உள்ளடக்கத்திற்குச் செல்க
அக்டோபர் 2026
4 ஞாயிறு
842 பேர் இப்போது பார்க்கின்றனர்

ஐஸ் போ*தைப்பொருளுடன் ஒருவர் கைது.!

இலங்கை செய்திகள் 4 நாட்கள் முன்
92 பார்வைகள்

கட்டுநாயக்க விமான நிலையத்தில் 8 கோடி ரூபாவிற்கும் அதிக பெறுமதியான ஐஸ் போதைப்பொருளுடன் இலங்கையர் ஒருவர் கட்டுநாயக்க விமான நிலைய பொலிஸ் போதைப்பொருள் ஒழிப்புப் பிரிவின் அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ளார்.

சந்தேகநபர் ரத்மலானை, ஜயமாவத்தை பகுதியைச் சேர்ந்த 34 வயதுடைய வர்த்தகர் எனத் தெரியவந்துள்ளது.

அவர் ஓமானில் இருந்து இந்தப் போதைப்பொருளுடன் கட்டாரின் தோஹாவிற்கு சென்று, அங்கிருந்து கட்டார் எயார்வேஸ் விமானத்தின் மூலம் நேற்று (30) இரவு 7.30 மணியளவில் கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்துள்ளார்.

3 கிலோ 994 கிராம் எடையுள்ள போதைப்பொருளை 10 பொதிகளாக தயார் செய்து, சந்தேகநபர் தனது பயணப் பொதியில் பிஸ்கட் மற்றும் சொக்லேட் உறைகளுக்குள் சூட்சுமமான முறையில் மறைத்து வைத்திருந்ததாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

பொலிஸ் போதைப்பொருள் ஒழிப்புப் பிரிவின் அதிகாரிகளுக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில், சந்தேகநபர் விமான நிலைய வளாகத்தில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளார்.

பிரதிப் பொலிஸ் மா அதிபர் அசோக தர்மசேனவின் ஆலோசனையின் பேரில், பொலிஸ் போதைப்பொருள் ஒழிப்புப் பிரிவின் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் எச்.எம்.சி.பி. ஹேரத்தின் கண்காணிப்பின் கீழ் மேலதிக விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

சந்தேகநபர் இன்று (30) நீர்கொழும்பு நீதவான் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்படவுள்ளார்.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

2027 இல் கடும் மின் தட்டுப்பாடு! – பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு எச்சரிக்கை!!

2027 ஆம் ஆண்டின் முதல் காலாண்டில் நாட்டில் மின்சாரத்திற்கான தட்டுப்பாடு ஏற்படக்கூடும் என பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு எதிர்வுகூறியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பெஸ்ட் எனர்ஜி (First Energy) நிறுவனத்தின்…

82 0 0
இலங்கை செய்திகள்

225 லட்சம் மதிப்புள்ள ஐஸ் போ@தைப்பொருளுடன் இளைஞர் ஒருவர் கைது!

கிரிந்திவெல பகுதியில் கணேமுல்ல பொலிஸாரால் மேற்காள்ளப்பட்ட விசேட நடவடிக்கையின் போது, 225 லட்சம் ரூபா பெறுமதியான ‘ஐஸ்’ போதைப்பொருள் கைப்பற்றப்பட்டுள்ளது. கிடைத்த இரகசியத் தகவலின் அடிப்படையில் இந்த…

85 0 0
இலங்கை செய்திகள்

திருகோணமலை – ஹபரணை பிரதான வீதியில் விபத்து : ஒருவர் உயி@ரிழப்பு!

திருகோணமலை – ஹபரணை பிரதான வீதியின் இன்று (03) நண்பகல் இடம்பெற்ற விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார். சிற்றூந்து ஒன்றும் முச்சக்கரவண்டி ஒன்றும் நேருக்கு நேர் மோதியதில் இந்த…

76 0 0
இலங்கை செய்திகள்

ஹெரோயினுடன் 14 பேர் கைது!

ஹெரோயின் போதைப்பொருளுடன் 14 பேரை ஹிங்குரக்கொடை பொலிஸார் கைது செய்துள்ளனர். ஹிங்குரக்கொடை தலைமையக பொலிஸாரும் ஹிங்குரக்கொடை விமானப்படை அதிகாரிகளும் இணைந்து நேற்று (02) மேற்கொண்ட திடீர் சோதனை…

63 0 0