உள்ளடக்கத்திற்குச் செல்க
செப்டம்பர் 2026
29 செவ்வாய்

இலங்கையை வீழ்த்தி தொடரைக் கைப்பற்றியது இங்கிலாந்து!

விளையாட்டுச் செய்திகள் 20 மணி நேரம் முன்
91 பார்வைகள்

சுற்றுலா இலங்கை அணிக்கு எதிரான மூன்றாவதும் இறுதியுமான ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் இங்கிலாந்து அணி 223 ஓட்டங்களால் வெற்றிப்பெற்றுள்ளது.

லண்டன் ஓவல் மைதானத்தில் இடம்பெற்ற இந்த போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றிப் பெற்று முதலில் துடுப்பெடுத்தாடிய இலங்கிலாந்து அணி 50 ஓவர்கள் நிறைவில் 07 விக்கெட்டுக்களை இழந்து 355 ஓட்டங்களை பெற்றது.

துடுப்பாட்டத்தில் அந்த அணியின் சார்பில் ஆரம்ப துடுப்பாட்ட வீரர் Tom Banton அதிகபட்சமாக 126 ஓட்டங்களையும், அணியின் தலைவர் Harry Brook 77 ஓட்டங்களையும், Jordan Cox 76 ஓட்டங்களையும் பெற்றுக்கொடுத்தனர்.

பந்து வீச்சில் இலங்கை அணி சார்பில் Asitha Fernando 03 விக்கெட்டுக்களையும், Sachindu Colombage 02 விக்கெட்டுக்களையும் வீழ்த்தினர்.

பின்னர் 356 ஓட்டங்கள் என்ற வெற்றி இலக்கை நோக்கி பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய இலங்கை அணி 29.1 ஓவர்கள் நிறைவில் சகல விக்கெட்டுக்களையும் இழந்து 132 ஓட்டங்களை மாத்திரமே பெற்றது.

துடுப்பாட்டத்தில் இலங்கை அணி சார்பில் அணித் தலைவர் Kusal Mendis அதிகபட்சமாக 35 ஓட்டங்களை பெற்ற நிலையில் ஏனைய வீரர்கள் சொற்ப ஓட்டங்களுக்கே ஆட்டமிழந்தனர்.

பந்து வீச்சில் இங்கிலாந்து அணி சார்பில் Liam Dawson 03 விக்கெட்டுக்களையும், Gus Atkinson 02 விக்கெட்டுக்களையும் வீழ்த்தனர்.

இதற்கமைய மூன்று போட்டிகள் கொண்ட இந்த ஒருநாள் கிரிக்கெட் தொடரை இங்கிலாந்து அணி இரண்டுக்கு ஒன்று என்ற கணக்கில் கைப்பற்றியுள்ளது.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

விளையாட்டுச் செய்திகள்

ஆசிய விளையாட்டுப் போட்டி 2026: 4×100 அஞ்சல் ஓட்டப் போட்டியில் இலங்கை இறுதிச்சுற்றுக்குத் தகுதி!

ஆசிய விளையாட்டு போட்டியின் ஆண்களுக்கான 100×4 மீற்றர் அஞ்சல் ஓட்டப் போட்டியில் (4x100m Relay) இலங்கை அணி அபார திறமையை வெளிப்படுத்தி இறுதிச்சுற்றுக்குத் தகுதி பெற்றுள்ளது. நேற்று…

87 0 0
விளையாட்டுச் செய்திகள்

அதிவேகமாக 15,000 ஓட்டங்களை கடந்து விராட் கோலி புதிய உலக சாதனை!

இந்திய கிரிக்கெட் அணியின் நட்சத்திர துடுப்பாட்ட வீரர் விராட் கோலி, சர்வதேச ஒருநாள் கிரிக்கெட் போட்டிகளில் அதிவேகமாக 15,000 ஓட்டங்களை கடந்து புதிய சாதனை படைத்துள்ளார். இதன்…

119 0 0
விளையாட்டுச் செய்திகள்

மீண்டும் சூதாட்ட சர்ச்சையில் சிக்கியது சி.எஸ்.கே அணி!

சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் டிரஸ்ஸிங் ரூம் ரகசியங்கள் கசிந்ததாகவும், மேட்ச் பிக்சிங் நடந்ததாகவும் தெஹல்கா ஸ்டிங் ஆபரேஷனில் சொல்லப்பட்டதை தொடர்ந்து சிஎஸ்கே நிர்வாகம் அடுத்தகட்ட நடவடிக்கை…

105 0 0
விளையாட்டுச் செய்திகள்

பயத்தால் ஆண் வேடமிட்டு பயிற்சி – வெள்ளிப்பதக்கம் வென்ற ஆப்கானிஸ்தான் வீராங்கனை

ஆசிய விளையாட்டு போட்டிகளில் வெள்ளிப்பதக்கம் வென்ற ஆப்கானிஸ்தான் வீராங்கனை ஃபரிபா ஹாஷிமி, பழமைவாத சூழல் காரணமாக ஆண் வேடமிட்டு பயிற்சி மேற்கொண்டதாக தெரிவித்துள்ளார். வெள்ளிப்பதக்கம் வென்ற ஆப்கானிஸ்தான்…

100 0 0