உள்ளடக்கத்திற்குச் செல்க
அக்டோபர் 2026
8 வியாழன்
842 பேர் இப்போது பார்க்கின்றனர்

தற்போதைய அரசு நாமல் ராஜபக்ஷவின் பெயருக்கு அஞ்சுகிறது.!

இலங்கை செய்திகள் 1 வாரம் முன்
98 பார்வைகள்

நாட்டில் உள்ள மக்கள் நாமல் ராஜபக்ஷவின் தலைமைத்துவத்தைச் சுற்றி மிகவும் வலுவாக அணிதிரண்டு வரும் இவ்வேளையில், தற்போதைய அரசாங்கம் பொய்க் குற்றச்சாட்டுகளைச் சுமத்தியும் சட்டத்தை தவறாகப் பயன்படுத்தியும் அவரைச் சிறையிலடைக்க முயற்சிப்பதாக ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் பொதுச் செயலாளரும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமான சட்டத்தரணி சாகர காரியவசம் குற்றம் சாட்டியுள்ளார்.

பத்தரமுல்ல நெலும் மாவத்தையிலுள்ள ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் கட்சித் தலைமையகத்தில் இன்று (28.09.2026) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.

அங்கு தொடர்ந்து கருத்து தெரிவித்த சட்டத்தரணி சாகர காரியவசம்:

“இந்த அரசாங்கம் தற்போது நாமல் ராஜபக்ஷவுக்கு கடுமையாக அஞ்சுகிறது. அரசாங்கத்தின் பொய்களுக்கு எதிராக நாட்டின் மக்கள் நாமல் ராஜபக்ஷவின் தலைமைத்துவத்தைச் சுற்றி திரண்டு வருகின்றனர். இதனால், பொய்க் குற்றச்சாட்டுகளைச் சுமத்தி சட்டத்தைத் தவறாகப் பயன்படுத்தி அவரை சிறையிலடைக்கவே அரசாங்கம் முயற்சிக்கிறது.

சட்டப்பூர்வமான விசாரணைகளுக்கோ அல்லது நியாயமான வழக்கு விசாரணைகளுக்கோ முகங்கொடுக்க நாங்கள் அஞ்சவில்லை. எம்மில் எவருக்கு எதிராகவும் குற்றச்சாட்டுகள் இருந்தால், அவற்றை நீதிமன்றத்தின் முன் கொண்டுவந்து நிரூபித்து தண்டனை வழங்கினால் சட்டத்திற்கு தலைவணங்க நாங்கள் தயார். ஆனால், பொய்க் குற்றச்சாட்டுகள் மூலம் பழிவாங்கும் நடவடிக்கையே இங்கு முன்னெடுக்கப்படுகிறது.

காரல்டன் ரக்பி செவன்ஸ் (Carlton Rugby Sevens) போட்டிகளுக்காக கிரிஷ் (Krrish) நிறுவனம் வழங்கிய பணம் தொடர்பாக தற்போது மீண்டும் புதிய வழக்குத் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. மேலும், நாளை இந்த வழக்கு விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படவுள்ளதாக நாமல் ராஜபக்ஷவுக்கு சிறைச்சாலையில் அறிவித்தல் வழங்கப்பட்டுள்ளது.

காரல்டன் ரக்பி கழகத்திற்கும் கிரிஷ் நிறுவனத்திற்கும் இடையில் இடம்பெற்ற இந்த விவகாரம் தொடர்பில் உண்மை நிலையை மக்களுக்கு தெளிவுபடுத்துவது எமது பொறுப்பாகும்.

2015 டிசம்பர் 26 அன்று ‘ஊழலுக்கு எதிரான குரல்’ அமைப்பினால் அளிக்கப்பட்ட முறைப்பாட்டின் அடிப்படையில், FCID மூலம் 2016 மே மாதம் இந்தியாவில் வைத்து கிரிஷ் நிறுவனத்தின் இருவரிடம் வாக்குமூலம் பெறப்பட்டது. இலங்கையில் ரக்பி விளையாட்டை மேம்படுத்துவதற்காக காரல்டன் கழகத்திற்கு 70 மில்லியன் ரூபாயை வழங்கியதாக அவர்கள் குறிப்பிட்டிருந்தனர்.

இதன் அடிப்படையில், 2016 ஜூலை 11 அன்று நாமல் ராஜபக்ஷ கைது செய்யப்பட்டு, பின்னர் ஜூலை 18 அன்று பிணையில் விடுவிக்கப்பட்டார். தொடர்ந்து சட்டமா அதிபரின் ஆலோசனையின் பேரில், ரக்பி விளையாட்டு மேம்பாட்டிற்காக கிரிஷ் நிறுவனம் வழங்கிய நிதியை தவறாகப் பயன்படுத்தியதாகக்கூறி கொழும்பு மேல் நீதிமன்றத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டு, அது 2026 நவம்பர் 16 ஆம் திகதி விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படவுள்ளது.

நிலைமை இவ்வாறு இருக்க, 2026 செப்டெம்பர் 24 அன்று இலஞ்ச ஒழிப்பு ஆணைக்குழு, கிரிஷ் நிறுவனத்தின் இலங்கை பிரதிநிதியாக இருந்த ஜானகி சிறிவர்தன என்பவரை, நாமல் ராஜபக்ஷவுக்கு 70 மில்லியன் ரூபாய் இலஞ்சம் கொடுத்தார் என்ற குற்றச்சாட்டில் கைது செய்து விளக்கமறியலில் வைத்துள்ளனர்.

ஏற்கனவே மேல் நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள அதே 70 மில்லியன் ரூபாய் தொடர்பிலேயே இலஞ்ச ஒழிப்பு ஆணைக்குழு தற்போது ‘இலஞ்சம்’ என்ற புதிய கோணத்தில் வழக்குப் பதிவு செய்துள்ளது. நாட்டின் பிரதான சட்ட அதிகாரியான சட்டமா அதிபரின் தீர்மானத்தையும் மீறி, இலஞ்ச ஒழிப்பு ஆணைக்குழுவின் பணிப்பாளர் நாயகம் முற்றிலும் முரண்பாடான புதிய குற்றச்சாட்டை சுமத்துவது யாருடைய தேவைகளுக்காக? இது சட்டத்தை முற்றிலும் தவறாகப் பயன்படுத்துவதாகும்.” என்றார்.

இவ் ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவித்த முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சஞ்சீவ எதிரிமான்ன:

“விசாரணை நிறுவனங்களின் பிரதான பதவிகளுக்கு நியமனங்களை மேற்கொள்ளும் அரசாங்கத்தின் முறையை நாங்கள் கடுமையாக விமர்சித்தோம். இந்த அரசாங்கம் நாட்டின் புலனாய்வு மற்றும் விசாரணை நிறுவனங்களை முற்றாக அரசியலமைப்பிற்கு அப்பாற்பட்டு அரசியலாக்கியுள்ளது.

விசாரணை நிறுவனங்கள் நீதியை நிலைநாட்டும் கருவிகளாகச் செயல்படாமல், அரசியல் அதிகாரக் கருவிகளாக மாற்றப்பட்டுள்ளன. இதனால்தான் குமார ஜயகொடிக்கு ஒரு சட்டமும் நாமல் ராஜபக்ஷவுக்கு வேறு ஒரு சட்டமும் நடைமுறைப்படுத்தப்படுகிறது. புலனாய்வாளர்களின் இந்த இரட்டை நிலப்பாடானது எதிர்க்கட்சியைப் பாதிக்கப்போவதில்லை; மாறாக, சட்டம் மீதான பொதுமக்களின் நம்பிக்கையையும், சமத்துவம் மற்றும் ஜனநாயக ஆட்சியின் சட்டப்பூர்வத் தன்மையையுமே சீர்குலைக்கும்.” என்றார்.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

பொதுபல சேனா அமைப்பின் ஊடகவியலாளர் சந்திப்பு

பொதுபல சேனா அமைப்பினால் ஏற்பாடு செய்யப்பட்ட விசேட ஊடகவியலாளர் சந்திப்பொன்று இன்றைய தினம் (08) கொழும்பு இராஜகிரியவில் அமைந்துள்ள ஞானசார தேரரின் விகாரையில் நடைபெற்றது. இச்சந்திப்பில் கருத்துத்…

59 0 0
இலங்கை செய்திகள்

காவி ஆடைக்குத் தீ வைக்க வேண்டாம்! : துமிந்த திசாநாயக்க எச்சரிக்கை!!

அமைச்சரவை அந்தஸ்துள்ள முன்னாள் அமைச்சரும் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் பொதுச்செயலாளருமான துமிந்த திசாநாயக்க, இன்றைய தினம் கட்சித் தலைமையகத்தில் நடைபெற்ற நிகழ்வொன்றின் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்தார்.…

75 0 0
இலங்கை செய்திகள்

வட மாகாண பனை வடிசாலைகளின் பிரச்சினைகளுக்கு சாதகமான தீர்வு!

வட மாகாணத்தில் பனைசார் உற்பத்தித் துறையைப் பாதிக்கும் வகையில் அதிகரிக்கப்பட்டுள்ள வரி மற்றும் கட்டணங்களை மீளாய்வு செய்து, உற்பத்தியாளர்களுக்கு சாதகமான தீர்வொன்றை பெற்றுக்கொடுப்பதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படவுள்ளன. யாழ்ப்பாண…

77 0 0
இலங்கை செய்திகள்

இலங்கையில் உயரடுக்கு அரசியல் கலாசாரத்திற்கு முற்றுப்புள்ளி : சமீர பெரேரா கருத்து

இலங்கையின் அரசியல் வரலாற்றில் நேற்று ஒரு புதிய அத்தியாயம் தொடங்‌கப்பட்டுள்ளதாகவும், நாட்டில் நிலவிவந்த உயரடுக்கு அரசியல் கலாசாரம் இதன் மூலம் முற்றாக முடிவுக்குக் கொண்டுவரப்பட்டுள்ளதாகவும் ‘ஜனநாயகத்திற்கான சிவில்…

67 0 0