உள்ளடக்கத்திற்குச் செல்க
செப்டம்பர் 2026
29 செவ்வாய்

அபிவிருத்தி உத்தியோகத்தர்களின் இடமாற்றம் தொடர்பில் அமைச்சர் சந்தன அபயரத்னவிடம் ரவிகரன் எம்.பி முன்வைத்த கோரிக்கை

இலங்கை செய்திகள் 6 மணி நேரம் முன்
106 பார்வைகள்

ஐந்து ஆண்டுகளுக்கு மேலாக தமது சொந்த மாவட்டங்களுக்கு வெளியே தொடர்ச்சியாகப் பணியாற்றிவரும் அபிவிருத்தி உத்தியோகத்தர்களின் இடமாற்றக் கோரிக்கைகள், பதிலீட்டு உத்தியோகத்தர்கள் இல்லையென்ற காரணத்தினால் தொடர்ந்தும் நிராகரிக்கப்படக்கூடாது என வன்னித் தேர்தல் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் துரைராசா ரவிகரன் வலியுறுத்தியுள்ளார்.

2027ஆம் ஆண்டுக்கான வருடாந்த இடமாற்றத் தீர்மானங்கள் இறுதி செய்யப்படுவதற்கு முன்னர் இவ்விடயம் தொடர்பில் விசேட கவனம் செலுத்துமாறு கோரி, பொது நிர்வாக, மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சருக்கு 2026.09.26 அன்று அவர் கடிதமொன்றை அனுப்பியுள்ளார்.

வடமாகாண அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் சங்கம் கடந்த 2026.09.09 அன்று ரவிகரன் எம்.பியிடம் முன்வைத்த கோரிக்கையின் தொடர்ச்சியாகவே குறித்த கடிதம் அனுப்பப்பட்டுள்ளது.

வடமாகாணத்தைச் சேர்ந்த கணிசமான அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் ஐந்து ஆண்டுகளுக்கும் மேலாக வெளிமாவட்டங்களில் தொடர்ச்சியாகப் பணியாற்றிவரும் நிலையில், பதிலீட்டு உத்தியோகத்தர்கள் இல்லாமையை காரணமாகக் கொண்டு அவர்களது 2027 வருடாந்த இடமாற்றக் கோரிக்கைகள் நடைமுறைப்படுத்தப்படாத நிலை காணப்படுவதாக அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் சங்கம் சுட்டிக்காட்டியுள்ளதாக ரவிகரன் எம்.பி தனது கடிதத்தில் தெரிவித்துள்ளார்.

குறிப்பாக, முல்லைத்தீவு மாவட்டத்தில் 99 இற்கும் மேற்பட்ட அபிவிருத்தி உத்தியோகத்தர்களும், கிளிநொச்சி மாவட்டத்தில் 140 இற்கும் மேற்பட்ட அபிவிருத்தி உத்தியோகத்தர்களும் ஐந்து ஆண்டுகளுக்கு மேலாக வெளிமாவட்டங்களில் பணியாற்றுவதாக சங்கத்தினால் வழங்கப்பட்ட தகவல்களையும் அவர் அமைச்சரின் கவனத்திற்குக் கொண்டுவந்துள்ளார்.

இந்தப் பிரச்சினை தொடர்பில் கடந்த 2026.07.08 அன்று பாராளுமன்ற வாய்மூல விடைக்கான வினாவின் போதும் தாம் கேள்வி எழுப்பியிருந்ததாக ரவிகரன் எம்.பி சுட்டிக்காட்டியுள்ளார். ஐந்து ஆண்டுகளுக்கு மேலாக ஒரே சேவை நிலையத்தில் பணியாற்றிய அபிவிருத்தி உத்தியோகத்தர்களின் இடமாற்றங்கள் பதிலீடு இல்லாமையால் இரத்துச் செய்யப்படுவது மற்றும் நியாயமான, வெளிப்படையான இடமாற்றக் கொள்கையை நடைமுறைப்படுத்துவது தொடர்பிலேயே அப்போது கேள்வி எழுப்பப்பட்டிருந்தது.

அதற்குப் பதிலளித்த அமைச்சர், இத்தகைய முறைப்பாடுகள் முன்னர் கிடைக்கப்பெறவில்லை எனவும், அவ்வாறான பிரச்சினைகள் ஏற்பட்டால் தேவையான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் எனவும் தெரிவித்திருந்ததுடன், வடமாகாணத்தின் ஐந்து மாவட்டங்களிலும் மேலதிகமான அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் காணப்படுவதால் இத்தகைய இடமாற்றங்களை மேற்கொள்வதில் தடை இருக்கக்கூடாது எனவும் தெரிவித்திருந்ததை ரவிகரன் எம்.பி தனது கடிதத்தில் நினைவுபடுத்தியுள்ளார்.

மேலும், கடந்த 2026.09.12 அன்று வடமாகாண ஆளுநர் செயலகத்தில் நடைபெற்ற வடமாகாண உள்ளூராட்சி மன்றங்களின் அபிவிருத்தி தொடர்பான விசேட கலந்துரையாடலில், முல்லைத்தீவு, மன்னார் மற்றும் கிளிநொச்சி மாவட்டங்களில் காணப்படும் அபிவிருத்தி உத்தியோகத்தர் வெற்றிடங்களை நிரப்புவதற்காக யாழ்ப்பாண மாவட்டத்தில் பத்து ஆண்டுகளுக்கும் மேலாக சேவையாற்றிய உத்தியோகத்தர்களை தற்காலிகமாக இணைப்புச் செய்வதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படும் என அமைச்சர் தெரிவித்ததாகவும் கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்தப் பின்னணியில் 2027 வருடாந்த இடமாற்ற நடைமுறையில், ஐந்து ஆண்டுகளுக்கு மேலாக தமது சொந்த மாவட்டங்களுக்கு வெளியே பணியாற்றும் அபிவிருத்தி உத்தியோகத்தர்களுக்கு முன்னுரிமை வழங்கப்பட வேண்டும் என ரவிகரன் எம்.பி கோரியுள்ளார்.

அத்துடன், பதிலீட்டு உத்தியோகத்தர்கள் இல்லை என்ற காரணத்தை மாத்திரம் அடிப்படையாகக் கொண்டு அவர்களது இடமாற்றக் கோரிக்கைகளை நிராகரிக்காமல், பதிலீட்டு உத்தியோகத்தர்களை ஒருங்கிணைந்த முறையில் ஏற்பாடு செய்வதுடன், இயலுமான சந்தர்ப்பங்களில் பரஸ்பர அல்லது பதிலீட்டு அடிப்படையிலான இடமாற்றங்களை நடைமுறைப்படுத்த வேண்டும் எனவும் அவர் வலியுறுத்தியுள்ளார்.

நீண்டகாலமாக வெளிமாவட்டங்களில் பணியாற்றிவரும் அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் தமது சொந்த மாவட்டங்களுக்கு இடமாற்றம் பெறக்கூடிய வகையில் உரிய நிர்வாகப் பொறிமுறையொன்றை ஏற்படுத்த வேண்டும் என்றும் அவர் அமைச்சரிடம் கோரியுள்ளார்.

எனவே, 2027ஆம் ஆண்டுக்கான வருடாந்த இடமாற்றத் தீர்மானங்கள் இறுதி செய்யப்படுவதற்கு முன்னர் இவ்விடயத்திற்கு விசேட கவனம் செலுத்தி, நீண்டகாலமாக வெளிமாவட்டங்களில் பணியாற்றும் அபிவிருத்தி உத்தியோகத்தர்களுக்கு நியாயமான இடமாற்ற வாய்ப்பை உறுதிப்படுத்துமாறு அமைச்சர் சந்தன அபயரத்னவிடம் ரவிகரன் எம்.பி கோரிக்கை விடுத்துள்ளார்.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

பத்தேகம துப்பாக்கிச் சூடு – ப@லி எண்ணிக்கை 3 ஆக உயர்வு!

காலி – பத்தேகமவில் நேற்று (27) இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டில் காயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்த பெண் ஒருவரும் உயிரிழந்தார். அவர் இன்றிரவு உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.…

106 0 0
இலங்கை செய்திகள்

திலீபனின் சிலை அகற்றப்பட்டமைக்கு எதிர்ப்புத் தெரிவித்து மன்னாரிலும் போராட்டம்!

யாழ்ப்பாணம் நல்லூர் பகுதியில் அமைக்கப்பட்டிருந்த தியாக தீபம் திலீபனின் உருவச் சிலை அகற்றப்பட்டமையைக் கண்டித்து மன்னாரில் போராட்டம் ஒன்று இன்று(28) திங்கட்கிழமை மாலை 3 மணியளவில் முன்னெடுக்கப்பட்டுள்ளது.…

108 0 0
இலங்கை செய்திகள்

மாந்தை மேற்கு பிரதேச செயலாளர் பிரிவில் மோட்டார் சைக்கிள் பேரணி

‘நாட்டை கட்டியெழுப்பும் இளைஞர் சக்தி’ என்ற தொனிப்பொருளில், நாடு தழுவிய ரீதியில் தேசிய மக்கள் சக்தி கட்சியின் சோசலிச இளைஞர் சங்கத்தால் இளைஞர்களை ஒழுங்குபடுத்தி நாட்டிற்கு தேவையான…

105 0 0
இலங்கை செய்திகள்

வைத்தியர் சுகுணனுக்கு எதிராக அவதூறான கருத்துக்களை பரப்பத் தடை!

கல்முனை வடக்கு ஆதார வைத்தியசாலையினுடைய பணிப்பாளர் வைத்தியர் சுகுணனைப் பற்றிய எந்தவொரு தடைசெய்யப்பட்ட கருத்துக்களையும் சமூக வலைத்தளங்களில் பதிவு செய்ய கூடாது எனவும் அக்டோபர் மாதம் 12ம்…

93 0 0