உள்ளடக்கத்திற்குச் செல்க
அக்டோபர் 2026
8 வியாழன்
842 பேர் இப்போது பார்க்கின்றனர்

நல்லிணக்கத்தை பாதுகாக்கவே திலீபனின் சிலை அகற்றப்பட்டது.!

இலங்கை செய்திகள் 1 வாரம் முன்
157 பார்வைகள்

இனங்களுக்கிடையிலான நல்லிணக்கத்தைப் பாதுகாப்பதற்கும், நாட்டில் மீண்டும் யுத்த மனநிலையை உருவாக்கக் கூடிய சூழ்நிலைகளைத் தடுப்பதற்கும் திலீபனின் உருவச்சிலை அகற்றப்பட்டது என்று பொலிஸ் ஊடகப் பேச்சாளர் எவ்.யூ. வூட்லர் தெரிவித்தார்.

யாழ்ப்பாணம் – நல்லூர் பகுதியில் அமைந்துள்ள தியாக தீபம் திலீபனின் நினைவாலயத்தில் வைக்கப்பட்டிருந்த அவரது உருவச்சிலை பொலிஸாரால் அகற்றப்பட்டமை தொடர்பில் ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவிக்கும்போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,
“பொலிஸாருக்குக் கிடைத்த முறைப்பாட்டின் அடிப்படையிலேயே அந்த உருவச்சிலை அகற்றப்பட்டுள்ளது. தடை செய்யப்பட்ட அமைப்பு ஒன்றின் உறுப்பினர் ஒருவரை நினைவுகூரும் வகையில் ‘எல்லான் படை’ என்ற குழுவொன்று செயற்படுகின்றது என்று எமக்கு முறைப்பாடுகள் கிடைத்தன. அந்த முறைப்பாடுகளின் அடிப்படையிலேயே இந்தச் சட்ட நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

நாட்டில் இனங்களுக்கிடையிலான நல்லிணக்கத்தைப் பலப்படுத்துவதும், மீண்டும் ஒரு மோதல் சூழ்நிலையொன்று உருவாகக்கூடிய சாத்தியக்கூறுகளை முற்றிலுமாகத் தடுப்பதும் பொலிஸாரின் பிரதான பொறுப்பாகும். அந்த நோக்கத்தை அடிப்படையாகக் கொண்டே பொலிஸாரால் இந்த நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டது.” – என்றார்.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

ஊழல் எதிர்ப்பு (திருத்தம்) சட்டமூலம் திருத்தங்களுடன் நிறைவேற்றம்

திருத்தங்களுடன் கூடிய ஊழல் தடுப்பு திருத்த சட்டமூலம் நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டுள்ளது. முன்னதாக, ஊழல் தடுப்பு திருத்த சட்டமூலத்தின் இரண்டாம் வாசிப்பு மீதான விவாதம் இன்று நாடாளுமன்றத்தில் நடைபெற்றது.…

62 0 0
இலங்கை செய்திகள்

சிறையில் உள்ள பௌத்த துறவிகளுக்கான விதிமுறைகளைத் திருத்த புதிய குழு

சிறையில் உள்ள பௌத்த துறவிகள் தங்கியிருக்கும் விதம் மற்றும் அவர்களைச் சிறைக்கு வெளியே அழைத்துச் செல்லும் முறைமைகள் தொடர்பான தற்போதைய சட்டங்களைத் திருத்தி, புதிய நிலையான கட்டளைகள்…

51 0 0
இலங்கை செய்திகள்

பொதுபல சேனா அமைப்பின் ஊடகவியலாளர் சந்திப்பு

பொதுபல சேனா அமைப்பினால் ஏற்பாடு செய்யப்பட்ட விசேட ஊடகவியலாளர் சந்திப்பொன்று இன்றைய தினம் (08) கொழும்பு இராஜகிரியவில் அமைந்துள்ள ஞானசார தேரரின் விகாரையில் நடைபெற்றது. இச்சந்திப்பில் கருத்துத்…

71 0 0
இலங்கை செய்திகள்

காவி ஆடைக்குத் தீ வைக்க வேண்டாம்! : துமிந்த திசாநாயக்க எச்சரிக்கை!!

அமைச்சரவை அந்தஸ்துள்ள முன்னாள் அமைச்சரும் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் பொதுச்செயலாளருமான துமிந்த திசாநாயக்க, இன்றைய தினம் கட்சித் தலைமையகத்தில் நடைபெற்ற நிகழ்வொன்றின் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்தார்.…

77 0 0