உள்ளடக்கத்திற்குச் செல்க
நவம்பர் 2026
23 திங்கள்
4210 பேர் இப்போது பார்க்கின்றனர்

சமூக பொருளாதார தரவு அறிக்கை முற்றிலும் தவறானது.!

இலங்கை செய்திகள் 2 மாதங்கள் முன்
144 பார்வைகள்

அரசு, மத்திய வங்கி மற்றும் தொகை மதிப்பு மற்றும் புள்ளிவிபரத் திணைக்களம் இணைந்து வெளியிட்டுள்ள 2026 ஆண்டுக்கான சமூக பொருளாதார தரவுகள் குறித்த அறிக்கை முற்றிலும் தவறானது என்றும், நாட்டின் 220 இலட்சம் மக்களையும் திசைதிருப்பும் வகையில் பழைய தரவுகளைப் பயன்படுத்தி இது தயாரிக்கப்பட்டுள்ளது என்றும் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ தெரிவித்தார்.

கொழும்பில் நேற்று செவ்வாய்க்கிழமை விசேட கூற்றொன்றை முன்வைத்து ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவிக்கும்போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அவர் மேலும் தெரிவித்ததாவது,
“அறிக்கையின் முதல் 18 பக்கங்கள் வரை பொருளாதார சுட்டிகள், பணவீக்கம், ஏற்றுமதி – இறக்குமதி மற்றும் ஆசிய நாடுகளுடனான ஒப்பீடுகளுக்கு 2023, 2024 மற்றும் 2025 ஆம் ஆண்டுகளின் அண்மைய புதுப்பிக்கப்பட்ட தரவுகள் பயன்படுத்தப்பட்டுள்ளன.

ஆனால், நாட்டின் சமூக – பொருளாதார நிலைமை மற்றும் வறுமை பற்றிக் குறிப்பிடும் 19 ஆம் பக்கம் முதல் 34 ஆம் பக்கம் வரையிலான தகவல்களுக்கு 2016 மற்றும் 2019 ஆம் ஆண்டுகளின் காலாவதியான தரவுகளே பயன்படுத்தப்பட்டுள்ளன.

வீடொன்றின் வருமானச் செலவு ஆய்வு, மாகாண மட்ட நிலை, வீட்டு வசதிகள், எரிசக்தி நுகர்வு, சமையல், சனத்தொகைப் பரம்பல் மற்றும் தனிநபர் நாளாந்த உணவு ஆற்றல் நுகர்வு போன்ற முக்கியமான பிரிவுகளுக்கே இந்தப் பழைய தரவுகள் பயன்படுத்தப்பட்டுள்ளன. ஏனையவற்றுக்கு 2025 தரவுகளைப் பயன்படுத்திய மத்திய வங்கியும் திணைக்களமும், வறுமைத் தரவுகளை மட்டும் ஏன் மறைத்தன?

ஒரு நபர் 30 நாட்கள் வாழ்வதற்கு 17 ஆயிரத்து 315 ரூபாய் போதுமானது என அரசு கூறுவது மக்களை ஏமாற்றும் முற்றிலும் பொய்யான கூற்றாகும். நாடு வங்குரோத்தடைந்த காலத்திலிருந்து இன்று வரை வீடொன்றின் வருமானச் செலவு ஆய்வை நடத்தவோ அல்லது வறுமைக் கோட்டைத் தெளிவாக அடையாளம் காணவோ அரசு தவறிவிட்டது.

அரசின் இந்த மோசடி கையும் களவுமாக மாட்டியுள்ள நிலையில், இதனை வெறும் ‘அச்சுப் பிழை’ எனக் கூறி மூடிமறைக்க முயலக் கூடாது. உலக வங்கியின் 2026 அறிக்கையின்படி, ஒரு நபருக்கான வறுமைக் கோடு ஒரு நாளைக்கு 8.3 அமெரிக்க டொலர் (சுமார் 2 ஆயிரத்து 724 ரூபாய்) ஆகும்.

அதனடிப்படையில் இலங்கையின் தற்போதைய வறுமை விகிதம் 65.4 சதவீதமாக உயர்ந்துள்ளதுடன், மொத்த வீடுகளில் 33 சதவீதமான குடும்பங்கள் கடுமையான உணவுப் பாதுகாப்பின்மைக்கு உள்ளாகியுள்ளன. உலக வங்கியின் கணிப்பின்படி 2028 ஆம் ஆண்டளவிலேயே இந்த வறுமை நிலைமை 63.4 சதவீமாகக் குறையும் என எதிர்வு கூறப்பட்டுள்ளது.

எதிர்வரும் நவம்பர் 12 ஆம் திகதி சமர்ப்பிக்கப்படவுள்ள வரவு – செலவுத் திட்டம் இவ்வாறான தவறான மற்றும் காலாவதியான தரவுகளின் அடிப்படையில் தயாரிக்கப்பட்டால் அது நாட்டுக்குப் பெரும் ஆபத்தாக முடியும்.

இது தொடர்பாக எந்த நேரத்திலும் எந்தத் தரப்பினருடனும் கருத்துக்களைப் பரிமாறிக்கொள்ள நான் தயார்.

எனவே, பழைய தரவுகளைப் பயன்படுத்தி மக்களை ஏமாற்றுவதை அரசு உடனடியாக நிறுத்த வேண்டும். வரவிருக்கும் வரவு – செலவுத் திட்டத்துக்கு முன்னதாக நாட்டின் வறுமை குறித்த உண்மையான, புதுப்பிக்கப்பட்ட தரவுகள் அடங்கிய அறிக்கையை ஜனாதிபதியும் மத்திய வங்கியும் உடனடியாக வெளியிட வேண்டும்.” – என்றார்.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

விளம்பரம்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

கோப்பாய் மாவீரர் துயிலுமில்லம் முன்பாக மாவீரர் நினைவாலயம் திறந்து வைப்பு!

கோப்பாய் மாவீரர் துயிலுமில்லம் முன்பாக மாவீரர்களின் திருவுருவப் படங்கள் மற்றும் பெயர்கள் பொறிக்கப்பட்ட நினைவாலயம் இன்று திறந்து வைக்கப்பட்டுள்ளது. பொதுச்சுடர் ஏற்றப்பட்டு, மலர்வணக்கம் செலுத்தப்பட்டதைத் தொடர்ந்து மக்கள்…

161 0 0
இலங்கை செய்திகள்

யாழ்ப்பாணம் பண்ணைப் பகுதியில் விபத்து!

யாழ்ப்பாணம் பண்ணை சுற்றுவட்டப் பகுதியில் இன்று (22) இரவு 7 மணியளவில் கட்டுப்பாட்டை இழந்த சிறிய ரக மகிழுந்து ஒன்று, வீதியோரத்தில் நிறுத்தப்பட்டிருந்த 10 இற்கும் மேற்பட்ட…

149 0 0
இலங்கை செய்திகள்

கூகுள் வரைபடத்தை அடிப்படையாகக் கொண்டு அபகரிக்கப்பட்ட காணிகளை மக்களுக்கு மீள வழங்க வேண்டும்!

வடக்கு மாகாணத்தில் வனப் பாதுகாப்புத் திணைக்களம், வனஜீவராசிகள் திணைக்களம் மற்றும் தொல்பொருள் திணைக்களம் ஆகிய அரச நிறுவனங்களின் வசமுள்ள காணிகளை மக்களுக்கு விடுவிக்க நடவடிக்கை எடுக்குமாறு ஈ.பி.டி.பி.…

139 0 0
இலங்கை செய்திகள்

மழையை நம்பி மேற்கொள்ளப்பட்ட காலபோக நெற்ச்செய்கை மழையின்மையால் பாதிப்பு

கிளிநொச்சி மாவட்டத்தில் 2026 /.2027 ஆம் ஆண்டுக்கான பெரும் போகநெற்செய்கை கொள்ளப்பட்டுள்ள நிலையில் கிளிநொச்சி நெத்தலியாறு பகுதியில் மழையை நம்பி நெற்செய்கை மேற்கொண்ட விவசாயிகள் பாதிக்கப்பட்டுள்ளனர். விவசாய…

138 0 0