உள்ளடக்கத்திற்குச் செல்க
அக்டோபர் 2026
8 வியாழன்
842 பேர் இப்போது பார்க்கின்றனர்

முப்பது ஆண்டுகளாக மூடப்பட்டுள்ள வீதியை திறக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.!

இலங்கை செய்திகள் 1 வாரம் முன்
132 பார்வைகள்

சுமார் 30 ஆண்டுகளாக மூடப்பட்டுள்ள கொட்டகலை பெற்றோலியக் கூட்டுத்தாபனம், ஹறிங்டன் எஸ்டேட், ஸ்டோனி கிளிப் உள்ளிட்ட பகுதிகளுக்குச் செல்லும் வீதியை மக்களும் பாடசாலை மாணவர்களும் பயன்படுத்தும் வகையில் மீண்டும் திறக்க வேண்டும் என தொடர்ந்து பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டுள்ளதாகவும் இது தொடர்பாக ஜனாதிபதிக்கு கடிதம் அனுப்பியுள்ளதுடன், அதற்கு ஜனாதிபதி அலுவலகத்திலிருந்து பதிலும் கிடைத்துள்ளதாக கொட்டகலை பிரதேச சபையின் உறுப்பினர் புஷ்பா விஷ்வநாதன் தெரிவித்துள்ளார் .

மேலும், டி.சி.சி. கூட்டத்திலும் இந்தப் பிரச்சினையை நேரடியாக முன்வைத்து, வீதியை மீண்டும் திறப்பதன் அவசியத்தை வலியுறுத்தியுள்ள போதிலும் இதுவரை நடைமுறை ரீதியான எந்தவொரு நடவடிக்கையும் மேற்கொள்ளப்படாதது கவலையளிப்பதாக குறிப்பிட்டார் .

குறிப்பாக மழைக்காலங்களில் மாற்று வழிகளைப் பயன்படுத்த வேண்டிய நிலை காரணமாக பாடசாலை மாணவர்கள் உள்ளிட்ட பொதுமக்கள் பெரும் சிரமங்களை எதிர்கொள்கின்றனர்.

நாட்டின் பல பகுதிகளில் நீண்டகாலமாக மூடப்பட்டிருந்த வீதிகள் தொடர்பாக நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்ற நிலையில், எவ்விதமான யுத்தமோ பாதிப்புகளோ நடைபெறாத கொட்டகலை பகுதியில் சுமார் 30 ஆண்டுகளாக மூடப்பட்டுள்ள இந்த வீதி மட்டும் இன்னும் திறக்கப்படாமல் இருப்பதற்கான காரணம் என்ன என்பது மக்களிடையே கேள்வியை எழுப்பியுள்ளது.

எனவே, இந்த விடயத்தில் இனியும் தாமதம் ஏற்படுத்தாமல், சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உடனடியாக தலையிட்டு, வீதியின் நிலைமையை ஆராய்ந்து, பொதுமக்கள் மற்றும் பாடசாலை மாணவர்களின் நலனை கருத்திற்கொண்டு வீதியை மீண்டும் திறப்பதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என கேட்டுக்கொள்வதாக கொட்டகலை பிரதேச சபை உறுப்பினரும் கொட்டகலை ஐக்கிய வர்த்தக சங்கம் தலைவரும் மலையக தொழிலாளர் முன்னணி செயலாளருமான புஷ்பா விஷ்வநாதன் தெரிவித்துள்ளார்.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

ஊழல் எதிர்ப்பு (திருத்தம்) சட்டமூலம் திருத்தங்களுடன் நிறைவேற்றம்

திருத்தங்களுடன் கூடிய ஊழல் தடுப்பு திருத்த சட்டமூலம் நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டுள்ளது. முன்னதாக, ஊழல் தடுப்பு திருத்த சட்டமூலத்தின் இரண்டாம் வாசிப்பு மீதான விவாதம் இன்று நாடாளுமன்றத்தில் நடைபெற்றது.…

62 0 0
இலங்கை செய்திகள்

சிறையில் உள்ள பௌத்த துறவிகளுக்கான விதிமுறைகளைத் திருத்த புதிய குழு

சிறையில் உள்ள பௌத்த துறவிகள் தங்கியிருக்கும் விதம் மற்றும் அவர்களைச் சிறைக்கு வெளியே அழைத்துச் செல்லும் முறைமைகள் தொடர்பான தற்போதைய சட்டங்களைத் திருத்தி, புதிய நிலையான கட்டளைகள்…

51 0 0
இலங்கை செய்திகள்

பொதுபல சேனா அமைப்பின் ஊடகவியலாளர் சந்திப்பு

பொதுபல சேனா அமைப்பினால் ஏற்பாடு செய்யப்பட்ட விசேட ஊடகவியலாளர் சந்திப்பொன்று இன்றைய தினம் (08) கொழும்பு இராஜகிரியவில் அமைந்துள்ள ஞானசார தேரரின் விகாரையில் நடைபெற்றது. இச்சந்திப்பில் கருத்துத்…

71 0 0
இலங்கை செய்திகள்

காவி ஆடைக்குத் தீ வைக்க வேண்டாம்! : துமிந்த திசாநாயக்க எச்சரிக்கை!!

அமைச்சரவை அந்தஸ்துள்ள முன்னாள் அமைச்சரும் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் பொதுச்செயலாளருமான துமிந்த திசாநாயக்க, இன்றைய தினம் கட்சித் தலைமையகத்தில் நடைபெற்ற நிகழ்வொன்றின் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்தார்.…

77 0 0