உள்ளடக்கத்திற்குச் செல்க
அக்டோபர் 2026
23 வெள்ளி
4210 பேர் இப்போது பார்க்கின்றனர்

வடக்கு, கிழக்கு காணிப் பிரச்சினைக்கு இந்த ஆண்டுக்குள் தீர்வு : அமைச்சர் தம்மிக பட்டபெந்தி தெரிவிப்பு

இலங்கை செய்திகள் 4 வாரங்கள் முன்
144 பார்வைகள்

“போருக்குப் பின்னரான காலப்பகுதியில் வடக்கு, கிழக்கு மாகாணங்களில் ஜி.பி.எஸ். முறைமையிலான அளவீட்டுப் படங்கள் ஊடாகக் காணிகள் அடையாளப்படுத்தப்பட்டபோது, மக்களின் சொந்தக் காணிகளும் அரச காணிகள் என்ற கட்டமைப்புக்குள் தவறுதலாக உள்வாங்கப்பட்டிருக்கலாம். அவற்றை மீளாய்வு செய்து விடுவிப்பதற்கான உரிய நடவடிக்கைகள் எடுக்கப்படும்.” – என்று சுற்றாடல் அமைச்சர் தம்மிக பட்டபெந்தி தெரிவித்தார்.

வடக்கு, கிழக்கில் தனியார் காணிகளை வனஜீவராசிகள் திணைக்களமும் வனவளத்துறை திணைக்களமும் ஆக்கிரமித்துள்ளன என்று முன்வைக்கப்படும் குற்றச்சாட்டுகள் குறித்து ஊடகங்கள் வினவியபோதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,

“போர்க் காலத்திலும் அதற்குப் பின்னரான காலகட்டங்களிலும் வடக்கு, கிழக்கு மக்கள் தமது சொந்த இடங்களை விட்டு இடம்பெயர்ந்து சென்றமையால், அவர்கள் வாழ்ந்த வீடுகளும் விவசாய நிலங்களும் பிற்காலத்தில் காடாகிப் போயுள்ளன.

போருக்குப் பின்னர் ஜி.பி.எஸ். முறைமையின் மூலம் காணிகள் அளவிடப்பட்டு அடையாளப்படுத்தப்பட்டபோது, பொதுமக்களின் காணிகளும் அரச காணிகளாக வகைப்படுத்தப்பட்டிருக்கலாம். ஏன், அரச வைத்தியசாலைகள் மற்றும் பாடசாலைகளுக்குரிய காணிகள் கூட வனவளத்துறை திணைக்களத்தின் கட்டுப்பாட்டுக்குள் சென்றுள்ளதை அவதானிக்க முடிகின்றது. எனவே, மக்கள் முன்வைக்கும் குற்றச்சாட்டை முழுமையாக நிராகரிக்க முடியாது.

இந்தப் பிரச்சினைக்குத் தீர்வு காண்பதற்காக கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் அமைச்சரவை அங்கீகாரத்துடன் உப குழு ஒன்று நியமிக்கப்பட்டது. பல்வேறு காரணங்களால் இதன் அறிக்கை சமர்ப்பிக்கப்படுவது தாமதமாயினும், அது எதிர்வரும் மாதமளவில் சமர்ப்பிக்கப்படும்.

தவறான அளவீடுகள் காரணமாகத் தனியாருக்குச் சொந்தமான காணிகள் வனவள அல்லது வனஜீவராசிகள் திணைக்களங்களுக்குள் உள்வாங்கப்பட்டிருந்தால், அவற்றை மீளாய்வு செய்து விடுவிப்பதற்கான உரிய நடவடிக்கைகள் எடுக்கப்படும்.

ஒருவேளை சம்பந்தப்பட்ட காணிகளை அவ்வாறு விடுவிக்க முடியாத நிலை ஏற்பட்டால், அந்தக் காணிகளுக்குப் பதிலாக மாற்றுக்காணிகளோ அல்லது உரிய நிவாரணமோ வழங்கப்படும்.

காணி தொடர்பான இந்தப் பணியை இந்த ஆண்டுக்குள் முழுமையாக நிறைவு செய்யவே அரசு எதிர்பார்க்கின்றது.

வடக்கு, கிழக்கு மாகாண மக்கள் பிரதிநிதிகளுடனான சந்திப்பின்போதும் இந்த விடயம் தெளிவுபடுத்தப்பட்டுள்ளது.

அதேவேளையில், இயற்கை வாழிடங்களைப் பாதுகாத்துக்கொண்டே இந்தக் காணிப் பிரச்சினைகளுக்குத் தீர்வு காண வேண்டிய பொறுப்பும் உள்ளது.” – என்றார்.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

விளம்பரம்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

செம்மணி விடயத்தில் சந்தேகம் இருந்தால் நீதி அமைச்சருடன் கலந்துரையாடுங்கள்!

“செம்மணி மனிதப் புதைகுழி அகழ்வுப் பணிகள் மற்றும் தற்போதைய நிலவரம் தொடர்பில் ஏதேனும் பிரச்சினைகள் அல்லது சந்தேகங்கள் காணப்பட்டால், தமிழ் அரசியல் பிரதிநிதிகள் நீதி அமைச்சருடன் கலந்துரையாடலாம்.…

61 0 0
இலங்கை செய்திகள்

சிறைச்சாலை நரகமாக மாறியுள்ளது.!

“சிறைச்சாலை நரகத்தைப் போன்று உள்ளது. சிறைச்சாலைக்குள் கைதிகளுக்கும் நிம்மதியில்லை, உத்தியோகத்தர்களுக்கும் நிம்மதியில்லை. அடிப்படை வசதிகள் கூட அங்கு இல்லை. பிள்ளைகளைப் பார்க்க முடியாமல் கவலையுடன் சிறையில் உள்ளேன்.…

75 0 0
இலங்கை செய்திகள்

பள்ளத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளான வாகனம்; இருவர் உ**யிரிழப்பு.!

கொத்மலை, கொட்டகேபிட்டிய பகுதியில் இருந்து கடதொர நோக்கிப் பயணித்த கெப் ரக வாகனம், நேற்று மாலை சுமார் 6 மணியளவில் 500 அடி ஆழமான பள்ளத்தில் கவிழ்ந்து…

64 0 0
இலங்கை செய்திகள்

செம்மணி என்புத் தொகுதிகளில் கைகள் வைக்கப்பட்டிருந்த முறை இரகசியமான புதைப்பு போன்று தெரியவில்லை.!

“யாழ்ப்பாணம் – செம்மணியில் மீட்கப்பட்ட என்புத் தொகுதிகளில் கைகளின் நிலை சீராகவே உள்ளது. என்புத் தொகுதிகளில் கைகள் வைக்கப்பட்டிருந்த முறை இரகசியமான அல்லது வழக்கத்துக்கு மாறான புதைப்பு…

72 0 0