உள்ளடக்கத்திற்குச் செல்க
அக்டோபர் 2026
8 வியாழன்
842 பேர் இப்போது பார்க்கின்றனர்

மனிதர்களைக் கொ@ல்வதை விடுத்து அவர்களை வாழ வைக்க வேண்டும்! : சஜித் வலியுறுத்தல்!!

இலங்கை செய்திகள் 1 வாரம் முன்
87 பார்வைகள்

நாட்டில் மனிதர்களைப் படுகொ@லை செய்வதை விட, மனிதர்களை வாழ வைக்கும் நடவடிக்கைகளே முன்னெடுக்கப்பட வேண்டும் என்று எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ வலியுறுத்தினார்.

ரத்மலானை கொத்தலாவலபுர ஸ்ரீ விஜித்தாராம விகாரையில் நிர்மாணிக்கப்படும் தங்கவேலித் தாழ்வாரத்துடன் கூடிய போதிப் பிரகாரத்துக்கு அடிக்கல் நாட்டு விழா இன்று நடைபெற்றது. இதில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அவர் அங்கு மேலும் தெரிவிக்கையில்,

“நேற்றைய தினமும் பத்தேகம பகுதியில் துப்பாக்கிச்சூட்டுச் சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது. இது சட்டம், ஒழுங்கு மற்றும் தேசிய பாதுகாப்பு சார்ந்த பிரச்சினை மாத்திரமன்றி, சமூகத்தில் ஏற்படும் பாரிய சீரழிவாகவும் இதனைப் பார்க்க வேண்டியுள்ளது.

நாட்டில் மனிதர்களைக் கொல்வதை விடுத்து, மனிதனை வாழ வைக்கும் நடவடிக்கைகளே நடக்க வேண்டும். பிரச்சினைகள் மற்றும் நெருக்கடிகள் எழும் போது பேச்சுகள், கருத்துப் பரிமாற்றங்கள் ஊடாக முன்னேற்றம் கண்டுள்ள முறைமைகளின் ஊடாகச் சிந்தித்துத் தீர்வுகளைக் காண வேண்டும்.

இலங்கையில் 14 ஆயிரத்து 129 விகாரைகளும், 10,347 அறநெறி பாடசாலைகளும், 824 பிரிவெனாக்களும், 327 சாசனாரக்‌ஷ சபைகளும் காணப்படுகின்றன. வெறும் காட்சிப்படுத்தப்படும் பௌத்தத்தை விடுத்து, நடைமுறைப் பௌத்தமே தற்சமயம் நாட்டுக்கு அவசியமாகும்.

விகாரை முறைமையை மேம்படுத்தி, மகா சங்கரத்தினரைப் பாதுகாத்து, அறநெறி பாடசாலை கட்டமைப்பை வலுப்படுத்தி, தர்மத்தால் நிரப்பப்பட்ட குடிமக்கள் பரம்பரையை நாகரிகமான, பண்பட்ட, ஒளிமயமான சிறந்த குடிமக்களாக மாற்ற வேண்டும்.

சுதந்திர நாட்டில் பண்பட்ட குடிமக்களை உருவாக்குவதற்கு அறநெறிப் பாடசாலைகள் உறுதுணையாகக் காணப்படுகின்றன. கிராமத்திலும் நகரத்திலுமுள்ள விகாரைகள் மற்றும் ஏனைய மதங்கள் மற்றும் கலாச்சாரங்களுக்கு உரித்தான மதத் தலங்களும் பண்பட்ட குடிமக்களை உருவாக்குவதில் பெரும் பங்கு வகிப்பதால், இந்த மதத் தலங்கள் அனைத்தையும் பலப்படுத்த வேண்டும்.” – என்றார்.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

குடும்பஸ்தர் கொ**லை; பெண் உட்பட 7 பேர் கைது.!

அனுராதபுரம், இராஜங்கனைப் பகுதியில் காணித் தகராறு காரணமாகக் குடும்பஸ்தர் ஒருவர் கூரிய ஆயுதத்தால் வெட்டிக் கொலை செய்யப்பட்டுள்ளார். இராஜங்கனைப் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட யாயா 15 பகுதியில் நேற்று…

49 0 0
இலங்கை செய்திகள்

பௌத்த சமூகத்தின் மீது மறைமுகத் தாக்குதல்.!

சிங்கள பௌத்த சமூகத்தின் மீது அரசு மேற்கொண்டுவரும் மறைமுகத் தாக்குதல்களுக்கு எதிராக மகா சங்கத்தினர் அனைவரும் அரசியல் பேதங்களைக் கடந்து ஒன்றிணைய வேண்டும் என்று ஐக்கிய மக்கள்…

53 0 0
இலங்கை செய்திகள்

மனைவியைப் பார்வையிட சிறைக்கு ஓடிய மஹிந்த.!

இலஞ்ச, ஊழல் குற்றச்சாட்டுகளை விசாரணை செய்யும் ஆணைக்குழுவினால் கைது செய்யப்பட்டு நீதிமன்ற உத்தரவின் பேரில் வெலிக்கடை மகசின் சிறைச்சாலையில் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள முன்னாள் முதல் பெண்மணி ஷிராந்தி…

54 0 0
இலங்கை செய்திகள்

வடக்கு, கிழக்கில் ‘ஆயுபோவன்’ வரவேற்புக்கு இனி இடமில்லை.!

வடக்கு, கிழக்கு மாகாணங்களில் உள்ள நட்சத்திர ஹோட்டல்களுக்கு வரும் சுற்றுலாப் பயணிகளை ‘வணக்கம்’ எனக் கூறி வரவேற்கும் பாரம்பரிய முறைக்குப் பதிலாக, ‘ஆயுபோவன்’ எனச் சிங்கள மொழியில்…

52 0 0