உள்ளடக்கத்திற்குச் செல்க
செப்டம்பர் 2026
27 ஞாயிறு

மீண்டும் சூதாட்ட சர்ச்சையில் சிக்கியது சி.எஸ்.கே அணி!

95 பார்வைகள்

சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் டிரஸ்ஸிங் ரூம் ரகசியங்கள் கசிந்ததாகவும், மேட்ச் பிக்சிங் நடந்ததாகவும் தெஹல்கா ஸ்டிங் ஆபரேஷனில் சொல்லப்பட்டதை தொடர்ந்து சிஎஸ்கே நிர்வாகம் அடுத்தகட்ட நடவடிக்கை எடுக்க திட்டமிட்டுள்ளது.

பிரபல புலனாய்வு ஊடகமான தெஹல்கா வெளியிட்ட ரகசிய ஸ்டிங் ஆபரேஷன் வீடியோவில், சிஎஸ்கே அணியில் இடம்பெற்றிருந்த டெல்லியைச் சேர்ந்த இளம் வீரர் ஒருவர் மூலம் ஆடும் லெவன் விவரங்கள் முன்கூட்டியே லண்டன் சூதாட்ட புக்கிகளுக்கு விற்கப்பட்டதாக முன்னாள் ரஞ்சி வீரர் ரசித் பாட்டியா குற்றம்சாட்டியிருந்தார்.

ஒரு போட்டிக்கு 60 லட்சம் ரூபாய் வீதம் மொத்தம் 5 போட்டிகளுக்கு 3 கோடி ரூபாய் கைமாறியதாக அவர் கூறியது கிரிக்கெட் அரங்கில் பெரும் சர்ச்சையை கிளப்பியது.

இந்த விவகாரம் குறித்து விவாதிக்க சிஎஸ்கே நிர்வாகம் அவசரக் கூட்டத்தைக் கூட்ட முடிவு செய்துள்ளது. இதுகுறித்து சிஎஸ்கே அதிகாரி ஒருவர் தெரிவிக்கையில்,

“எங்களது வருடாந்திர பொதுக்குழுக் கூட்டம் இன்று (25) நடைபெற உள்ளது. இந்தக் கூட்டத்திற்கு முன்பாக எங்கள் நிர்வாகக் குழு கூடி, இந்த ஊழல் தடுப்பு விவகாரங்கள் மற்றும் குற்றச்சாட்டுகள் குறித்து விரிவாக ஆலோசித்து உரிய முடிவு எடுக்கும்” என்று தெரிவித்துள்ளார்.

இதற்கிடையே, டெல்லியைச் சேர்ந்த விக்கெட் கீப்பர் பேட்டர் வன்ஷ் பேடிதான் 2025 இல் சிஎஸ்கே-வில் இருந்த டெல்லி வீரர் என்பதாலும், அவரை 2025 இல் சூதாட்டத் தரகர்கள் அணுகியதாகவும், அவர் புகார் அளித்ததாகவும் மற்றொரு தகவல் பரவியது.

ஆனால் இதை அவர் தனது சமூக வலைதளப் பக்கத்தில் திட்டவட்டமாக மறுத்துள்ளார். “ரசித் பாட்டியா குறிப்பிட்ட சிஎஸ்கே வீரர் நான் அல்ல. எனக்கும் இந்த சூதாட்டக் குற்றச்சாட்டுகளுக்கும் எள்முனையளவும் தொடர்பு கிடையாது” என்று வன்ஷ் பேடி விளக்கம் அளித்துள்ளார்.

அதேபோல் டெல்லி பிரீமியர் லீக் தொடரிலும் மேட்ச் பிக்சிங் நடந்ததாகக் கூறப்பட்ட குற்றச்சாட்டுகளை டெல்லி கிரிக்கெட் சங்கம் ஆதாரமற்றவை என நிராகரித்துள்ளது. எனினும், இன்று கூடவுள்ள சிஎஸ்கே நிர்வாகக் கூட்டத்தில் எடுக்கப்படும் முடிவுகள் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளன.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

விளையாட்டுச் செய்திகள்

பயத்தால் ஆண் வேடமிட்டு பயிற்சி – வெள்ளிப்பதக்கம் வென்ற ஆப்கானிஸ்தான் வீராங்கனை

ஆசிய விளையாட்டு போட்டிகளில் வெள்ளிப்பதக்கம் வென்ற ஆப்கானிஸ்தான் வீராங்கனை ஃபரிபா ஹாஷிமி, பழமைவாத சூழல் காரணமாக ஆண் வேடமிட்டு பயிற்சி மேற்கொண்டதாக தெரிவித்துள்ளார். வெள்ளிப்பதக்கம் வென்ற ஆப்கானிஸ்தான்…

90 0 0
விளையாட்டுச் செய்திகள்

இங்கிலாந்து – இலங்கை 2 ஆவது ஒருநாள் போட்டி: இலங்கை அணி 16 ஓட்டங்களால் வெற்றி!

இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இலங்கை கிரிக்கெட் அணி, இங்கிலாந்து அணிக்கு எதிரான இரண்டாவது ஒருநாள் போட்டியில் 16 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளது. லீட்ஸ் ஹெட்டிங்லி (Headingley)…

99 0 0
விளையாட்டுச் செய்திகள்

IPL 2027 ஏலம்: BCCI உத்தியோகபூர்வ அறிவிப்பு!

2027 ஆம் ஆண்டுக்கான இந்தியன் பிரீமியர் லீக் (IPL) தொடருக்கான வீரர்கள் ஏலம் கோவாவில் நடைபெறவுள்ளதாக இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு சபை (BCCI) அறிவித்துள்ளது. கடந்த மூன்று…

90 0 0
விளையாட்டுச் செய்திகள்

இங்கிலாந்துக்கு எதிரான போட்டியில் இலங்கை அணிக்கு 15% அபராதம்!

இங்கிலாந்துக்கு எதிரான முதலாவது ஒருநாள் போட்டியில் மெதுவாக பந்துவீசியதற்காக (Slow Over-rate) இலங்கை கிரிக்கெட் அணிக்கு போட்டிக் கட்டணத்திலிருந்து 15 சதவீதம் அபராதம் விதிக்கப்பட்டுள்ளதாக சர்வதேச கிரிக்கெட்…

104 0 0