உள்ளடக்கத்திற்குச் செல்க
நவம்பர் 2026
23 திங்கள்
4210 பேர் இப்போது பார்க்கின்றனர்

கைது பயத்தால் அரசு மீது எதிரணிகள் குற்றச்சாட்டு.!

இலங்கை செய்திகள் 2 மாதங்கள் முன்
129 பார்வைகள்

அரசமைப்பின் 22ஆவது திருத்தம் ஊடாக நிறைவேற்றுத்துறை நீதித்துறை அதிகாரத்தைக் கைப்பற்ற முயற்சிக்கின்றது என எதிர்க்கட்சியினர் முன்வைக்கும் குற்றச்சாட்டை முழுமையாக நிராகரிப்பதாகப் பொதுமக்கள் பாதுகாப்பு மற்றும் நாடாளுமன்ற அலுவல்கள் அமைச்சர் ஆனந்த விஜேபால தெரிவித்தார்.

நாடாளுமன்றத்தில் நேற்று வியாழக்கிழமை நடைபெற்ற அரசமைப்பின் 22ஆவது திருத்தச் சட்டமூலம் மற்றும் நீதித்துறை (திருத்தச்) சட்டமூலம் மீதான விவாதத்தில் உரையாற்றும்போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அவர் மேலும் உரையாற்றுகையில்,
“ஆட்சிக்கு வந்து இரண்டு ஆண்டுகள் நிறைவடைந்துள்ள நிலையில், சட்டத்தின் ஆட்சியையும் ஜனநாயகத்தையும் பாதுகாப்பதற்கான கடுமையான நடவடிக்கைகளையும் அரசு முன்னெடுத்து வருகின்றது.

வழக்கு விசாரணைகள் துரிதப்படுத்தப்பட்டு குற்றவாளிகள் சட்டத்தின் மூலம் தண்டிக்கப்பட வேண்டும் என்பதே நாட்டு மக்களின் எதிர்பார்ப்பாகும். அதனை நிறைவேற்றும் போது எதிர்க்கட்சியினர் அதற்கு எதிராகச் செயற்பட்டு பல்வேறு குற்றச்சாட்டுகளை முன்வைக்கின்றனர்.

காலம் காலமாக வழக்குகள் நிலுவையிலேயே இருக்க வேண்டும் என்று எதிர்க்கட்சியினர் விரும்புகின்றனர். அவ்வாறு இருந்தால் மட்டுமே தம்மைக் காப்பாற்றிக் கொள்ள முடியும் என அவர்கள் நம்புகின்றனர். அவர்களின் தனிப்பட்ட நோக்கங்களுக்காக மக்களின் எதிர்பார்ப்புகளை அரசு ஒருபோதும் கைவிடாது.

ஜனநாயகம் மற்றும் சட்டத்தின் ஆட்சியைப் பலப்படுத்த கடந்த இரண்டு ஆண்டுகளில் கடுமையான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன. பல்வேறு குற்றங்களுடன் தொடர்புடைய சந்தேகநபர்களைச் சர்வதேசத்தின் ஒத்துழைப்புடன் நாட்டுக்கு அழைத்து வந்துள்ளோம். பாதாளக் குழுக்கள் மற்றும் போதைப்பொருள் வர்த்தகத்துடன் தொடர்புடையவர்கள் தொடர்ச்சியாகக் கைது செய்யப்பட்டு வருகின்றனர்.

இந்த விசாரணைகளின் போது பல அரசியல்வாதிகளின் பெயர்களும் வெளிப்படுத்தப்பட்டுள்ளமையால்தான் எதிர்க்கட்சி உறுப்பினர்கள் கலக்கமடைந்து இவ்வாறான எதிர்ப்புகளைத் தெரிவித்து வருகின்றனர்.

22ஆவது திருத்தம் ஊடாக நீதித்துறை அதிகாரத்தை நிறைவேற்றுத்துறை கைப்பற்ற முயல்வதாகக் கூறுவது முற்றிலும் பொய்யானது. எம்மிடம் இருக்கும் குறைந்தபட்ச அதிகாரத்தைக் கூட நாம் தவறாகப் பயன்படுத்துவதில்லை. அதிகாரத்தை துஷ்பிரயோகம் செய்யும் நோக்கம் அரசுக்குச் சிறிதும் இல்லை.

மக்களுக்கு வழங்கிய வாக்குறுதிகளுக்கு அமைவாகவும், ஜனநாயகம் மற்றும் சட்ட ஒழுங்கைப் பாதுகாப்பதற்காகவும் எதிர்காலத்தில் மேலும் பல அவசியமான சட்டங்கள் இயற்றப்படும்.” – என்றார்.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

விளம்பரம்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

கோப்பாய் மாவீரர் துயிலுமில்லம் முன்பாக மாவீரர் நினைவாலயம் திறந்து வைப்பு!

கோப்பாய் மாவீரர் துயிலுமில்லம் முன்பாக மாவீரர்களின் திருவுருவப் படங்கள் மற்றும் பெயர்கள் பொறிக்கப்பட்ட நினைவாலயம் இன்று திறந்து வைக்கப்பட்டுள்ளது. பொதுச்சுடர் ஏற்றப்பட்டு, மலர்வணக்கம் செலுத்தப்பட்டதைத் தொடர்ந்து மக்கள்…

161 0 0
இலங்கை செய்திகள்

யாழ்ப்பாணம் பண்ணைப் பகுதியில் விபத்து!

யாழ்ப்பாணம் பண்ணை சுற்றுவட்டப் பகுதியில் இன்று (22) இரவு 7 மணியளவில் கட்டுப்பாட்டை இழந்த சிறிய ரக மகிழுந்து ஒன்று, வீதியோரத்தில் நிறுத்தப்பட்டிருந்த 10 இற்கும் மேற்பட்ட…

150 0 0
இலங்கை செய்திகள்

கூகுள் வரைபடத்தை அடிப்படையாகக் கொண்டு அபகரிக்கப்பட்ட காணிகளை மக்களுக்கு மீள வழங்க வேண்டும்!

வடக்கு மாகாணத்தில் வனப் பாதுகாப்புத் திணைக்களம், வனஜீவராசிகள் திணைக்களம் மற்றும் தொல்பொருள் திணைக்களம் ஆகிய அரச நிறுவனங்களின் வசமுள்ள காணிகளை மக்களுக்கு விடுவிக்க நடவடிக்கை எடுக்குமாறு ஈ.பி.டி.பி.…

141 0 0
இலங்கை செய்திகள்

மழையை நம்பி மேற்கொள்ளப்பட்ட காலபோக நெற்ச்செய்கை மழையின்மையால் பாதிப்பு

கிளிநொச்சி மாவட்டத்தில் 2026 /.2027 ஆம் ஆண்டுக்கான பெரும் போகநெற்செய்கை கொள்ளப்பட்டுள்ள நிலையில் கிளிநொச்சி நெத்தலியாறு பகுதியில் மழையை நம்பி நெற்செய்கை மேற்கொண்ட விவசாயிகள் பாதிக்கப்பட்டுள்ளனர். விவசாய…

138 0 0