உள்ளடக்கத்திற்குச் செல்க
செப்டம்பர் 2026
27 ஞாயிறு

கிணறு ஒன்றிலிருந்து இளைஞனின் ச**டலம் மீட்பு.!

இலங்கை செய்திகள் 13 மணி நேரம் முன்
89 பார்வைகள்

ஹொரவ்பொத்தானை, இஹலகும்புக்ககொல்லாவ பகுதியில் கைவிடப்பட்ட கிணறு ஒன்றிலிருந்து 21 வயதுடைய இளைஞனின் சடலம் மீட்கப்பட்டுள்ளது.

சடலமாக மீட்கப்பட்ட இளைஞர் கடந்த 24 ஆம் திகதி தனது சகோதரியுடன் இணைந்து மாடுகளை மேய்ப்பதற்காகச் சென்றுள்ளார்.

எனினும் அங்கு சகோதரியிடம் விறகுகளைக் கொடுத்துவிட்டு, தாம் பின்னர் வருவதாகக் கூறி அவ்விடத்திலிருந்து சென்றுள்ளதாக கூறப்படுகின்றது.

எவ்வாறாயினும், அவர் மீண்டும் வீட்டிற்குத் திரும்பாததால், பிரதேச மக்களும், உறவினர்களும் இணைந்து மேற்கொண்ட தேடுதலின் போது, இந்தக் கைவிடப்பட்ட கிணற்றில் இருந்து இளைஞனின் சடலம் கண்டெடுக்கப்பட்டுள்ளது.

அவரது சடலத்தின் மீது காயம் ஒன்றும் காணப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.

சம்பவம் தொடர்பில் ஹாரவ்பொத்தானை பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

வாழ்வாதாரத்துக்காக கொடுத்த ஆட்டினை அடித்து கொ**லை செய்த பொலிஸ் உத்தியோகத்தர்.!

வாழ்வாதாரத்துக்காக கொடுத்த ஆடு ஒன்று நேற்றையதினம் பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவரால் அடித்து கொலை செய்யப்பட்டுள்ளதாக ஊர்காவற்துறை பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டது. இது குறித்து மேலும்…

89 0 0
இலங்கை செய்திகள்

யாழில் பேருந்து ஏறியதில் ஆணொருவரது கால் சிதைவடைவு.!

இன்றையதினம் பயணிகள் போக்குவரத்து சேவையில் ஈடுபடும் அரச பேருந்து ஏறியதில் ஆணொருவரது கால் சிதைவடைந்துள்ளது. இது குறித்து மேலும் தெரியவருகையில்,யாழ்ப்பாணம் அரச பேருந்து தரிப்பிடத்தில் நின்ற குறித்த…

100 0 0
இலங்கை செய்திகள்

தமிழினத்தின் உரிமைக்காக தமிழ் சமூகம் என்றும் பயணிக்க வேண்டும்.!

தமிழினத்தின் உரிமைக்காக தமிழ் சமூகம் என்றும் பயணிக்க வேண்டும் என்ற செய்தியை இந்த முழு உலகுக்கும் கொண்டு செல்கின்ற, இளம் சமுதாயத்தின் கைகளில் கொடுக்க வேண்டிய இந்த…

75 0 0
இலங்கை செய்திகள்

கேப்பாபுலவு பிலக்குடியிருப்பில் தியாக தீபம் திலீபனுக்கு உணர்வுபூர்வ அஞ்சலி.!

முல்லைத்தீவு, கேப்பாபுலவு பிலக்குடியிருப்பில் தியாக தீபம் திலீபனின் 39ஆவது நினைவு தினத்தின் இறுதி நாள் நினைவேந்தல் நிகழ்வு இன்று உணர்வுபூர்வமாக இடம்பெற்றிருந்தது. கரைதுறைப்பற்று பிரதேச சபை உறுப்பினர்…

102 0 0