உள்ளடக்கத்திற்குச் செல்க
அக்டோபர் 2026
8 வியாழன்
842 பேர் இப்போது பார்க்கின்றனர்

லலித், குகன் காணாமல் ஆக்கப்பட்ட வழக்கு; கோட்டாபய ராஜபக்ஷ நீதிமன்றத்தில் முன்னிலை.!

இலங்கை செய்திகள் 1 வாரம் முன்
107 பார்வைகள்

யாழ்ப்பாணத்தில் கடந்த 2011ஆம் ஆண்டு மனித உரிமைச் செயற்பாட்டாளர்களான லலித் குமார் வீரராஜ் மற்றும் குகன் முருகானந்தன் ஆகியோர் காணாமல் ஆக்கப்பட்டமை தொடர்பான வழக்கில் சாட்சியமளிப்பதற்காக, முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ இன்று (செப்டம்பர் 29) கொழும்பு தலைமை நீதவான் நீதிமன்றத்தில் முன்னிலையானார்.

கடந்த 2011ஆம் ஆண்டு டிசெம்பர் மாதம் யாழ்ப்பாணத்தில் வைத்து மக்கள் விடுதலை முன்னணியின் பிரிவொன்றாகச் செயற்பட்ட முன்னிலை சோசலிசக் கட்சியின் செயற்பாட்டாளர்களான லலித் குமார் வீரராஜ் மற்றும் குகன் முருகானந்தன் ஆகியோர் கடத்தப்பட்டு காணாமல் ஆக்கப்பட்டனர்.

இச்சம்பவம் இடம்பெற்ற காலப்பகுதியில் கோட்டாபய ராஜபக்ஷ நாட்டின் பாதுகாப்புச் செயலாளராக கடமையாற்றியிருந்தார்.

இதன் காரணமாக, இவ்வழக்கு தொடர்பான விசாரணைக்காக சாட்சியமளிக்குமாறு முதன்முதலில் கடந்த 2019ஆம் ஆண்டு செப்டம்பர் 27 அன்று யாழ்ப்பாணம் நீதவான் நீதிமன்றத்தினால் இவருக்கு அழைப்பாணை விடுக்கப்பட்டிருந்தது.

எனினும், தனது உயிருக்கு அச்சுறுத்தல் இருப்பதாகத் தெரிவித்து அவர் நீதிமன்றத்தில் முன்னிலையாகத் தொடர்ந்து தயக்கம் காட்டி வந்த நிலையில், பாதுகாப்புக் காரணங்களைக் சுட்டிக்காட்டி மின்னணு ஊடகக் காணொளி வழிகள் மூலம் முன்னிலையாக அனுமதிக்குமாறு அவரது தரப்பினால் கோரிக்கை விடுக்கப்பட்டது.

அக் கோரிக்கையை ஏற்று, தொலைதூரத்தில் இருந்து சாட்சியமளிக்க இந்த ஆண்டின் தொடக்கத்தில் நீதிமன்றம் அவருக்கு அனுமதி வழங்கியிருந்தது.

இதனைத் தொடர்ந்து, கொழும்பு தலைமை நீதவான் நீதிமன்றத்தில் இருந்தவாறு காணொளித் தொழில்நுட்பம் (Video Link) ஊடாக இன்று சாட்சியமளிக்குமாறு கடந்த ஓகஸ்ட் மாதம் யாழ்ப்பாணம் நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது.

அதற்கமைய, முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ கொழும்பு தலைமை நீதவான் நீதிமன்றத்திற்கு வருகை தந்து, நேரலை காணொளி வாயிலாக யாழ்ப்பாணம் நீதவான் நீதிமன்றத்திற்குத் தனது சாட்சியத்தை பதிவு செய்தார்.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

வட மாகாண பனை வடிசாலைகளின் பிரச்சினைகளுக்கு சாதகமான தீர்வு!

வட மாகாணத்தில் பனைசார் உற்பத்தித் துறையைப் பாதிக்கும் வகையில் அதிகரிக்கப்பட்டுள்ள வரி மற்றும் கட்டணங்களை மீளாய்வு செய்து, உற்பத்தியாளர்களுக்கு சாதகமான தீர்வொன்றை பெற்றுக்கொடுப்பதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படவுள்ளன. யாழ்ப்பாண…

67 0 0
இலங்கை செய்திகள்

இலங்கையில் உயரடுக்கு அரசியல் கலாசாரத்திற்கு முற்றுப்புள்ளி : சமீர பெரேரா கருத்து

இலங்கையின் அரசியல் வரலாற்றில் நேற்று ஒரு புதிய அத்தியாயம் தொடங்‌கப்பட்டுள்ளதாகவும், நாட்டில் நிலவிவந்த உயரடுக்கு அரசியல் கலாசாரம் இதன் மூலம் முற்றாக முடிவுக்குக் கொண்டுவரப்பட்டுள்ளதாகவும் ‘ஜனநாயகத்திற்கான சிவில்…

58 0 0
இலங்கை செய்திகள்

புதிய மதுபானசாலை அனுமதிக்கு எதிராக கொதித்தெழுந்த வலிகாமம் வடக்கு மக்கள்.!

மதுபானசாலைகளற்ற பிரதேசமாகக் கருதப்படும் வலிகாமம் வடக்குப் பகுதியில் புதிய மதுபானசாலைக்கு அனுமதி வழங்கப்பட்டமைக்கு எதிர்ப்புத் தெரிவித்து, பொது அமைப்புகளின் ஏற்பாட்டில் கண்டனப் பேரணி ஒன்று இன்று முன்னெடுக்கப்பட்டது.…

48 0 0
இலங்கை செய்திகள்

விசேட பாதுகாப்புடன் சிறையில் ஷிராந்தி.!

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் மனைவியும் முன்னாள் முதல் பெண்மணியுமான ஷிராந்தி ராஜபக்ஷ, எதிர்வரும் 13 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள நிலையில், வெலிக்கடை மகசின்…

46 0 0