உள்ளடக்கத்திற்குச் செல்க
அக்டோபர் 2026
8 வியாழன்
842 பேர் இப்போது பார்க்கின்றனர்

கொழும்பு கோட்டை – பேராதனை – கம்பளை இடையிலான புகையிரத சேவை ஒக்டோபர் 02 முதல் ஆரம்பம்.!

இலங்கை செய்திகள் 1 வாரம் முன்
130 பார்வைகள்

கொழும்பு கோட்டை – பேராதனை, கம்பளை இடையிலான புகையிரத சேவை எதிர்வரும் ஒக்டோபர் மாதம் 02 ஆம் திகதி முதல் ஆரம்பிக்கப்படவுள்ளதாக புகையிரத திணைக்களம் அறிவித்துள்ளது.

டித்வா புயல் தாக்கத்தினால் ரம்புக்கனை – கம்பளை வரையிலான புகையிரத பாதையில் 103 இடங்கள் சேதமடைந்திருந்தன. இவற்றில் 36 பகுதிகள் மண்சரிவு அனர்த்தத்தால் பாதிக்கப்பட்டிருந்தன.

தொடர்ச்சியான புனரமைப்புக்களைத் தொடர்ந்து கொழும்பு கோட்டை – பேராதனை, கம்பளை இடையிலான புகையிரத சேவை எதிர்வரும் ஒக்டோபர் மாதம் 02 ஆம் திகதி முதல் ஆரம்பிக்கப்படவுள்ளது.

கொழும்பு – பதுளை வரையிலான புகையிரத சேவையை அடுத்தாண்டுக்குள் முழுமையாக ஆரம்பிப்பதற்கு உரிய நடவடிக்கைகளை முன்னெடுக்கப்பட்டுள்ளதாக புகையிரத திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

காவி ஆடைக்குத் தீ வைக்க வேண்டாம்! : துமிந்த திசாநாயக்க எச்சரிக்கை!!

அமைச்சரவை அந்தஸ்துள்ள முன்னாள் அமைச்சரும் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் பொதுச்செயலாளருமான துமிந்த திசாநாயக்க, இன்றைய தினம் கட்சித் தலைமையகத்தில் நடைபெற்ற நிகழ்வொன்றின் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்தார்.…

71 0 0
இலங்கை செய்திகள்

வட மாகாண பனை வடிசாலைகளின் பிரச்சினைகளுக்கு சாதகமான தீர்வு!

வட மாகாணத்தில் பனைசார் உற்பத்தித் துறையைப் பாதிக்கும் வகையில் அதிகரிக்கப்பட்டுள்ள வரி மற்றும் கட்டணங்களை மீளாய்வு செய்து, உற்பத்தியாளர்களுக்கு சாதகமான தீர்வொன்றை பெற்றுக்கொடுப்பதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படவுள்ளன. யாழ்ப்பாண…

72 0 0
இலங்கை செய்திகள்

இலங்கையில் உயரடுக்கு அரசியல் கலாசாரத்திற்கு முற்றுப்புள்ளி : சமீர பெரேரா கருத்து

இலங்கையின் அரசியல் வரலாற்றில் நேற்று ஒரு புதிய அத்தியாயம் தொடங்‌கப்பட்டுள்ளதாகவும், நாட்டில் நிலவிவந்த உயரடுக்கு அரசியல் கலாசாரம் இதன் மூலம் முற்றாக முடிவுக்குக் கொண்டுவரப்பட்டுள்ளதாகவும் ‘ஜனநாயகத்திற்கான சிவில்…

63 0 0
இலங்கை செய்திகள்

புதிய மதுபானசாலை அனுமதிக்கு எதிராக கொதித்தெழுந்த வலிகாமம் வடக்கு மக்கள்.!

மதுபானசாலைகளற்ற பிரதேசமாகக் கருதப்படும் வலிகாமம் வடக்குப் பகுதியில் புதிய மதுபானசாலைக்கு அனுமதி வழங்கப்பட்டமைக்கு எதிர்ப்புத் தெரிவித்து, பொது அமைப்புகளின் ஏற்பாட்டில் கண்டனப் பேரணி ஒன்று இன்று முன்னெடுக்கப்பட்டது.…

59 0 0