ஆசிய விளையாட்டுப் போட்டிகள்: ஆண்களுக்கான கிரிக்கெட்டில் அரையிறுதிக்கு முன்னேறியது இலங்கை!
ஜப்பானின் நிஷின் நகரில் நடைபெற்று வரும் ஆசிய விளையாட்டுப் போட்டிகளின் ஆண்களுக்கான கிரிக்கெட் தொடரின் 3ஆவது காலிறுதிப் போட்டி மழை காரணமாக இரத்துச் செய்யப்பட்டதைத் தொடர்ந்து, இலங்கை அணி அரையிறுதிப் போட்டிக்குத் தகுதிபெற்றுள்ளது.
இலங்கை மற்றும் நேபாள அணிகளுக்கு இடையிலான இந்தப்போட்டி மழையினால் கைவிடப்பட்ட நிலையைத் தொடர்ந்து, சர்வதேசத் தரவரிசையில் உயர் இடத்தில் உள்ளதன் அடிப்படையில் (Higher Ranked Team) இலங்கை அணி அரையிறுதிக்கு முன்னேறியுள்ளது.