உள்ளடக்கத்திற்குச் செல்க
அக்டோபர் 2026
23 வெள்ளி
4210 பேர் இப்போது பார்க்கின்றனர்

கற்சிலையை உடைக்க முடியும் ஆனால் தமிழர்களின் நெஞ்சத்தில் உள்ள உருவத்தை உடைக்க முடியாது – இயக்குனர் டி.ராஜேந்தர்!

இலங்கை செய்திகள் 4 வாரங்கள் முன்
130 பார்வைகள்

கொழுந்துவிட்டு எரிந்துகொண்டு இருக்கும் தியாக தீபம். அது ஒரு அணையா தீபம். அமர தீபம். அதை என்ன செய்துவிடும் இந்த சிங்களவர்களின் கோபம்.

சிங்கள இனவெறியர்களால் தியாக தீபத்தின் சிலையை உடைக்க முடியும். ஆனால் ஈழத் தமிழர்களின் களங்கமற்ற இதயத்தில் தியாக தீபம் திலீபன் பிடித்த இடத்தினை சிங்கள இனவெறியர்களால் உடைக்கவும் முடியாது, அதை தகர்க்கவும் முடியாது, அதை அகற்றவும் முடியாது என தென்னிந்திய பிரபல திரைப்பட் இயக்குனர் டி.ராஜேந்தர் தெரிவித்துள்ளார்.

தியாக திபத்தின் திருவுருவச் சிலையை யாழ்ப்பாணம் பொலிஸார் உடைத்து சென்றமை குறித்து கருது தெரிவிக்கையில் அவர் இதனை தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் மேலும் தெரிவிக்கையில்,

அவர் அன்று இந்தியாவை நோக்கி முன்வைத்த ஐந்து அம்ச கோரிக்கைகள் தமிழ் மக்கள் உள்ளவரை காலாகாலத்திற்கும் நிலைத்திருக்கும். ஆனால் இன்னமும் சிங்களவர்களின் வெறி அடங்கவில்லை.

சிங்களர்களின் அந்த வெறி அடங்காததால் தான் உலகெங்கும் இருக்கின்ற தமிழர்கள் இன்று வரைக்கும் கொதித்துக் கொண்டிருக்கிறார்கள். ஆங்காங்கே தங்களால் முடிந்த அளவு தங்களது கருத்துக்களை பதித்துக் கொண்டிருக்கின்றார்கள்.

தமிழர்கள் கொதித்துக் கொண்டிருக்கின்றார்கள், தமது கருத்துக்களை பதித்து கொண்டிருக்கின்றார்கள். இவ்வாறு கொதிக்கக்கூடிய தமிழர்களில் நானும் ஒருவன் அவர் தெரிவித்துள்ளார்.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

விளம்பரம்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

செம்மணி விடயத்தில் சந்தேகம் இருந்தால் நீதி அமைச்சருடன் கலந்துரையாடுங்கள்!

“செம்மணி மனிதப் புதைகுழி அகழ்வுப் பணிகள் மற்றும் தற்போதைய நிலவரம் தொடர்பில் ஏதேனும் பிரச்சினைகள் அல்லது சந்தேகங்கள் காணப்பட்டால், தமிழ் அரசியல் பிரதிநிதிகள் நீதி அமைச்சருடன் கலந்துரையாடலாம்.…

51 0 0
இலங்கை செய்திகள்

சிறைச்சாலை நரகமாக மாறியுள்ளது.!

“சிறைச்சாலை நரகத்தைப் போன்று உள்ளது. சிறைச்சாலைக்குள் கைதிகளுக்கும் நிம்மதியில்லை, உத்தியோகத்தர்களுக்கும் நிம்மதியில்லை. அடிப்படை வசதிகள் கூட அங்கு இல்லை. பிள்ளைகளைப் பார்க்க முடியாமல் கவலையுடன் சிறையில் உள்ளேன்.…

75 0 0
இலங்கை செய்திகள்

பள்ளத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளான வாகனம்; இருவர் உ**யிரிழப்பு.!

கொத்மலை, கொட்டகேபிட்டிய பகுதியில் இருந்து கடதொர நோக்கிப் பயணித்த கெப் ரக வாகனம், நேற்று மாலை சுமார் 6 மணியளவில் 500 அடி ஆழமான பள்ளத்தில் கவிழ்ந்து…

64 0 0
இலங்கை செய்திகள்

செம்மணி என்புத் தொகுதிகளில் கைகள் வைக்கப்பட்டிருந்த முறை இரகசியமான புதைப்பு போன்று தெரியவில்லை.!

“யாழ்ப்பாணம் – செம்மணியில் மீட்கப்பட்ட என்புத் தொகுதிகளில் கைகளின் நிலை சீராகவே உள்ளது. என்புத் தொகுதிகளில் கைகள் வைக்கப்பட்டிருந்த முறை இரகசியமான அல்லது வழக்கத்துக்கு மாறான புதைப்பு…

72 0 0