உள்ளடக்கத்திற்குச் செல்க
செப்டம்பர் 2026
27 ஞாயிறு

கைக்குண்டுத் தாக்குதல் நடத்தி இரண்டு பிள்ளைகள் கொ**லை; மேலும் இருவர் கைது.!

இலங்கை செய்திகள் 15 மணி நேரம் முன்
90 பார்வைகள்

தெஹிவளை, சிறிசங்கபோ மாவத்தையில் உள்ள வீடொன்றின் மீது கைக்குண்டுத் தாக்குதல் நடத்தி இரண்டு பிள்ளைகளைக் கொலை செய்த சம்பவத்திற்கு உதவி ஒத்தாசை புரிந்த மேலும் இரண்டு சந்தேகநபர்கள் மேல் மாகாண தெற்கு குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் நேற்று (25) கைது செய்யப்பட்டுள்ளனர்.

இந்த மாதம் 11ஆம் திகதி குறித்த கைக்குண்டுத் தாக்குதலை நடத்தி இரண்டு பிள்ளைகளைக் கொலை செய்தமை மற்றும் அவர்களின் தந்தைக்குக் பலத்த காயம் ஏற்படுத்தியமை தொடர்பில் மேற்கொள்ளப்பட்டு வரும் விசாரணைகளின் கீழ் இந்த சந்தேகநபர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

இந்த குற்றத்தைச் செய்த பிரதான சந்தேகநபர் மற்றும் அதற்கு உதவிகளை வழங்கிய இரு சந்தேகநபர்கள் கடந்த 17ஆம் திகதி ரிதீமாலியத்த, தெஹிவளை மற்றும் பொரலஸ்கமுவ பொலிஸ் பிரிவுகளில் வைத்து புலனாய்வு அதிகாரிகளால் கைது செய்யப்பட்டு தற்போது விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.

அவர்களிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளின் அடிப்படையில், இந்தக் குற்றத்திற்கு உதவிகளை வழங்கிய சந்தேகத்தின் பேரிலேயே இந்தச் சந்தேகநபர்கள் தெஹிவளை பொலிஸ் பிரிவில் வைத்து நேற்று கைது செய்யப்பட்டுள்ளனர்.

இதன்போது குறித்த சந்தேகநபர்களிடமிருந்து 11 கிராமும் 960 மில்லிகிராமும் அளவில் ஐஸ் போதைப்பொருள் மற்றும் குற்றத்திற்குப் பயன்படுத்தப்பட்ட முச்சக்கரவண்டி ஒன்றும் பொலிஸாரால் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.

கைது செய்யப்பட்ட சந்தேகநபர்கள் பிலியந்தலை மற்றும் கஹதுடுவை பகுதிகளைச் சேர்ந்த 30 மற்றும் 31 வயதுடையவர்கள் என்பதுடன், மேல் மாகாண தெற்கு குற்றப் புலனாய்வுப் பிரிவினர் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

வாழ்வாதாரத்துக்காக கொடுத்த ஆட்டினை அடித்து கொ**லை செய்த பொலிஸ் உத்தியோகத்தர்.!

வாழ்வாதாரத்துக்காக கொடுத்த ஆடு ஒன்று நேற்றையதினம் பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவரால் அடித்து கொலை செய்யப்பட்டுள்ளதாக ஊர்காவற்துறை பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டது. இது குறித்து மேலும்…

89 0 0
இலங்கை செய்திகள்

யாழில் பேருந்து ஏறியதில் ஆணொருவரது கால் சிதைவடைவு.!

இன்றையதினம் பயணிகள் போக்குவரத்து சேவையில் ஈடுபடும் அரச பேருந்து ஏறியதில் ஆணொருவரது கால் சிதைவடைந்துள்ளது. இது குறித்து மேலும் தெரியவருகையில்,யாழ்ப்பாணம் அரச பேருந்து தரிப்பிடத்தில் நின்ற குறித்த…

100 0 0
இலங்கை செய்திகள்

தமிழினத்தின் உரிமைக்காக தமிழ் சமூகம் என்றும் பயணிக்க வேண்டும்.!

தமிழினத்தின் உரிமைக்காக தமிழ் சமூகம் என்றும் பயணிக்க வேண்டும் என்ற செய்தியை இந்த முழு உலகுக்கும் கொண்டு செல்கின்ற, இளம் சமுதாயத்தின் கைகளில் கொடுக்க வேண்டிய இந்த…

75 0 0
இலங்கை செய்திகள்

கேப்பாபுலவு பிலக்குடியிருப்பில் தியாக தீபம் திலீபனுக்கு உணர்வுபூர்வ அஞ்சலி.!

முல்லைத்தீவு, கேப்பாபுலவு பிலக்குடியிருப்பில் தியாக தீபம் திலீபனின் 39ஆவது நினைவு தினத்தின் இறுதி நாள் நினைவேந்தல் நிகழ்வு இன்று உணர்வுபூர்வமாக இடம்பெற்றிருந்தது. கரைதுறைப்பற்று பிரதேச சபை உறுப்பினர்…

102 0 0