இன்றைய ராசி பலன்கள் – 28.09.2026
மேஷம்
மேஷ ராசிக்காரர்களுக்கு இன்று சந்தோஷமாக நாளாக இருக்கும். ஆரோக்கியத்தில் இருந்து வந்த பிரச்சினைகள் சரியாகும். உங்கள் வேலையிலும் வியாபாரத்திலும் முழு கவனத்தை செலுத்துவீர்கள். உற்சாகம் குறையாமல் இந்த நாள் ஓடிவிடும். இறை நம்பிக்கை அதிகரிக்கும். வீட்டில் தடைப்பட்டு வந்த சுப காரியம் நிகழ்ச்சிகள் மீண்டும் நடக்கும்.
ரிஷபம்
ரிஷப ராசிக்காரர்களுக்கு இன்று உற்சாகமான நாளாக இருக்கும். தலை குனிந்த இடத்தில், பெருமையாக தலை நிமிர்ந்து நிற்பீர்கள். புது முயற்சிகள் வெற்றி அடையும். உங்களுடைய கௌரவம் உயரும். வேலையிலும் வியாபாரத்திலும் சுறுசுறுப்பு இருக்கும். உயர் அதிகாரிகளுடைய ஆதரவை பெறுவீர்கள். பிரமோஷனுக்கு உங்களுடைய பெயர் இடம்பெறும்.
மிதுனம்
மிதுன ராசிக்காரர்களை பொறுத்தவரை இன்று அன்பு பாசம் காதல் வெளிப்படும் நாளாக இருக்கும். கணவன் மனைவி ஒற்றுமை பலப்படும். குடும்பத்தோடு வெளியிடங்களுக்கு செல்லக்கூடிய வாய்ப்புகள் வரும். அதேசமயம் வேலையிலும் வியாபாரத்திலும் உங்களுடைய கவனம் குறையாமல் இருக்கும். கடமையிலிருந்து தவற மாட்டீர்கள்.
கடகம்
கடக ராசிக்காரர்கள் இன்று வெற்றி வாகை சூடுவீர்கள். திறமையாக செயல்படுவீர்கள். உங்களுடைய காரியத்தில் கண்ணும் கருத்தோடும் நடந்து கொள்வீர்கள். கொஞ்சம் சுப செலவுகள் ஏற்படும். குடும்பத்துடன் நிறைய நேரம் சேர்ந்து இருந்து நேரத்தை செலவு செய்வீர்கள். பிள்ளைகளுடைய தேவைகளை பூர்த்தி செய்வீர்கள். மனநிறைவு அடைவீர்கள்.
சிம்மம்
சிம்ம ராசிக்காரர்களுக்கு இன்று கொஞ்சம் போட்டி பொறாமைகள் இருக்கும். உடல் சோர்வு ஏற்பட வாய்ப்பு உள்ளது. வேலையிலும் வியாபாரத்திலும் முழு கவனம் செலுத்த முடியாது. குறிப்பாக குழந்தைகள் முதியவர்கள் இன்று ஆரோக்கியத்தில் முழு கவனம் செலுத்த வேண்டும். தேவையில்லாத அலைச்சலை குறைத்துக் கொள்ளுங்கள்.
கன்னி
கன்னி ராசிக்காரர்களுக்கு இன்று நிதானம் தேவை. உடல் அசதியால் ஆரோக்கியம் சம்பந்தப்பட்ட பிரச்சினைகள் வர வாய்ப்பு உள்ளது. கூடுமானவரை நீண்ட தூர பயணங்களை குறைத்துக் கொள்ளுங்கள். அன்றாட வேலை முக்கியமான வேலைகளில் மட்டும் கவனம் செலுத்தினால் போதும். நீண்ட தூர பயணங்களை குறைத்துக் கொள்ளுங்கள். வீட்டில் இருக்கும் பெண்களுக்கு முன்கோபம் வேண்டாம். பொறுமையாக நடந்து கொள்ளவும்.
துலாம்
துலாம் ராசிக்காரர்களுக்கு இன்று அமைதியான நாளாக இருக்கும். நிதிநிலைமை சீராக இருக்கும். உங்களுடைய கடமைகளை சரியாக செய்வீர்கள். புது மனிதர்களின் அறிமுகம், புது அனுபவத்தை கற்றுக் கொடுக்கும். கடன் சுமையிலிருந்து விடுபடுவீர்கள். வீட்டிற்கு தேவையான பொருட்களை வாங்குவதற்கும் நல்ல காலம் கூடிவரும்.
விருச்சிகம்
விருச்சிக ராசிக்காரர்களுக்கு இன்று புது முயற்சிகள் வெற்றியைத் தரும். தேவைக்கு ஏற்ப பணம் கையில் இருக்கும். காரிய தடை விலகும். வேலையிலும் வியாபாரத்திலும் சுறுசுறுப்பு இருக்கும். நீண்ட தூர பயணங்களால் நன்மை நடக்கும். உயர் அதிகாரிகளின் ஆதரவை பெறுவீர்கள். வியாபாரத்தில் புதிய ஒப்பந்தங்கள் கையெழுத்தாக வாய்ப்பு உள்ளது.
தனுசு
தனுசு ராசிக்காரர்களுக்கு இன்று கொஞ்சம் ஓய்வு தேவைப்படும். உங்களுடைய வேலையிலும் வியாபாரத்திலும் எவ்வளவு கவனம் இருக்கிறதோ, அவ்வளவு கவனம் ஆரோகியத்திலும் தேவை. குடும்பத்தின் மீதும் கொஞ்சம் அக்கறை காட்டுங்கள். முன்கோபம் வேண்டாம். கணவன் மனைவிக்குள் ஒற்றுமை வேண்டும். வாக்குவாதம் இருக்கக் கூடாது.
மகரம்
மகர ராசிக்காரர்களுக்கு இன்று நல்ல பெயர் கிடைக்கும். பெயர் புகழ் பாராட்டு சந்தோஷத்தை கொடுக்கும். சுறுசுறுப்பாக செயல்படுவீர்கள். தேவையில்லாத கெட்ட பழக்கத்திலிருந்து விடுபடுவீர்கள். கைபேசி அதிக நேரம் பயன்படுத்தாதீர்கள். நேரத்தை வீணடிக்காதீர்கள். எதிர்பார்த்ததை விட நிச்சயம் நிறைய நல்லது நடக்கும்.
கும்பம்
கும்ப ராசிக்காரர்களுக்கு இன்று நிம்மதியான நாளாக இருக்கும். அடக்கம் பணிவு வெளிப்படும். மரியாதையுடன் உங்களுடைய இந்த நாள் நகர்ந்து செல்லும். முன் கோபம் குறையும். நல்ல அனுபவங்கள் கிடைக்கும். வேலையிலும் வியாபாரத்திலும் முன்னேற்றம் இருக்கும். பெண் பிள்ளைகளால் மனம் மகிழ்ச்சி அடையும்.
மீனம்
மீன ராசிக்காரர்கள் இன்று உங்களுடைய குடும்பத்தோடு நிறைய நேரம் இருப்பதற்கு வாய்ப்பு கிடைக்கும். வீட்டில் சுபகாரிய தடை விலகும். குடும்பத்தோடு வெளியிடங்களுக்கு செல்லக்கூடிய வாய்ப்புகள் உண்டு. கொஞ்சம் சுப செலவுகள் ஏற்படும். நிதி பற்றாக்குறை ஏற்பட வாய்ப்பு உள்ளது. பணம் சம்பந்தப்பட்ட விஷயத்தில் கவனம் இருக்கட்டும். தேவைக்கு ஏற்ப மட்டும் செலவு செய்யவும்.