உள்ளடக்கத்திற்குச் செல்க
நவம்பர் 2026
23 திங்கள்
4210 பேர் இப்போது பார்க்கின்றனர்

நீதித்துறை என்பது அரசு மாறும்போதெல்லாம் மாற்றப்படும் நிறுவனமாக இருக்கவே கூடாது.!

இலங்கை செய்திகள் 2 மாதங்கள் முன்
147 பார்வைகள்

அரசமைப்பின் 22ஆவது திருத்தத்தின் ஊடாக நீதிபதிகளின் ஓய்வு வயதெல்லையை அதிகரிப்பதில் தமக்கு எவ்வித ஆட்சேபனையும் இல்லை எனத் தெரிவித்த இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் பொதுச்செயலாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான ஜீவன் தொண்டமான், எனினும் அந்த மாற்றம் எத்தகைய நடைமுறையின் ஊடாகக் கொண்டுவரப்படுகின்றது என்பதில்தான் தமது முக்கிய கேள்வி உள்ளது என்றும் தெரிவித்தார்.

நாடாளுமன்றத்தில் இன்று உரையாற்றும்போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அவர் மேலும் உரையாற்றுகையில்,
“நாட்டின் பல்வேறு நீதிமன்றங்களில் பெருமளவிலான வழக்குகள் தேங்கிக் கிடக்கின்றன. அவற்றை விரைவாக விசாரித்து முடிப்பதற்கு நீதிபதிகளின் ஓய்வு வயதெல்லையை அதிகரிப்பது மட்டுமே முழுமையான தீர்வாகிவிடாது.

நீதிமன்றங்களின் உட்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்துதல் மற்றும் அவற்றுக்குத் தேவையான பௌதீக வளங்களை வழங்குதல் போன்ற நடவடிக்கைகளும் இணையாக முன்னெடுக்கப்பட வேண்டும். அவ்வாறு செயற்பட்டாலே தேங்கிக் கிடக்கும் வழக்குகளை விரைவாக நிறைவு செய்ய முடியும்.

நீதித்துறை என்பது மக்களால் ஏற்றுக்கொள்ளப்பட்டு முழுமையான நம்பிக்கை வைக்கப்படும் மிக முக்கியமான அரச நிறுவனமாகும். தற்போது நீதிபதிகளின் ஓய்வு வயதெல்லை இரண்டு வருடங்களால் அதிகரிக்கப்பட்டாலும், எதிர்காலத்தில் வேறு அரசுகள் ஆட்சிக்கு வரும்போது மீண்டும் அதனை மாற்றியமைப்பதற்கான வாய்ப்புகள் ஏற்படலாம்.

ஒவ்வொரு அரசும் தங்களது அரசியல் தேவைகளுக்கு ஏற்ப நீதித்துறையில் மாற்றங்களை மேற்கொள்ளும் நிலை உருவானால், அது நீதித்துறையின் நிலைத்தன்மையையும் மக்கள் மத்தியிலான நம்பிக்கையையும் கடுமையாகப் பாதிக்கும்.

நீதித்துறை என்பது அரசுகள் மாறும்போதெல்லாம் மாற்றப்படும் ஒரு நிறுவனமாக இருக்கக்கூடாது. மாறாக அதன் சுயாதீனமும் நிலைத்தன்மையும் எப்போதும் பாதுகாக்கப்பட வேண்டும்.” – என்றார்.

இதன்போது மலையக மக்களின் உரிமைகள் குறித்துக் கருத்துத் தெரிவித்த அவர், கடந்த 200 ஆண்டுகளாகப் பல்வேறு சவால்களுக்கும் தொடர் போராட்டங்களுக்கும் மத்தியில் மலையக மக்கள் படிப்படியாக முன்னேறி வந்துள்ளனர் என்று குறிப்பிட்டார்.

காணி உரிமை, வீட்டுரிமை, சம்பள உயர்வு உள்ளிட்ட ஒவ்வொரு முன்னேற்றத்துக்குப் பின்னேயும் நீண்டகாலப் போராட்டங்கள் இருப்பதைச் சுட்டிக்காட்டிய அவர், ஒரு உரிமையை வென்றெடுப்பது எவ்வளவு கடினமோ, அதனைத் தொடர்ந்து பாதுகாத்து நிலைநிறுத்துவது அதைவிடக் கடினமானது என்றார்.

எனவே, மக்களின் உரிமைகளையும் நீதியையும் பாதுகாக்கும் மிக முக்கியமான தூணாக விளங்கும் நீதித்துறையின் பாதுகாப்பு மிக அவசியமானது.” – என்றார்.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

விளம்பரம்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

கோப்பாய் மாவீரர் துயிலுமில்லம் முன்பாக மாவீரர் நினைவாலயம் திறந்து வைப்பு!

கோப்பாய் மாவீரர் துயிலுமில்லம் முன்பாக மாவீரர்களின் திருவுருவப் படங்கள் மற்றும் பெயர்கள் பொறிக்கப்பட்ட நினைவாலயம் இன்று திறந்து வைக்கப்பட்டுள்ளது. பொதுச்சுடர் ஏற்றப்பட்டு, மலர்வணக்கம் செலுத்தப்பட்டதைத் தொடர்ந்து மக்கள்…

161 0 0
இலங்கை செய்திகள்

யாழ்ப்பாணம் பண்ணைப் பகுதியில் விபத்து!

யாழ்ப்பாணம் பண்ணை சுற்றுவட்டப் பகுதியில் இன்று (22) இரவு 7 மணியளவில் கட்டுப்பாட்டை இழந்த சிறிய ரக மகிழுந்து ஒன்று, வீதியோரத்தில் நிறுத்தப்பட்டிருந்த 10 இற்கும் மேற்பட்ட…

150 0 0
இலங்கை செய்திகள்

கூகுள் வரைபடத்தை அடிப்படையாகக் கொண்டு அபகரிக்கப்பட்ட காணிகளை மக்களுக்கு மீள வழங்க வேண்டும்!

வடக்கு மாகாணத்தில் வனப் பாதுகாப்புத் திணைக்களம், வனஜீவராசிகள் திணைக்களம் மற்றும் தொல்பொருள் திணைக்களம் ஆகிய அரச நிறுவனங்களின் வசமுள்ள காணிகளை மக்களுக்கு விடுவிக்க நடவடிக்கை எடுக்குமாறு ஈ.பி.டி.பி.…

141 0 0
இலங்கை செய்திகள்

மழையை நம்பி மேற்கொள்ளப்பட்ட காலபோக நெற்ச்செய்கை மழையின்மையால் பாதிப்பு

கிளிநொச்சி மாவட்டத்தில் 2026 /.2027 ஆம் ஆண்டுக்கான பெரும் போகநெற்செய்கை கொள்ளப்பட்டுள்ள நிலையில் கிளிநொச்சி நெத்தலியாறு பகுதியில் மழையை நம்பி நெற்செய்கை மேற்கொண்ட விவசாயிகள் பாதிக்கப்பட்டுள்ளனர். விவசாய…

138 0 0