உள்ளடக்கத்திற்குச் செல்க
செப்டம்பர் 2026
27 ஞாயிறு

என் மீதான குற்றச்சாட்டுகள் மீளப்பெறப்படும் வரை எதிர்க்கட்சித் தலைவரின் கூட்டங்களை புறக்கணிக்கின்றேன்.!

இலங்கை செய்திகள் 19 மணி நேரம் முன்
89 பார்வைகள்

தன் மீது ஆதாரமற்ற குற்றச்சாட்டுகளை முன்வைத்த நாடாளுமன்ற உறுப்பினர்களான சாமர சம்பத் தசநாயக்க மற்றும் தயாசிறி ஜயசேகர ஆகியோருக்கு எதிராக எந்தவொரு விளக்கமோ நடவடிக்கையோ எடுக்கப்படவில்லை எனக் குறிப்பிட்டுள்ள இலங்கைத் தமிழரசுக் கட்சியின் யாழ்ப்பாணம் – கிளிநொச்சி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன், அக்குற்றச்சாட்டுகள் மீளப்பெறப்படும் வரை எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸவின் தலைமையில் ஏற்பாடு செய்யப்படும் எந்தவொரு கூட்டங்களிலும் பங்கேற்கப் போவதில்லை என்று தெரிவித்துள்ளார்.

எதிர்க்கட்சித் தலைவர் என்ற பொறுப்புமிக்க பதவியில் உள்ள சஜித் பிரேமதாஸவின் தலைமையில் இடம்பெறும் கூட்டங்களில் தான் கலந்துகொள்ளாமைக்கான காரணத்தைத் தெளிவுபடுத்துவதாக சிறீதரன் எம்.பி. தனது கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.

ஐக்கிய மக்கள் சக்தியைச் சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினரும், எதிர்க்கட்சியில் அங்கம் வகிக்கும் மற்றொரு உறுப்பினரும் தன் மீது முன்வைத்த ஆதாரமற்ற குற்றச்சாட்டுகள் குறித்து எதிர்க்கட்சித் தலைவர் இதுவரை எந்தவொரு கண்டனத்தையோ விளக்கத்தையோ வெளியிடவில்லை என்றும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

குறிப்பாக, கடந்த 2025 ஒக்டோபர் 23 அன்று புதிய ஜனநாயக முன்னணியின் பதுளை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சாமர சம்பத் தசநாயக்க, அரசமைப்புச் சபையின் உறுப்பினரான சிவஞானம் சிறீதரன் தனக்கு எதிரான முறைப்பாட்டை மறைக்க முயன்றார் என்றும், ‘நலன்சார் முரண்பாட்டை’ ஏற்படுத்திச் சிறப்புரிமைகளை மீறினார் என்றும் நாடாளுமன்றத்தில் பொய்யான குற்றச்சாட்டுகளை முன்வைத்திருந்தார் என்பதையும் அவர் நினைவுகூர்ந்துள்ளார்.

எதிர்க்கட்சி வரிசையில் உள்ள சக உறுப்பினர்கள் தன் மீது காழ்ப்புணர்ச்சி காரணமாக முன்வைத்த இத்தகைய ஆதாரமற்ற குற்றச்சாட்டுகளை அவர்கள் உடனடியாக மீளப்பெற வேண்டும் என எதிர்க்கட்சித் தலைவர் வலியுறுத்த வேண்டும் என்றும் சிறீதரன் எம்.பி. அந்தக் கடிதத்தில் கோரியுள்ளார்.

அத்தகைய நியாயமான சந்தர்ப்பம் ஏற்படும் வரை அல்லது உரிய நடவடிக்கை எடுக்கப்படும் வரை, எதிர்க்கட்சித் தலைவரின் தலைமையில் ஏற்பாடு செய்யப்படும் எத்தகைய கூட்டங்களிலும் தாம் இனிப் பங்கேற்கப் போவதில்லை என்றும் அவர் திட்டவட்டமாக அறிவித்துள்ளார்.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

வாழ்வாதாரத்துக்காக கொடுத்த ஆட்டினை அடித்து கொ**லை செய்த பொலிஸ் உத்தியோகத்தர்.!

வாழ்வாதாரத்துக்காக கொடுத்த ஆடு ஒன்று நேற்றையதினம் பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவரால் அடித்து கொலை செய்யப்பட்டுள்ளதாக ஊர்காவற்துறை பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டது. இது குறித்து மேலும்…

89 0 0
இலங்கை செய்திகள்

யாழில் பேருந்து ஏறியதில் ஆணொருவரது கால் சிதைவடைவு.!

இன்றையதினம் பயணிகள் போக்குவரத்து சேவையில் ஈடுபடும் அரச பேருந்து ஏறியதில் ஆணொருவரது கால் சிதைவடைந்துள்ளது. இது குறித்து மேலும் தெரியவருகையில்,யாழ்ப்பாணம் அரச பேருந்து தரிப்பிடத்தில் நின்ற குறித்த…

100 0 0
இலங்கை செய்திகள்

தமிழினத்தின் உரிமைக்காக தமிழ் சமூகம் என்றும் பயணிக்க வேண்டும்.!

தமிழினத்தின் உரிமைக்காக தமிழ் சமூகம் என்றும் பயணிக்க வேண்டும் என்ற செய்தியை இந்த முழு உலகுக்கும் கொண்டு செல்கின்ற, இளம் சமுதாயத்தின் கைகளில் கொடுக்க வேண்டிய இந்த…

75 0 0
இலங்கை செய்திகள்

கேப்பாபுலவு பிலக்குடியிருப்பில் தியாக தீபம் திலீபனுக்கு உணர்வுபூர்வ அஞ்சலி.!

முல்லைத்தீவு, கேப்பாபுலவு பிலக்குடியிருப்பில் தியாக தீபம் திலீபனின் 39ஆவது நினைவு தினத்தின் இறுதி நாள் நினைவேந்தல் நிகழ்வு இன்று உணர்வுபூர்வமாக இடம்பெற்றிருந்தது. கரைதுறைப்பற்று பிரதேச சபை உறுப்பினர்…

102 0 0