கிளிநொச்சியில் இடம்பெற்ற கோர விபத்து.!
கிளிநொச்சி கனகாம்பிகைக்குளம் சேவிஸ் வீதி சந்தியில் மணல் ஏற்றியவாறு, கிளிநொச்சியை நோக்கி வந்த பாரவூர்தி வாகனம் வேறொரு வாகனத்தை முந்திச் செல்ல முயன்றது.
இதன்போது எதிரே வந்த உந்துருளியை அந்த பாரவூர்தி மோதியதுடன் உந்துருளியை நீண்ட தூரம் இழுத்து சென்றது. இதனால் உந்துருளியில் வந்த கிளிநொச்சி – பாரதிபுரத்தைச் சேர்ந்த இளைஞனின் கை முழங்கைக்கு கீழ் துண்டாடப்பட்டது.
இந்த விபத்தில் படுகாயமடைந்த இளைஞன் கிளிநொச்சி வைத்தியசாலை அவசர சிகிச்சைப் பிரிவில் சேர்ப்பிக்கப்பட்டுள்ளார்.
இது குறித்து கிளிநொச்சி பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.


