மஸ்கெலியாவில் தெரு நாய்களின் தொல்லை அதிகரிப்பு!
மஸ்கெலியா நகரில் கடந்த சில நாட்களாக அதிகளவில் தெருநாய்களின் தொல்லை அதிகரித்துள்ளது.
இதன் காரணமாக நகருக்கு வரும் மக்கள் பாடசாலை மாணவர்கள் மற்றும் வர்த்தக நிலையங்களில் பணிபுரிவோர் மேலும் வர்த்தக நிலைய உரிமையாளர்கள் பெரிதும் பாதிக்க பட்டு வருகின்றனர்.
குறைந்த பட்சம் ஐம்பதுக்கும் மேற்பட்ட தெருநாய்கள் மஸ்கெலியா நகரில் உள்ள பிரதான வீதியில் கடும் வெறியுடன் கூட்டம் கூட்டமாக சுற்றி திரியும் நிலையில் உள்ளது அதேபோல் மஸ்கெலியா பிரதேச சபைக்கு அன்டிய பகுதியில் உள்ள இறைச்சி கடைகள் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இவ்வாறான தெரு நாய்களின் தொல்லைகள் அதிரித்து வருகிறது.
இதனை கட்டுப்படுத்த சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மற்றும் மஸ்கெலியா பிரதேச சபை முன் வர வேண்டும் இல்லையெனில் பாடசாலை செல்லும் வழியில் உள்ள இறைச்சி கடைகள் பகுதியில் அதிக அளவில் நாய்களின் நடமாட்டம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.அதே போல பிரதான வீதியில் பேருந்து நிலைய வீதியிலும் மற்றும் ஏனைய வீதிகளிலும் அதிக அளவில் சுற்றி திரிந்த நிலையில் உள்ளது உடன் கவணம் செலுத்தி நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுக்கின்றனர் பொது மக்கள்.