உள்ளடக்கத்திற்குச் செல்க
அக்டோபர் 2026
8 வியாழன்
842 பேர் இப்போது பார்க்கின்றனர்

கனிய மணல் அகழ்வுக்கு திருக்கோவில் உதயசூரியன் விளையாட்டுக் கழகம் எதிர்ப்பு

இலங்கை செய்திகள் 1 வாரம் முன்
118 பார்வைகள்

அம்பாறை மாவட்டம், திருக்கோவில் பிரதேசத்தின் சுற்றுச்சூழல் மற்றும் சமூக நலனைப் பாதுகாக்கும் நோக்கில், கனிய மணல் அகழ்வுக்கு எதிராக தமது நிலைப்பாட்டை திருக்கோவில் உதயசூரியன் விளையாட்டுக் கழகம் பகிரங்கமாக அறிவித்துள்ளது.

திருக்கோவில் உதயசூரியன் விளையாட்டுக் கழகம் விளையாட்டு நடவடிக்கைகளில் மாத்திரம் கவனம் செலுத்தும் அமைப்பாக இல்லாமல், திருக்கோவில் பிரதேசத்தின் சமூக நலனிலும் அக்கறை கொண்டுள்ள கழகமாக செயற்பட்டு வருவதாக அதன் தலைவர் தெரிவித்துள்ளார்.

இந்நிலையில், திருக்கோவில் பிரதேசத்தின் இயற்கை வளங்களுக்கு பாதிப்பை ஏற்படுத்தக்கூடிய கனிய மணல் அகழ்வுடன் தொடர்புடைய நிறுவனங்கள் பல்வேறு பெயர்களில் சமூக அமைப்புகள் மற்றும் விளையாட்டுக் கழகங்களின் ஊடாக தமது நோக்கங்களை முன்னெடுக்க முயற்சிப்பதாக கழகம் தெரிவித்துள்ளது.

இதன் காரணமாக, கனிய மணல் அகழ்வில் ஈடுபடும் நிறுவனங்களின் அனுசரணையுடன் நடத்தப்படும் சுற்றுப்போட்டிகளில் தமது கழகம் பங்கேற்காது என உதயசூரியன் விளையாட்டுக் கழகம் பகிரங்கமாக அறிவித்துள்ளது.

மேலும், சுற்றுச்சூழலைப் பாதுகாப்பது எதிர்கால சமூக நலனை உறுதிப்படுத்தும் எனவும், ஒவ்வொருவரும் சமூகப் பொறுப்புடன் செயற்பட்டால் சமூகத்தின் நலனும் வளர்ச்சியும் உறுதி செய்யப்படும் எனவும் கழகம் வலியுறுத்தியுள்ளது.

“சுற்றுச் சூழலை காப்பதே எதிர்கால சமூக நலனை உறுதிப்படுத்தும்” என்ற நிலைப்பாட்டுடன் இந்த அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

புதிய மதுபானசாலை அனுமதிக்கு எதிராக கொதித்தெழுந்த வலிகாமம் வடக்கு மக்கள்.!

மதுபானசாலைகளற்ற பிரதேசமாகக் கருதப்படும் வலிகாமம் வடக்குப் பகுதியில் புதிய மதுபானசாலைக்கு அனுமதி வழங்கப்பட்டமைக்கு எதிர்ப்புத் தெரிவித்து, பொது அமைப்புகளின் ஏற்பாட்டில் கண்டனப் பேரணி ஒன்று இன்று முன்னெடுக்கப்பட்டது.…

42 0 0
இலங்கை செய்திகள்

விசேட பாதுகாப்புடன் சிறையில் ஷிராந்தி.!

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் மனைவியும் முன்னாள் முதல் பெண்மணியுமான ஷிராந்தி ராஜபக்ஷ, எதிர்வரும் 13 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள நிலையில், வெலிக்கடை மகசின்…

43 0 0
இலங்கை செய்திகள்

குடும்பஸ்தர் கொ**லை; பெண் உட்பட 7 பேர் கைது.!

அனுராதபுரம், இராஜங்கனைப் பகுதியில் காணித் தகராறு காரணமாகக் குடும்பஸ்தர் ஒருவர் கூரிய ஆயுதத்தால் வெட்டிக் கொலை செய்யப்பட்டுள்ளார். இராஜங்கனைப் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட யாயா 15 பகுதியில் நேற்று…

50 0 0
இலங்கை செய்திகள்

பௌத்த சமூகத்தின் மீது மறைமுகத் தாக்குதல்.!

சிங்கள பௌத்த சமூகத்தின் மீது அரசு மேற்கொண்டுவரும் மறைமுகத் தாக்குதல்களுக்கு எதிராக மகா சங்கத்தினர் அனைவரும் அரசியல் பேதங்களைக் கடந்து ஒன்றிணைய வேண்டும் என்று ஐக்கிய மக்கள்…

55 0 0