உள்ளடக்கத்திற்குச் செல்க
அக்டோபர் 2026
8 வியாழன்
842 பேர் இப்போது பார்க்கின்றனர்

பிள்ளையானுக்கு மீண்டும் விளக்கமறியல்!!

இலங்கை செய்திகள் 1 வாரம் முன்
81 பார்வைகள்

மட்டக்களப்பு மாவட்டத்தில் நடைபெற்ற ஐந்து கொலைக்குற்றச்சாட்டுகள் தொடர்பில் முன்னாள் இராஜாங்க அமைச்சர் சிவனேசதுரை சந்திரகாந்தன் (பிள்ளையான்) உட்பட மூவரை எதிர்வரும் ஒக்டோபர் 13திகதி வரை தொடர்ந்தும் விளக்கமறியலில் வைக்குமாறு மட்டக்களப்பு நீதிவான் நீதிமன்றம் இன்று (29) உத்தரவிட்டது.

மட்டக்களப்பு நீதிவான் நீதிமன்ற நீதிபதி தர்சினி அன்னாத்துரை முன்னிலையில் நடைபெற்ற இன்றைய வழக்கு விசாரணை இடம்பெற்றது. இதன்போது போது, வழக்கின் 3ம் சந்தேக நபரான சி.சந்திரகாந்தன் பிள்ளையானை வெலிசர கடற்படை முகாம் சிறைச்சாலையில் இருந்து நிகழ்நிலை மூலம் Online மூலம் ஆயர்ப்படுத்தப்பட்டார்.

மேலும் இந்த வழக்கு தொடர்பாக கைதுசெய்யப்பட்டு மட்டக்களப்பு சிறைச்சாலை தடுப்புக்காவலில் வைக்கப்பட்டுள்ள மேலும் இரண்டு சந்தேகநபர்களும் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்டிருந்தனர்.

மேலும் இன்றைய தினம் குற்றப்புலனாய்வுப் திணைக்கள அதிகாரிகள் மன்றில் ஆஜராகி இருந்தனர். இதன்போது விசாரணை அறிக்கைகள் சம்ர்ப்பிப்பதற்கு மேலதிக காலம் தேவை என மன்றுக்கு சமர்ப்பிக்கப்பட்டது.

இதேவேளை வழக்கு எதிர்வரும் ஒக்டோபர் 13ம் திகதிக்கு வழக்கு ஒத்திவைக்கப்பட்டது
.
2008ஆம் ஆண்டு மட்டக்களப்பு மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இடம்பெற்ற ஐந்து கொலைச் சம்பவங்கள் தொடர்பில், முன்னாள் இராஜாங்க அமைச்சர் சிவனேசதுரை சந்திரகாந்தன் உள்ளிட்ட சந்தேகநபர்களுக்கு எதிராக குற்றப் புலனாய்வுத் திணைக்களம் வழக்குத் தாக்கல் செய்துள்ளது. இவ்வழக்கு கடந்த ஜூன் 15ஆம் திகதி நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டிருந்தது.

இவ்வழக்கில் மூன்றாவது சந்தேகநபராக பெயரிடப்பட்டுள்ள சந்திரகாந்தன், ஐந்து கொலைச் சம்பவங்கள் தொடர்பான மூன்று குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டுள்ளது.இது தொடர்பில் மேலும் இருவர் கைதுசெய்யப்பட்டிருந்த நிலையில் அவர்கள் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்டு தொடர்ந்து விளக்கமறியில் வழங்கப்பட்டுள்ளது.
குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தின் தகவலின்படி, 2008ஆம் ஆண்டு டி-56 ரக துப்பாக்கிகள் பயன்படுத்தி மேற்கொள்ளப்பட்டதாகக் கூறப்படும் கொலைச் சம்பவங்கள் தொடர்பில் விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

குடும்பஸ்தர் கொ**லை; பெண் உட்பட 7 பேர் கைது.!

அனுராதபுரம், இராஜங்கனைப் பகுதியில் காணித் தகராறு காரணமாகக் குடும்பஸ்தர் ஒருவர் கூரிய ஆயுதத்தால் வெட்டிக் கொலை செய்யப்பட்டுள்ளார். இராஜங்கனைப் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட யாயா 15 பகுதியில் நேற்று…

49 0 0
இலங்கை செய்திகள்

பௌத்த சமூகத்தின் மீது மறைமுகத் தாக்குதல்.!

சிங்கள பௌத்த சமூகத்தின் மீது அரசு மேற்கொண்டுவரும் மறைமுகத் தாக்குதல்களுக்கு எதிராக மகா சங்கத்தினர் அனைவரும் அரசியல் பேதங்களைக் கடந்து ஒன்றிணைய வேண்டும் என்று ஐக்கிய மக்கள்…

53 0 0
இலங்கை செய்திகள்

மனைவியைப் பார்வையிட சிறைக்கு ஓடிய மஹிந்த.!

இலஞ்ச, ஊழல் குற்றச்சாட்டுகளை விசாரணை செய்யும் ஆணைக்குழுவினால் கைது செய்யப்பட்டு நீதிமன்ற உத்தரவின் பேரில் வெலிக்கடை மகசின் சிறைச்சாலையில் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள முன்னாள் முதல் பெண்மணி ஷிராந்தி…

54 0 0
இலங்கை செய்திகள்

வடக்கு, கிழக்கில் ‘ஆயுபோவன்’ வரவேற்புக்கு இனி இடமில்லை.!

வடக்கு, கிழக்கு மாகாணங்களில் உள்ள நட்சத்திர ஹோட்டல்களுக்கு வரும் சுற்றுலாப் பயணிகளை ‘வணக்கம்’ எனக் கூறி வரவேற்கும் பாரம்பரிய முறைக்குப் பதிலாக, ‘ஆயுபோவன்’ எனச் சிங்கள மொழியில்…

52 0 0