உள்ளடக்கத்திற்குச் செல்க
அக்டோபர் 2026
8 வியாழன்
842 பேர் இப்போது பார்க்கின்றனர்

கல்முனை அஷ்ரஃப் ஞாபகார்த்த வைத்தியசாலையில் ‘டிஜிட்டல் மற்றும் சுகாதார தகவல் பிரிவு’ திறந்து வைப்பு.!

இலங்கை செய்திகள் 1 வாரம் முன்
107 பார்வைகள்

கல்முனை அஷ்ரஃப் ஞாபகார்த்த வைத்தியசாலையின் டிஜிட்டல் தேவைகளைத் திறம்பட நிறைவேற்றும் நோக்கில் உருவாக்கப்பட்ட ‘டிஜிட்டல் மற்றும் சுகாதார தகவல் பிரிவு’ (Digital and Health Information Unit) நேற்று திங்கட்கிழமை (28) உத்தியோகபூர்வமாகத் திறந்து வைக்கப்பட்டது.

வைத்தியசாலையின் வைத்திய அத்தியட்சகர் டாக்டர் ஐ.எல்.எம். றிபாஸ் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில், அவராலேயே இப் புதிய பிரிவு நாடா வெட்டித் திறந்து வைக்கப்பட்டது.

இந்நிகழ்வில் பதில் வைத்திய அத்தியட்சகர் டாக்டர் ஏ.எல்.பாறூக், தர முகாமைத்துவ வைத்திய அதிகாரி டாக்டர் ஏ.ஆர்.எம். அஸ்மி, கணக்காளர் யூ.எல். ஜவாஹிர், நிர்வாக உத்தியோகத்தர் ஏ. பௌமி அஸ்மின் உட்பட வைத்தியசாலையின் பல்வேறு பிரிவுகளையும் சேர்ந்த அரச உத்தியோகத்தர்கள், வைத்தியர்கள் மற்றும் ஊழியர்கள் பலரும் கலந்துகொண்டனர்.

இப் புதிய பிரிவின் திறப்பு விழாவைத் தொடர்ந்து கருத்துத் தெரிவித்த வைத்தியசாலை நிர்வாகத்தினர், இப் பிரிவின் ஊடாக வைத்தியசாலையின் டிஜிட்டல் சேவைகள் மற்றும் சுகாதாரத் தகவல் முகாமைத்துவ நடவடிக்கைகள் மேலும் துரிதப்படுத்தப்பட்டு வலுப்படுத்தப்படும் எனத் தெரிவித்தனர்.

அத்துடன், நவீன தகவல் தொழில்நுட்பத்தின் அடிப்படையிலான சுகாதார சேவைகளை நோயாளர்களுக்கும் பொதுமக்களுக்கும் மிக இலகுவாகவும் விரைவாகவும் வழங்குவதற்குக் கட்டமைப்பு ரீதியான பல மேலதிக நடவடிக்கைகளும் முன்னெடுக்கப்பட்டு வருவதாகச் சுட்டிக்காட்டப்பட்டது.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

காவி ஆடைக்குத் தீ வைக்க வேண்டாம்! : துமிந்த திசாநாயக்க எச்சரிக்கை!!

அமைச்சரவை அந்தஸ்துள்ள முன்னாள் அமைச்சரும் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் பொதுச்செயலாளருமான துமிந்த திசாநாயக்க, இன்றைய தினம் கட்சித் தலைமையகத்தில் நடைபெற்ற நிகழ்வொன்றின் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்தார்.…

61 0 0
இலங்கை செய்திகள்

வட மாகாண பனை வடிசாலைகளின் பிரச்சினைகளுக்கு சாதகமான தீர்வு!

வட மாகாணத்தில் பனைசார் உற்பத்தித் துறையைப் பாதிக்கும் வகையில் அதிகரிக்கப்பட்டுள்ள வரி மற்றும் கட்டணங்களை மீளாய்வு செய்து, உற்பத்தியாளர்களுக்கு சாதகமான தீர்வொன்றை பெற்றுக்கொடுப்பதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படவுள்ளன. யாழ்ப்பாண…

69 0 0
இலங்கை செய்திகள்

இலங்கையில் உயரடுக்கு அரசியல் கலாசாரத்திற்கு முற்றுப்புள்ளி : சமீர பெரேரா கருத்து

இலங்கையின் அரசியல் வரலாற்றில் நேற்று ஒரு புதிய அத்தியாயம் தொடங்‌கப்பட்டுள்ளதாகவும், நாட்டில் நிலவிவந்த உயரடுக்கு அரசியல் கலாசாரம் இதன் மூலம் முற்றாக முடிவுக்குக் கொண்டுவரப்பட்டுள்ளதாகவும் ‘ஜனநாயகத்திற்கான சிவில்…

59 0 0
இலங்கை செய்திகள்

புதிய மதுபானசாலை அனுமதிக்கு எதிராக கொதித்தெழுந்த வலிகாமம் வடக்கு மக்கள்.!

மதுபானசாலைகளற்ற பிரதேசமாகக் கருதப்படும் வலிகாமம் வடக்குப் பகுதியில் புதிய மதுபானசாலைக்கு அனுமதி வழங்கப்பட்டமைக்கு எதிர்ப்புத் தெரிவித்து, பொது அமைப்புகளின் ஏற்பாட்டில் கண்டனப் பேரணி ஒன்று இன்று முன்னெடுக்கப்பட்டது.…

50 0 0