உள்ளடக்கத்திற்குச் செல்க
நவம்பர் 2026
21 சனி
4210 பேர் இப்போது பார்க்கின்றனர்

பயத்தால் ஆண் வேடமிட்டு பயிற்சி – வெள்ளிப்பதக்கம் வென்ற ஆப்கானிஸ்தான் வீராங்கனை

144 பார்வைகள்

ஆசிய விளையாட்டு போட்டிகளில் வெள்ளிப்பதக்கம் வென்ற ஆப்கானிஸ்தான் வீராங்கனை ஃபரிபா ஹாஷிமி, பழமைவாத சூழல் காரணமாக ஆண் வேடமிட்டு பயிற்சி மேற்கொண்டதாக தெரிவித்துள்ளார்.

வெள்ளிப்பதக்கம் வென்ற ஆப்கானிஸ்தான் வீராங்கனை
20வது ஆசிய விளையாட்டு போட்டி ஜப்பானின் ஐச்சி-நகோயா மாகாணத்தில் செப்டம்பர் 19 ஆம் திகதி தொடங்கி நடைபெற்று வருகிறது.

இதில், பெண்களுக்கான தனிநபர் சாலைப் பந்தயத்தில் ஃபரிபா ஹாஷிமி(Fariba Hashimi) வெள்ளிப் பதக்கம் வென்றுள்ளார்.

இதன் மூலம், 2002 ஆம் ஆண்டிற்கு பிறகு ஆசிய விளையாட்டு போட்டிகளில் பதக்கம் வெல்லும் முதல் ஆப்கானிஸ்தான் வீராங்கனை என்ற பெருமையை ஃபரிபா ஹாஷிமி பெற்றுள்ளார்.

தற்போது 23 வயதான ஹஷிமி, 9 ஆண்டுகளுக்கு முன்பு அதாவது 2017 ஆம் ஆண்டில் தான் முதன்முறையாக சைக்கிள் ஒட்டக் கற்றுக்கொண்டுள்ளார்.

அவர் தன் அக்கா யுல்துஸ் ஹாஷிமியுடன் சேர்ந்து , ஃபர்யாப் பகுதியில் நடக்கவிருந்த ஒரு பந்தயத்திற்கான விளம்பரத்தைப் பார்த்தாள்.

அதன் பின்னர், பக்கத்து வீட்டில் உள்ளவர்களின் சைக்கிளை இரவல் வாங்கி, சைக்கிள் ஓட்ட பயிற்சி எடுத்துள்ளனர்.

ஆப்கானிஸ்தானில் நிலவிய பழமைவாதச் சூழலால் பெண்கள் போட்டிகளில் பங்கேற்க எதிர்ப்பு எழும் என்பதால், தலைமுக்காடுகள், முகமூடிகள் மற்றும் சூரியக்கண்ணாடிகள் ஆண் போல் மாறுவேடமிட்டு ஃபரிபா முதலிடத்தைப் பிடித்தார். அவரது அக்கா யுல்தூஸ் இரண்டாமிடத்தை பிடித்தார்.

அதை தொடர்ந்து அவர்களுக்கு சைக்கிள் மீதான ஆர்வம் அதிகரித்தாலும் உள்ளூர் மக்களின் எதிர்ப்பு காரணமாக போலியான ஆண் பெயர்கள் மற்றும் ஆடைகள் என ஆண் வேடமிட்டே தங்கள் அடையாளங்களை மறைத்து, அப்பகுதியில் இரகசியமாகப் பந்தயங்களில் ஈடுபட்டு வந்தனர்.

மக்கள் அவர்களை கண்டறிந்த பின்னர், ரயிலில் செல்லும் போது கற்கள் மற்றும் பாட்டில்களை வீசி தாக்குதல் நடந்துள்ளது.

2020 ஆம் ஆண்டில், அந்தச் சகோதரிகளின் விடாமுயற்சியையும் திறமையையும் அங்கீகரிக்கும் விதமாக, ஆப்கானிஸ்தானின் தேசிய மகளிர் சைக்கிள் ஓட்ட அணி, அவர்களைத் தங்கள் அணியில் சேர அழைப்பு விடுத்தது.

ஆனால், 2021 ஆம் ஆண்டில் தலிபான்கள் ஆப்கானிஸ்தானில் ஆட்சியை கைப்பற்றிய பின்னர் நிலைமை தீவிரமடைந்து பெண்கள் மீது கடுமையான அடக்குமுறை செலுத்தப்பட்டது.

அந்தச் சகோதரிகள் சைக்கிள் ஓட்டுதலில் கொண்டிருந்த ஈடுபாடு, இத்தாலிய ஒலிம்பிக் வீராங்கனையான அலெஸாண்ட்ரா கேப்பெல்லோட்டோவுடன் அவர்களுக்கு ஒரு பிணைப்பை ஏற்படுத்தியது.

அவரின் உதவியுடன் இருவரும் ஆப்கானிஸ்தானிலிருந்து தப்பி இத்தாலிக்கு சென்றனர்.

இத்தாலியில், இரு சகோதரிகளுக்கும் ஒலிம்பிக் கல்வி உதவித்தொகை வழங்கப்பட்டு, அதன் மூலம் அவர்களுக்கு நிதி மற்றும் தொழில்நுட்பப் பயிற்சி உதவிகள் கிடைத்தன.

பாரிஸ் 2024 ஒலிம்பிக்கில், ஆப்கானிஸ்தான் கொடியின் கீழ் போட்டியிட்ட 6 விளையாட்டு வீரர்களில், ஃபரிபாவும் யுல்தூஸும் இருவர் ஆவர்.

இது குறித்து பேசிய ஃபரிபா ஹாஷிமி, “அடுத்த தலைமுறை நாட்டை விட்டுத் தப்பிச் செல்வதையும் நான் விரும்பவில்லை. அடுத்த தலைமுறையினர் நாட்டிலிருந்தே வந்து ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் போட்டியிட்டு, உலகைச் சுற்றிப் பார்த்து, பதக்கங்களை வெல்லும் வகையில் ஏதேனும் மாற்றம் ஏற்படும் என்று நான் நம்புகிறேன்” என தெரிவித்துள்ளார்.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

விளம்பரம்

தொடர்புடைய செய்திகள் NEW

விளையாட்டுச் செய்திகள்

3ஆம் நாள் ஆட்டம் நிறைவு: இலங்கை அணி 82 ஓட்டங்களால் முன்னிலை!

பாகிஸ்தானின் ராவல்பிண்டியில் நடைபெற்று வரும் இரண்டாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியின் மூன்றாம் நாள் ஆட்டநேர முடிவில், இலங்கை அணி தனது இரண்டாவது இன்னிங்ஸில் 9 விக்கெட்டுகளை இழந்து…

122 0 0
விளையாட்டுச் செய்திகள்

கால்பந்து வரலாற்றில் சர்வதேச மைல்கல்லைப் பதித்த டி.எப். சூடீன்!

90 ஆண்டுகளுக்கும் மேலான பெருமைமிக்க வரலாற்றைக் கொண்ட நுவரெலியா கால்பந்து விளையாட்டுத் துறையில், இதுவரை எட்டப்படாத ஒரு சர்வதேச மைல்கல்லை நிலைநாட்டி, நுவரெலியா கால்பந்து சங்கத்தின் கீழ்…

127 0 0
விளையாட்டுச் செய்திகள்

பங்களாதேஷ் விக்கெட் கீப்பர் லிட்டன்தாஸ் உலக சாதனை!

தென் ஆப்பிரிக்கா – பங்காளதேஷ் அணிகள் மோதும் முதல் டெஸ்ட் கிரிக்கெட் போட்டி ஜோகன்னஸ்பர்க்கில் நடைபெற்று வருகிறது. பங்காளதேஷ் முதல் இன்னிங்சில் 400 ஓட்டங்களை குவித்தது. இதற்கு…

152 0 0
விளையாட்டுச் செய்திகள்

மெதுவான பந்துவீச்சு : இலங்கை, பாகிஸ்தான் அணிகளுக்கு அபராதம்

ராவல்பிண்டியில் நடைபெற்ற முதலாவது டெஸ்ட் போட்டியில் மெதுவாகப் பந்து வீசிய குற்றச்சாட்டில் இலங்கை மற்றும் பாகிஸ்தான் அணிகளுக்கு சர்வதேச கிரிக்கெட் பேரவை அபராதம் விதித்துள்ளது. இதற்கமைய, பாகிஸ்தான்…

92 0 0