உள்ளடக்கத்திற்குச் செல்க
அக்டோபர் 2026
8 வியாழன்
842 பேர் இப்போது பார்க்கின்றனர்

ஆடம்பரங்கள் தேவையில்லை என்றவர்கள் இன்று உச்சக்கட்டப் பாதுகாப்பை பெறுகின்றனர்.!

இலங்கை செய்திகள் 1 வாரம் முன்
136 பார்வைகள்

கடந்த காலத்தில் தாங்கள் ஆட்சிக்கு வரும்போது கூடுதல் பாதுகாப்புகளோ அல்லது ஆடம்பர முறைகளோ தேவையில்லை எனக் கூறி அதிகாரத்தைக் கைப்பற்றியவர்கள், இன்று பதவியேற்ற பின்னர் உச்சக்கட்ட பாதுகாப்பையும் வாகனங்களையும் பெற்றுக்கொள்கின்றனர் என்று ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் ஹர்ஷண ராஜகருணா விமர்சித்தார்.

ஜனாதிபதியின் கம்பஹா மாவட்ட விஜயத்தின்போது, பொதுமக்களின் அனுமதி பெற்ற துப்பாக்கிகளைப் பொலிஸில் ஒப்படைக்குமாறு பிறப்பிக்கப்பட்ட சர்ச்சைக்குரிய உத்தரவு நாட்டின் வரலாற்றில் எக்காலத்திலும் இல்லாத விசித்திரமான செயல் என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.

கொழும்பில் நேற்று ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவிக்கும்போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அங்கு அவர் மேலும் தெரிவித்ததாவது,
“ஜனாதிபதியின் கம்பஹா மாவட்டத்துக்கான விஜயத்தையொட்டி, அந்தப் பகுதியில் சட்ட ரீதியான அனுமதிப்பத்திரத்துடன் துப்பாக்கிகளை வைத்துள்ள அனைத்து நபர்களும் அந்தத் துப்பாக்கிகளை ஜனாதிபதியின் வருகை மற்றும் கூட்டம் நிறைவடையும் வரை பொலிஸாரிடம் ஒப்படைக்குமாறு அறிவிக்கப்பட்டுள்ளது.

நாட்டில் கடந்த காலங்களில் நிலவிய கடுமையான பயங்கரவாத காலப் பகுதிகளில் அல்லது இக்கட்டான சூழ்நிலைகளின்போதுகூட இவ்வாறானதொரு நடைமுறை பின்பற்றப்பட்டதில்லை. நாட்டின் வரலாற்றில் எக்காலத்திலும் இல்லாதவாறு இவ்வாறானதொரு விசித்திரமான சம்பவம் பதிவாகியுள்ளது.

ஆடம்பரங்கள் தேவையில்லை எனக் கூறிவிட்டு இன்று உச்சக்கட்ட பாதுகாப்பைப் பெற்றுக்கொள்வதோடு, ஜனாதிபதி வருகையின்போது மாவட்டம் முழுவதும் உள்ள அனுமதிபெற்ற துப்பாக்கிகளையும் கையகப்படுத்தி பொதுமக்களுக்கு புதிய மற்றும் கடுமையான அசௌகரியங்களை வழங்குவது முற்றிலும் நகைப்புக்கிடமானதும் ஏற்றுக்கொள்ள முடியாததுமாகும்.

நாட்டில் நிறைவேற்றப்பட்டுள்ள 22ஆவது அரசமைப்புத் திருத்தச் சட்டம் காரணமாக, எதிர்காலத்தில் அதன் அனைத்துக் கஷ்டங்களையும் பாதகமான விளைவுகளையும் அனுபவிக்கப் போவது இந்த நாட்டின் சாதாரண பொதுமக்கள்தான். இந்தத் திருத்தச் சட்டத்தின் ஊடாக நீதிமன்ற அமைப்புகள் அரசியல்மயமாக்கப்படும் அல்லது ஒருசார்பான நிலைமைக்குத் தள்ளப்படும் அபாயம் ஏற்கனவே ஆரம்பித்துவிட்டது.

நாடாளுமன்றத்துக்குள்ளும், அதற்கு வெளியேயும், நீதிமன்றங்களிலுமாக எதிர்க்கட்சியின் தரப்பிலிருந்து இந்தத் திருத்தச் சட்டத்துக்கு எதிராகச் செய்யக்கூடிய அத்தனை சட்ட ரீதியான மற்றும் அரசியல் ரீதியான போராட்டங்களையும் நாங்கள் முன்னெடுத்தோம்.

இருப்பினும், தற்போதைய அரசுக்கு நாடாளுமன்றத்தில் மூன்றில் இரண்டு பெரும்பான்மைப் பலம் காணப்படுவதால், எதிர்க்கட்சியின் ஒப்புதல் இல்லாமலேயே தங்களுக்குத் தேவையான எந்தவொரு திருத்தத்தையும் அல்லது சட்டத்தையும் எவ்விதத் தடையுமின்றி நிறைவேற்றிக் கொள்ளக்கூடிய முழுமையான அதிகாரம் கிடைத்துள்ளது.

இந்தச் சட்டத்தின் மூலமாக ஏற்படக்கூடிய அத்தனை எதிர்மறையான தாக்கங்களையும் விளைவுகளையும் எதிர்காலத்தில் நாட்டு மக்கள் எதிர்கொள்ள நேரிடும்.” – என்றார்.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

ஊழல் எதிர்ப்பு (திருத்தம்) சட்டமூலம் திருத்தங்களுடன் நிறைவேற்றம்

திருத்தங்களுடன் கூடிய ஊழல் தடுப்பு திருத்த சட்டமூலம் நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டுள்ளது. முன்னதாக, ஊழல் தடுப்பு திருத்த சட்டமூலத்தின் இரண்டாம் வாசிப்பு மீதான விவாதம் இன்று நாடாளுமன்றத்தில் நடைபெற்றது.…

62 0 0
இலங்கை செய்திகள்

சிறையில் உள்ள பௌத்த துறவிகளுக்கான விதிமுறைகளைத் திருத்த புதிய குழு

சிறையில் உள்ள பௌத்த துறவிகள் தங்கியிருக்கும் விதம் மற்றும் அவர்களைச் சிறைக்கு வெளியே அழைத்துச் செல்லும் முறைமைகள் தொடர்பான தற்போதைய சட்டங்களைத் திருத்தி, புதிய நிலையான கட்டளைகள்…

51 0 0
இலங்கை செய்திகள்

பொதுபல சேனா அமைப்பின் ஊடகவியலாளர் சந்திப்பு

பொதுபல சேனா அமைப்பினால் ஏற்பாடு செய்யப்பட்ட விசேட ஊடகவியலாளர் சந்திப்பொன்று இன்றைய தினம் (08) கொழும்பு இராஜகிரியவில் அமைந்துள்ள ஞானசார தேரரின் விகாரையில் நடைபெற்றது. இச்சந்திப்பில் கருத்துத்…

71 0 0
இலங்கை செய்திகள்

காவி ஆடைக்குத் தீ வைக்க வேண்டாம்! : துமிந்த திசாநாயக்க எச்சரிக்கை!!

அமைச்சரவை அந்தஸ்துள்ள முன்னாள் அமைச்சரும் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் பொதுச்செயலாளருமான துமிந்த திசாநாயக்க, இன்றைய தினம் கட்சித் தலைமையகத்தில் நடைபெற்ற நிகழ்வொன்றின் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்தார்.…

77 0 0