உள்ளடக்கத்திற்குச் செல்க
நவம்பர் 2026
23 திங்கள்
4210 பேர் இப்போது பார்க்கின்றனர்

நுவரெலியாவில் மரக்கறி விளைச்சல் அமோகம்; விலையில் வீழ்ச்சி.!

இலங்கை செய்திகள் 2 மாதங்கள் முன்
171 பார்வைகள்

நுவரெலியா மாவட்டத்தில், மரக்கறி விலையில் ஏற்பட்டுள்ள வீழ்ச்சி காரணமாக, பெரும்பாதிப்பை எதிர்கொண்டுள்ளதாக, விவசாயிகள் கவலைத் தெரிவிக்கின்றனர்.

கடந்த இரண்டு மாதங்களுக்கு மேலாக நீடித்துவரும் இந்த விலை வீழ்ச்சியினால், பயிர்ச்செய்கைக்கு, செலவு செய்த பணத்தைக்கூட மீளப்பெற முடியாத துர்ப்பாக்கிய நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளதாக, விவசாயிகள் கவலைத் தெரிவிக்கின்றனர்.

இது தொடர்பில் மேலும் கூறியுள்ள அவர்கள்,
நுவரெலியா மாவட்டத்துக்கு உட்பட்ட பகுதிகளில் லீக்ஸ், கரட், ,பீட்ரூட் ஆகிய மரக்கறிகளே அதிகம் பயிரிடப்படுகின்றன. இவ்வாறு பயிரடப்படும் மரக்கறிகள் லீக்ஸ்(120), கரட்(150), பீட்ரூட் (160) எனும் மிகக் குறைந்த விலைக்கே விவசாயிகளிடமிருந்து கொள்வனவு செய்யப்படுகின்றன.

இதனால், பயிர்களுக்காக செலவு செய்யும் உற்பத்திக்கான செலவினத்தைகூட பெற முடியாத துர்ப்பாக்கிய நிலைக்கு தள்ளப்பட்டுள்ளோம்.

லீக்ஸ் கன்று ஒன்றின் விலை ஒரு ரூபாயாகும். அதனை நடுகை செய்து பராமரிக்க பத்து ரூபாய்க்கு மேலதிகமாக செலவளிக்க வேண்டியுள்ளது.

சந்தையில் ஒரு கிலோகிராம் கோவா 6 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகின்றது. இது எமக்கு பெரும் பாதிப்பாக அமைந்துள்ளது.

கடந்த வருடத்துடன் ஒப்பிடுகையில், இவ்வருடம் மரக்கறிகளின் விலை சடுதியாக குறைந்துள்ளது. எனவே, விவசாயத்துக்கு முக்கியத்துவம் வழங்கி வருகின்ற நல்லாட்சி அரசாங்கம், நுவரெலியா மற்றும் வெலிமடை போன்ற பகுதிகளின் விவசாயிகள் மீது, கரிசனைக்காட்ட வேண்டும்” என்று கோரியுள்ளனர்.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

விளம்பரம்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

கோப்பாய் மாவீரர் துயிலுமில்லம் முன்பாக மாவீரர் நினைவாலயம் திறந்து வைப்பு!

கோப்பாய் மாவீரர் துயிலுமில்லம் முன்பாக மாவீரர்களின் திருவுருவப் படங்கள் மற்றும் பெயர்கள் பொறிக்கப்பட்ட நினைவாலயம் இன்று திறந்து வைக்கப்பட்டுள்ளது. பொதுச்சுடர் ஏற்றப்பட்டு, மலர்வணக்கம் செலுத்தப்பட்டதைத் தொடர்ந்து மக்கள்…

161 0 0
இலங்கை செய்திகள்

யாழ்ப்பாணம் பண்ணைப் பகுதியில் விபத்து!

யாழ்ப்பாணம் பண்ணை சுற்றுவட்டப் பகுதியில் இன்று (22) இரவு 7 மணியளவில் கட்டுப்பாட்டை இழந்த சிறிய ரக மகிழுந்து ஒன்று, வீதியோரத்தில் நிறுத்தப்பட்டிருந்த 10 இற்கும் மேற்பட்ட…

149 0 0
இலங்கை செய்திகள்

கூகுள் வரைபடத்தை அடிப்படையாகக் கொண்டு அபகரிக்கப்பட்ட காணிகளை மக்களுக்கு மீள வழங்க வேண்டும்!

வடக்கு மாகாணத்தில் வனப் பாதுகாப்புத் திணைக்களம், வனஜீவராசிகள் திணைக்களம் மற்றும் தொல்பொருள் திணைக்களம் ஆகிய அரச நிறுவனங்களின் வசமுள்ள காணிகளை மக்களுக்கு விடுவிக்க நடவடிக்கை எடுக்குமாறு ஈ.பி.டி.பி.…

139 0 0
இலங்கை செய்திகள்

மழையை நம்பி மேற்கொள்ளப்பட்ட காலபோக நெற்ச்செய்கை மழையின்மையால் பாதிப்பு

கிளிநொச்சி மாவட்டத்தில் 2026 /.2027 ஆம் ஆண்டுக்கான பெரும் போகநெற்செய்கை கொள்ளப்பட்டுள்ள நிலையில் கிளிநொச்சி நெத்தலியாறு பகுதியில் மழையை நம்பி நெற்செய்கை மேற்கொண்ட விவசாயிகள் பாதிக்கப்பட்டுள்ளனர். விவசாய…

138 0 0