உள்ளடக்கத்திற்குச் செல்க
அக்டோபர் 2026
8 வியாழன்
842 பேர் இப்போது பார்க்கின்றனர்

மக்களை ஏழ்மை நிலையில் வைத்து அரசியல் செய்யும் பழக்கத்தில்தான் எதிர்க்கட்சியினர் இன்னும் உள்ளனர்.!

இலங்கை செய்திகள் 1 வாரம் முன்
88 பார்வைகள்

நாட்டு மக்களைத் தொடர்ச்சியாக ஏழ்மை நிலையிலேயே வைத்துக் கொண்டு, அதன்மூலம் அரசியல் செய்யும் மனநிலையில்தான் எதிர்க்கட்சியினர் இன்றும் உள்ளனர் என்றும், நிலையான அபிவிருத்திகள் குறித்து அவர்கள் சிந்திப்பதில்லை என்றும் சுற்றாடல் துறை அமைச்சர் தம்மிக பட்டபெந்தி குற்றம் சாட்டினார்.

கொழும்பில் நேற்று திங்கட்கிழமை நடைபெற்ற நிகழ்வொன்றில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அவர் அங்கு மேலும் தெரிவிக்கையில்,
“நிறைவடைந்த இரண்டு ஆண்டு காலப்பகுதியில் நாட்டின் பொருளாதார மீட்சிக்கு முன்னுரிமை வழங்கி, அதற்குரிய நடவடிக்கைகளை அரசு முன்னெடுத்துள்ளது. அந்தத் திட்டங்கள் தற்போது வெற்றியடைந்துள்ளன.

மீதமுள்ள பதவிக்காலத்தில் மக்களுக்கு வழங்கிய அனைத்து வாக்குறுதிகளும் நிறைவேற்றப்படும். பொருளாதார ஸ்திரத்தன்மையை முழுமையாக உறுதிப்படுத்திக் கொண்டுதான் ஏனைய சகல பணிகளையும் முன்னெடுக்க வேண்டியுள்ளது.

மக்களுக்கு 5 ஆயிரம் ரூபாய் நிவாரணம் வழங்குவதும், அத்தியாவசிய உணவுப் பொருட்களை வழங்குவதும், தகரம் வழங்குவதும் மட்டுமே அபிவிருத்தி என்று எதிர்க்கட்சியினர் கருதுகின்றார்கள். இது முற்றிலும் தவறானது.

மக்களை அடிமட்டத்தில் வைத்துக்கொண்டு, அவர்களைச் சுட்டிக்காட்டி அரசியல் செய்ய முயற்சிப்பது ஒரு முறையற்ற அரசியல் கலாச்சாரமாகும். இந்தத் தன்மை முற்றாக மாற்றம் பெற வேண்டும். பொருளாதார முன்னேற்றம் மற்றும் அபிவிருத்தித் திட்டங்கள் ஊடாகவே மக்களுக்கு நிலையான நிவாரணத்தை வழங்க முடியும்.

சமூகக் கட்டமைப்பில் காணப்படும் அடிப்படைப் பிரச்சினைகள் மற்றும் சிக்கல்களுக்கு அமைச்சு மட்டத்தில் விசேட கவனம் செலுத்தப்படும்.

யாருக்கு உண்மையாக நிவாரணம் வழங்க வேண்டும் என்பது தற்போது முறையாக அடையாளப்படுத்தப்பட்டுள்ளது. அதற்கமைவாகவே எதிர்கால நலன்புரித் திட்டங்கள் முன்னெடுக்கப்படும்.” – என்றார்.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

காவி ஆடைக்குத் தீ வைக்க வேண்டாம்! : துமிந்த திசாநாயக்க எச்சரிக்கை!!

அமைச்சரவை அந்தஸ்துள்ள முன்னாள் அமைச்சரும் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் பொதுச்செயலாளருமான துமிந்த திசாநாயக்க, இன்றைய தினம் கட்சித் தலைமையகத்தில் நடைபெற்ற நிகழ்வொன்றின் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்தார்.…

71 0 0
இலங்கை செய்திகள்

வட மாகாண பனை வடிசாலைகளின் பிரச்சினைகளுக்கு சாதகமான தீர்வு!

வட மாகாணத்தில் பனைசார் உற்பத்தித் துறையைப் பாதிக்கும் வகையில் அதிகரிக்கப்பட்டுள்ள வரி மற்றும் கட்டணங்களை மீளாய்வு செய்து, உற்பத்தியாளர்களுக்கு சாதகமான தீர்வொன்றை பெற்றுக்கொடுப்பதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படவுள்ளன. யாழ்ப்பாண…

72 0 0
இலங்கை செய்திகள்

இலங்கையில் உயரடுக்கு அரசியல் கலாசாரத்திற்கு முற்றுப்புள்ளி : சமீர பெரேரா கருத்து

இலங்கையின் அரசியல் வரலாற்றில் நேற்று ஒரு புதிய அத்தியாயம் தொடங்‌கப்பட்டுள்ளதாகவும், நாட்டில் நிலவிவந்த உயரடுக்கு அரசியல் கலாசாரம் இதன் மூலம் முற்றாக முடிவுக்குக் கொண்டுவரப்பட்டுள்ளதாகவும் ‘ஜனநாயகத்திற்கான சிவில்…

64 0 0
இலங்கை செய்திகள்

புதிய மதுபானசாலை அனுமதிக்கு எதிராக கொதித்தெழுந்த வலிகாமம் வடக்கு மக்கள்.!

மதுபானசாலைகளற்ற பிரதேசமாகக் கருதப்படும் வலிகாமம் வடக்குப் பகுதியில் புதிய மதுபானசாலைக்கு அனுமதி வழங்கப்பட்டமைக்கு எதிர்ப்புத் தெரிவித்து, பொது அமைப்புகளின் ஏற்பாட்டில் கண்டனப் பேரணி ஒன்று இன்று முன்னெடுக்கப்பட்டது.…

60 0 0