடவடிக்கையின் போது, 225 லட்சம் ரூபா பெறுமதியான ‘ஐஸ்’ போதைப்பொருள் கைப்பற்றப்பட்டுள்ளது. கிடைத்த இரகசியத் தகவலின் அடிப்படையில் இந்த…

85 0 0
இலங்கை செய்திகள்

திருகோணமலை – ஹபரணை பிரதான வீதியில் விபத்து : ஒருவர் உயி@ரிழப்பு!

திருகோணமலை – ஹபரணை பிரதான வீதியின் இன்று (03) நண்பகல் இடம்பெற்ற விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார். சிற்றூந்து ஒன்றும் முச்சக்கரவண்டி ஒன்றும் நேருக்கு நேர் மோதியதில் இந்த…

76 0 0
இலங்கை செய்திகள்

ஹெரோயினுடன் 14 பேர் கைது!

ஹெரோயின் போதைப்பொருளுடன் 14 பேரை ஹிங்குரக்கொடை பொலிஸார் கைது செய்துள்ளனர். ஹிங்குரக்கொடை தலைமையக பொலிஸாரும் ஹிங்குரக்கொடை விமானப்படை அதிகாரிகளும் இணைந்து நேற்று (02) மேற்கொண்ட திடீர் சோதனை…

63 0 0